துணிந்து செய்யலாம்..! அதிகம் லாபம் கிடைக்கும் தொழில் இதுவே..!

Advertisement

முதலீடு செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்

ஹலோ நேயர்களே..! பள்ளிக்கூடத்தில் புத்தகம் படிப்பது போல் இல்லாமல் உங்களுடைய ஒரு நண்பனாக இந்த தொழிலை பற்றி சொல்ல போகிறோம். பொதுவாக படித்த படிப்பர்களுக்கு ஏற்ற வேலையை யார் பார்க்கிறார்கள் என்று ஒரு கணக்கு எடுத்தால் நூற்றில் 50% சதவிகிதம் நபர்கள் மட்டும் தான் படித்த படிப்பிற்கு வேலைக்கு செல்வார்கள். அதனால் படித்த வேலையை தேடாமல் நமக்கான வேலையை நாமே உருவாக்கிக்கொள்ளவும். வாங்க நல்ல வருமானம் வரக்கூடிய தொழிலை பற்றி தெரிந்துகொள்வோம்.

வருமானம் தரக்கூடிய தொழில்கள்:

ஒரு சிலருக்கு என்ன வேலைக்கு செல்லவேண்டும், நமக்கான தொழில் என்ன  என்று நிறைய விதமான கேள்விகளை உங்களுக்குள் மட்டுமே கேட்டுக்கொண்டு சிலர் இருக்கிறார்கள். இன்னும் சிலர் முதலீடு  போட்டு சொந்த தொழிலை ஆரம்பம் செய்வோமா..? என்று என பலவகையான கேள்விகளை யோசித்துக்கொண்டு இருப்பார்களே தவிர அதற்கு ஒரு அடிகளை கூட எடுக்கமாட்டிர்கள். அப்படி யோசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவில் சொல்ல கூடிய தொழிலை துணிந்து செய்து பாருங்கள் உங்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் ஏற்படாது.

Flex Printing Business Ideas in Tamil:

  • இந்த Flex பிரின்ட்டிங் தொழில் என்பது இப்போது இருக்கின்ற காலகட்டத்தில்  முக்கியமான தொழில்களில் இதுவும் ஒன்று.
  • இந்த தொழிலுக்கு முதலீடு செய்யும் தொகையை கண்டிப்பாக ஒரு 6 மாதத்தில் எடுத்துவிடலாம்.

இந்த தொழிலுக்கு தேவையானவை:

flex printing machine in tamil

முக்கியமானது flex printing machine இதனுடைய விலை 6,50,000/- அதன் பிறகு இதற்கு தேவையான பொருட்கள் ஒரு 50,000/- ஆயிரம் தேவைப்படும்.

இந்த தொழிலுக்கு மொத்தமாக முதலீடு செய்ய போகிறது 7,00,000/- ரூபாய் ஆகும். இது முதல் தடவை மட்டும் செய்தால் போதுமானது. ஆகவே தொழிலுக்கு தேவையானவை டிசைன், கிரியேட்டிவிட்டி போதுமானது அதுமட்டுமில்லாமல் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

flex printing machine in tamil

இந்த தொழில் ஆரம்பிக்கும் இடமானது எவ்வளவு இருக்க வேண்டும் என்றால் 500 சதுர அடி இருந்தால் போதுமானது. கடை கூட்டம் கூடும் இடமாக இருந்தால் யாருக்கும் விளம்பரபடுத்த தேவையில்லை அதுமட்டுமில்லாமல் கடைத்தெருக்களில் இருந்தால் நல்லது.

உங்களுக்கு கணினி இயக்க தெரியவில்லை என்றால் இயக்க தெரிந்த ஆட்களை வேலைக்கு வைத்துக்கொள்வது நல்லது.

flex sheet in tamil

இப்போது மாதம் மாதம் எவ்வளவு செலவுகள் என்றால் flex sheet எவ்வளவு என்றால் அதனுடைய ஒரு சதுர அடி 3 விதம் நமக்கு தேவையான அளவு அதாவது 800 சதுர அடி வாங்கிக்கொள்ளவும்.

flex sheet ink

அதன் பின் பிரிட்டிங் செய்வதற்கு இங்க்(ink) தேவைப்படும் அதனுடைய விலை 450/- ரூபாய் நமக்கு நான்கு வித்தியாசமான கலர்களில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

இதனை அனைத்தைவைத்து இயக்க தெரிந்த ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டும். தொழில் ஆரம்பிக்கும் இடம் சொந்தகமாக இருந்தால் அதுவும் உங்களுக்கு நன்மை தான்.

வாழ்த்து மடல்

உங்களுடைய கடையில் அனைத்தும் மற்ற கடைகளை விட நன்றாக இருந்தால். உங்களை தேடி வந்து ஆர்டர் கொடுப்பார்கள். இப்போது இந்த கடைகளில் தான் கூடம் அலைமோதுகிறது. அதுபோல் திருமணத்திற்கு கொடுக்கப்படும் வாழ்த்துமடல் போன்றவற்றை தயார் செய்யலாம்.

10,000 முதலீட்டில் தொழில் தொடங்கி நீங்களும் தினமும் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement