ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி? | Export Business Ideas in Tamil

yetrumadhi order peruvadhu eppadi

ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி | Export Business Ideas in Tamil

Export Business Ideas in Tamil: ஏற்றுமதி என்பது நீங்கள் உற்பத்தி செய்த பொருளை மற்றொரு நாட்டிற்கு விற்பனை செய்வது. ஏற்றுமதி செய்ய தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் உற்பத்தி செய்யப்போகும் பொருள் அனைவரையும் ஈர்க்க கூடிய பொருளாக இருக்க வேண்டும். ஒரு பொருளை உற்பத்தி செய்ய திட்டமிடும் நிலையில் அதற்கான விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏற்றுமதி செய்யகூடிய பொருள் சூழலுக்கு பொருத்தமானதா என்பதை முன்னதாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். உற்பத்தி செய்யும் பொருளுக்கும் நிறுவனத்துக்கும் ஏற்ற பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்றுமதி செய்ய விரும்பும் வாசகர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்றுமதி தொழிலுக்கான DOCUMENTS என்ன தேவை?

How To Get Export Order in Tamil:

 • ஏற்றுமதி ஆர்டர் பெறுவதற்கு நீங்கள் www.go4worldbusiness.com என்ற இணையதளத்தை அணுகலாம். முதலில் நீங்கள் இதில் Member-ஆக சேர வேண்டும்.
 • Silver Membership, Gold Membership மற்றும் Junior Membership என்று இதில் மூன்று Membership உள்ளது. Silver Membership-ல் சேர்வதற்கு Rs.8000 மற்றும் Gold Membership-ல் சேர்வதற்கு Rs.16000 தேவைப்படும்.
 • ஒரு வேலை தங்கள் பொருள் 60 நாளாகியும் விற்பனை ஆகவில்லையெனில் பணத்தை Return செய்துவிடுவார்கள்.
 • Member-ஆக இருப்பதால் என்ன பயன் என்றால் உங்களது பொருளை வாங்குவதற்கான வாடிக்கையாளருடைய Details தருவார்கள் நீங்கள் அவர்களிடம் பேசி உங்களது பொருளை விற்பனை செய்து கொள்ளலாம்.
 • இந்த இணையத்தளத்தில் சிறந்த Membership ஆக Gold Membership கருதப்படுகிறது. ஏனென்றால் வாடிக்கையாளரின் அனைத்து விவரங்களையும் Gold Membership-ல் தருகிறார்கள். மற்ற Membership-ல் அந்த அளவிற்கு Facilitys இல்லை.

Export Business in Tamil – விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கான சில Websites:

 1. indiamart.com 
 2. trademap.org 
 3. exportsindia.com  
 4. tradeindia.com
 5. ec21.com

இந்த Website-ல் அக்கௌன்ட் create செய்தால் அதில் தங்களது பொருளை விற்பனை செய்யலாம். இதன் மூலம் வாடிக்கையாளர் உங்களை தொடர்புகொள்வார்கள்.

Export Business in Tamil – Tradeshow Export:

 • Tradeshow, Trade exhibition மற்றும் Expo மூலமும் தங்களது பொருளை ஏற்றுமதி செய்யலாம். இதற்கு தங்கள் tsnn.com என்ற இணையத்தளத்தை அணுகலாம்.
 • இதன் மூலம் Tradefair எங்கு நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொண்டு தங்களது பொருளை விளம்பரம் செய்து ஏற்றுமதி செய்யலாம்.
 • Tradeshow என்பது தொழில் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி பங்குதார்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திக்க நடத்தப்படும் ஒரு கண்காட்சி.

Digital Marketting:

 • தாங்கள் செய்யும் தொழிலின் பெயரில் ஒரு Website create செய்து பொருளை விளம்பரம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் உங்களை தொடர்புகொள்வார். அதன் மூலம் ஏற்றுமதி செய்யலாம்.

social network:

 • அதாவது Facebook,Twitter, Instagram, Linkedin இவற்றில் அக்கௌன்ட் create செய்து பொருளை விளம்பரம் செய்வதன் மூலம் வாடிக்கையாளரை நாம் கவரலாம்.

Export Promotion Council (EPC):

Export Promotion Council இதில் நீங்கள் Member-ஆவதன் மூலம்

 1. பொருட்களுக்கான மானியம்
 2. Meeting With Exporter and Importer
 3. Foreign Exhibition, Flight, Ticket Free  
 4. Draft a Letter of Indian Embassy the Commercial Officer                                 இதன் மூலம் வாடிக்கையாளரது விவரங்கள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதனுடைய தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள fieo.org, indiantradeportal.in மற்றும் commerce.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி:

வெளிநாட்டில் இருக்கும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்களுடைய Company Details மற்றும் Visiting Card மூலமும் வாடிக்கையாளரை அணுகலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil