Zero Investment Business Ideas
பொதுவாக தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முதலீடு மற்றும் மூலப்பொருள் வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. ஆனால் இவை இரண்டும் நிறைய நபர்களிடம் இல்லாத காரணத்தினால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதேயே மறந்து விடுகிறார்கள். அதனால் தான் முதலீடு எதுவும் இல்லாமல் வீட்டில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை வைத்து எப்படி தொழில் தொடங்குவது என்று தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள தொழிலுக்கான டிமாண்ட் என்று பார்த்தால் அதனை நாம் கணக்கில் கொள்ள முடியாது. எனவே முதலீடு இல்லாத இந்த தொழிலை எப்படி செய்வது மற்றும் எப்படி அதனை தயாரித்து விற்பனை செய்வது என்பது பற்றியும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சிறு தொழில்:
அனைவருடைய வீட்டிலும் செம்பருத்தி பூ மரம் இருக்கும். அத்தகைய செம்பருத்தி பூ மரத்தில் எண்ணற்ற பயன்கள் உள்ளது. முடி வளர்ச்சி, இதய நோய், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், உடலில் ஏற்படும் சூடு, வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல பலனை அளிக்க கூடியதாக உள்ளது.
ஆகவே இன்றைய பதிவில் Hibiscus Flower Powder Business-ஐ செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு அதில் எப்படி நிறைய லாபம் பெறுவது என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
தொழில் தொடங்க தேவையான இடம்:
இந்த தொழிலை தொடங்க உங்களுடைய வீட்டில் ஒரு சிறிய பகுதியில் வெறும் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும். உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு வேண்டும் என்றால் கடை தனியாக அமைத்து கொள்ளலாம்.
தொழில் தொடங்க தேவையான மூலப்பொருள்:
- செம்பருத்தி பூ- 3 கிலோ
- மிக்சி
மேலும் இந்த தொழிலை செய்வதற்கு Gst Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை இப்போதே ஆரம்பித்தால் எதிர்காலத்தில் நீங்கள் தான் Boss.. என்றும் கைகொடுக்கும் நிரந்தரமான தொழில்
How to Start Hibiscus Powder Business:
முதலில் உங்களுடைய வீட்டில் இருக்கும் செம்பருத்தி பூக்களை எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த செம்பருத்தி பூக்களை தண்ணீரில் லேசாகவும் மற்றும் சுத்தமாகவும் அலசி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த பூக்களின் ஒவ்வொரு இதழையும் பிரித்து தனி தனியாக காய வைத்து விடுங்கள். இந்த பூக்கள் 2 அல்லது 3 நாட்கள் வரை காய வைக்க வேண்டும்.
3 நாட்கள் கழித்த பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல நைசாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள பவுடரை நன்றாக சலித்து வைத்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் நீங்கள் தொழில் செய்வதற்கு இப்போது பவுடர் தயார் ஆகிவிட்டது.
பேக்கிங் செய்தல்:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Hibiscus Flower Powder-ஐ Zip Louck பவுச்சில் 100 கிராம், 1/2 கிலோ மற்றும் 1 கிலோ என பேக்கிங் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பவுடரை மெடிக்கல் ஷாப், பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, ஷாப்பிங் மால் மற்றும் Department ஸ்டோர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.
இதையும் படியுங்கள்⇒ முதலீடே இல்லாமல் தொழில் செய்யலாமா ஆச்சரியமா இருக்கே.. சும்மா செஞ்சு பாருங்க அதுல அவ்ளோ லாபம் வரும்..
வருமானம்:
Hibiscus Flower Powder 100 கிராமின் விலை 79 ரூபாய் என்றும், 1/2 கிலோவின் விலை 395 ரூபாய் என்றும் மற்றும் 1 கிலோவின் விலை 790 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆகையால் நீங்கள் ஒரு நாளைக்கு மூன்றிலும் 5 பாக்கெட்டுகள் விற்பனை செய்தால் தோராயமாக 6,320 ரூபாய் வருமானம் பெறலாம். இதனை போலவே நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 44,240 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |