Garlic Peeling Business in Tamil
ஹாய் நண்பர்களே..! நம்மில் சிலருக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தொழில் தொடங்குவது அதனை எவ்வாறு தொடங்குவது போன்ற கேள்விகள் நிறைய இருக்கும். அப்படி உங்கள் மனதில் உள்ள கேள்விக்கெல்லாம் இன்றைய பதிவு ஒரு சிறந்த தீர்வாக அமையும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பூண்டு தோல் உரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் படியுங்கள்=> 200 ரூபாய் முதலீட்டில் தினமும் 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்..!
How to Start Garlic Peeling Business in Tamil:
பூண்டு என்பது உணவில் சேர்க்கப்படும் இன்றியமையாத பொருட்களில் ஒன்று. ஆனால் இந்த பூண்டின் தோலை உரிப்பது என்பது மிகப்பெரிய வேலையாக இருக்கும். அதனால் நாம் இந்த பூண்டு தோல் உரிக்கும் தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் பெறலாம்.
மூலப்பொருள் மற்றும் முதலீடு:
இந்த பூண்டுதோல் உரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பூண்டு மற்றும் Garlic Peeling Machine ஆகியவையே ஆகும்.
மேலும் இந்த மிஷினை பயன்படுத்தி ஒரு முறைக்கு 5 – 10 கிலோ வரைக்கும் பூண்டின் தோலை உரிக்க முடியும். இந்த மிஷினின் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 10,000 ஆகும்.
இந்த தொழில் செய்வதற்கென்று தனியாக இடம் தேவையில்லை உங்கள் வீட்டிலே சிறிய இடம் இருந்தால் போதும்.
தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் முறை:
முதலில் நாம் வாங்கிவைத்துள்ள பூண்டுகளை Garlic Peeling Machine-னை பயன்படுத்தி அவற்றின் தோல்களை நன்கு உரித்துகொள்ளுங்கள். பின்னர் தோல் உரிக்கப்பட்ட பூண்டுகளை பேக் செய்து விடுங்கள்.
உங்கள் ஊரில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் தோராயமாக 1 கிலோ 90 ரூபாய் – 100 ரூபாய் வரை விற்கலாம். நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 30 கிலோ உரிக்கப்பட்ட பூண்டினை விற்பனை செய்தால் தோராயமாக 2,700 – 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |