High Profitable Business Ideas in Tamil
பொதுவாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருடைய மனதிலும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காலத்து நபர்கள் அனைவரும் எப்படியாவது தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றர். இத்தகைய சூழ்நிலையில் நாம் யாரிடமாவது தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து உதவி கேட்டால் அதற்கான சரியான பதில் நமக்கு கிடைக்காது. சரி வேறு எப்படி தொழில் செய்வதற்கான தகவலை பெறுவது என்று ஒரு குழப்பம் நமக்குள் வந்து விடும். ஆகவே உங்களுக்கு பயனளிக்கும் வகையில் தினமும் ஒவ்வொரு வகையான வியாபாரம் தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்றும் உங்களுக்கு பயனுள்ள ஒரு தகவலை தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
அதிக லாபம் தரும் தொழில்:
உடலுக்கும் சமையலுக்கும் அதிகளவு பயன்படக்கூடிய Groundnut Oil Business பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
தேவையான முதலீடு:
Groundnut Oil Business-ஐ நீங்கள் செய்ய வேண்டும் என்றால் தோராயமாக 20,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
தேவையான மூலப்பொருள்:
- கடலை
- Groundnut Oil Making Machine
மேலும் நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு முன்பாக FSSAI லைசென்ஸ் கண்டிப்பாக பெற்றுருக்க வேண்டும்.
தேவையான இடம்:
நீங்கள் Groundnut Oil தொழிலை செய்ய வேண்டும் என்றால் ஒரு பெரிய அளவிலான தேவைப்படும்.
இதையும் படியுங்கள்⇒ ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம்
தொழில் தொடங்குவது எப்படி.?
முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள கடலையினை தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கடலையை வெயிலில் 2 நாட்கள் வரை காய வைக்க வேண்டும்.
அதன் பின்பு அந்த கடலையை மிஷினில் போட்டு மிஷினை On செய்தால் போதும் உங்களுக்கு சுத்தமான கடலை எண்ணெய் கிடைத்து விடும்.
இதே போல உங்களுக்கு வேண்டும் அளவிற்கு தேவையான அளவு கடலை எண்ணெய் தயாரித்து கொள்ள வேண்டும்.
பேக்கிங் செய்தல்:
தயார் செய்து வைத்துள்ள கடலை எண்ணெயை 1/2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் என பேக்கிங் செய்து தனித்தனியாக வைத்து விடுங்கள்.
விற்பனை செய்தல்:
1/2 லிட்டர் கடலை எண்ணெயின் விலை 100 ரூபாய் என்றும் மற்றும் 1 லிட்டர் கடலை எண்ணெயின் விலை 200 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது.
அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 1/2 லிட்டர் பாக்கெட்டில் 20-ம் மற்றும் 1 லிட்டர் பாக்கெட்டில் 20-ம் விற்பனை செய்தால் தோராயமாக 6,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
தொடர்ச்சியாக நீங்கள் இதனை போல விற்பனை செய்தீர்கள் என்றால் ஒரு மாதத்திற்கு 1,80,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
விற்பனை செய்ய வேண்டிய இடம்:
பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, ஷாப்பிங் மால், Wholesale கடை, Department ஸ்டோர், ஹோட்டல் மற்றும் Restaurants ஆகிய இடங்களில் தயார் செய்து வைத்துள்ள கடலை எண்ணெயை நீங்கள் விற்பனை செய்து நல்ல லாபம் மற்றும் வருமானம் இரண்டையும் பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒லட்சக்கணக்கில் சம்பாதிக்க இந்த தொழில் ஒன்று போதும்…! காலத்திற்கும் நிலைத்து நிற்கும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |