Home Based Business Ideas in Tamil
வணக்கம் நண்பர்களே நாமளும் தொழில் தொடங்கலாம். வெறும் 5000 ரூபாய் முதலீட்டில். இந்த உலகில் பல வகையான தொழில்கள் இருக்கிறது அவற்றில் ஏதாவது ஒன்றை தொடங்கினாலே நமது வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். குறிப்பாக ஒரு பொருளை நாம் குறைந்த விலைக்கு வாங்கி அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது தான் மூலம் நாம் நல்ல வருமானத்தை பெற முடியும். அவ்வாறு மதிப்பு கூட்டி செய்ய கூடிய தொழில்களில் இன்று தான் டொமேடோ பவுடர் (Tomato Powder) தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் ஆகும். இந்த தொழிலை ஆண், பெண் இருவருமே செய்யலாம் நல்ல வருமானம் கிடைக்கும். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், எங்கு ஆரம்பிக்கலாம், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும், எவ்வளவு முதலீடு தேவைப்படும் போன்ற விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இடம்:
இந்த Tomato Powder தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களிடம் தனியாக இடம் இருக்கிறது என்றால் அங்கு Tomato Powder தயார் செய்து விற்பனை செய்யுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 1000 ரூபாய் கிடைக்கும் அருமையாக தொழில்..!
மூலப்பொருள்:
தக்காளி, பேக்கிங் கவர், பேக்கிங் மிசின் இந்த மூன்று பொருட்களும் தேவைப்படும்.
இயந்திரம்:
இந்த தொழில் தொடங்க ஆரம்பத்தில் மிக்சியை பயன்படுத்தி கொள்ளுங்கள், தொழில் நன்கு சூடுபிடித்து பிறகு ஒரு Pulverizer machine-ஐ வாங்கிக்கொள்ளவும். இதனுடைய ஆரம்ப விலை 15,000/- ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. பேக்கிங் மிசின் 1000 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.
முதலீடு:
இந்த தொழிலை தொடங்க குறைந்தபட்சம் 5000 ரூபாய் இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெறமுடியும்.
தயாரிப்பு:
தக்காளியை மொத்தமாக வாங்கி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக காயவைத்து தண்ணீர் நன்கு வற்றி, வற்றல் போல் தாக்களில் நன்கு காய்ந்து வந்ததும். அதனை மிக்சியில் அரைத்து பவுடர் போல் ஆக்கிக்கொள்ளவும். பிறகு அதனை 50 கிராம், 100 கிராம், 250 கிராம் என்று பேக்கிங் செய்து விற்பனை அனுப்பவும்.
சந்தை வாய்ப்பு:
மளிகை கடை, டிபாட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இது தவறி நீங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யலாம். மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.
தேவைப்படும் சான்றிதழ்:
- எந்த ஒரு உணவு சார்ந்த பொருட்களை விற்பனை செய்தாலும் அதற்கு நீங்கள் FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- ஆன்லைனில் விற்பனை செய்வதாக இருந்தால்.. GST Registration செய்திருக்க வேண்டும்.
- வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் ஏற்றுமதி உரிமம் பெற வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே ஒரு லிட்டர் விற்பனை செய்தால் மட்டும் போதும் 18,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
வருமானம்:
ஒரு கிலோ தக்காளி பவுடர் சந்தையில் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. ஆக இந்த ஒரு கிலோ தக்காளியில் 100 கிராம் தக்காளி பவுடர் தயார் செய்யலாம். ஒரு கிலோ தக்காளியின் விலை 20 ரூபாய் ஆகும். ஒரு கிலோ தக்காளி பவுடர் செய்ய நமக்கு 10 கிலோ தக்காளி தேவைப்படும். அதற்கான செலவு 200 ரூபாய். பேக்கிங் செலவு உட்பட அனைத்தும் சேர்த்து உற்பத்தி செலவு 300 ரூபாய் போக நமக்கு ஒருகிலோ தக்காளி பவுடரில் இருந்து 400 ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஒரு நாளுக்கு 10 கிலோ தக்காளி பவுடர் விற்பனை செய்தோம் என்றாலும் கூட நமக்கு 4000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். மாதம் 1 லட்சத்திற்கு மேல் லாபம் பெற முடியும்.
இந்த தொழில் உங்களுக்கு ஏற்ற தொழிலாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறவும் .நன்றி வணக்கம்🙏
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |