உங்க கையில் 1000 ரூபாய் இருந்தாலே போதும் நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்..!

Advertisement

Homemade Snacks Shop Business Plan in Tamil

இன்றைய கால கட்டத்தில் பணம் தான் அனைத்தும் என்றாகி விட்டது அதனால் அனைவரின் மனதிலேயும் நாம் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. அதனால் தான் நம்மில் பலரும் ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்கி கடினமாக உழைக்க தயாராகி விட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் Homemade Snacks Shop தொழில் தான். இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து கொள்ளுங்கள்.

Homemade Snacks Shop Business in Tamil:

Homemade Snacks Shop Business in Tamil

இந்த உலகில் ஒரு சில தொழில்களுக்கு எப்பொழுதுமே டிமாண்ட் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சில தொழில்களில் இந்த தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும் ஒன்று.

இந்த தொழிலை நம்பி தொடங்கியவர்கள் என்றும் நஷ்டத்தை சந்தித்ததே கிடையாது. அதனால் நீங்களும் இந்த தொழிலை தொடங்கி அதிக அளவு சம்பாதித்து கொள்ளுங்கள்.

தொழிலை எப்படி தொடங்குவது:

இந்த தொழிலை நீங்கள் இரண்டு முறையில் செய்யலாம். அதாவது நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய தள்ளுவண்டி கடையாக தொடங்கி இந்த தொழிலை செய்யலாம். அப்படி இல்லையென்றால் நிலையான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு கடையை திறந்தும் இந்த தொழிலை செய்யலாம். இதில் முதல் முறையை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

இந்த தொழிலை இரண்டு முறையில் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்

தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

இந்த தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் தின்பண்டங்கள் தான். நீங்கள் எந்த மாதிரியான தின்பண்டங்களை விற்பனை செய்ய போகின்றீர்களோ அதற்கேற்ற மாதிரி அதனை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மாறுபடும்.

அதே போல் நீங்கள் எந்த விதமான தின்பண்டங்களை விற்றாலும் அதற்கு தோராயமாக 1,000 ரூபாய் தான் முதலீடு தேவைப்படும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவு பொருள் சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் தங்கள் கண்டிப்பாக FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதே போல் இந்த தொழில் செய்வதற்கு உங்களுக்கு தோராயமாக சிறிய இடம் தான் தேவைப்படும். 

தொழில் செய்யும் முறை:

நீங்கள் தள்ளுவண்டியில் தின்பண்டங்களை விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்பு நீங்கள் அதிகமாக மக்கள் கூட்டம் உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது பள்ளி, கல்லூரி ஆகியவற்றுக்கு அருகில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

வருமானம்: 

நீங்கள் தள்ளுவண்டியில் தின்பண்டங்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் விற்கும் ஒவ்வொரு தின்பண்டங்களுக்கும் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து விற்றால் 1 மணி நேரத்துக்குள் 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை சம்பாதித்து விடலாம்.

அதனால் இந்த Homemade Snacks Shop தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

சும்மா கிடைக்கிற பொருளை பயன்படுத்தி வாரம் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement