முதலீடு கொஞ்சம் தான் ஆனால் லாபம் அதிகம் தரக்கூடிய சிறந்த தொழில்..!

Advertisement

Hotel Business in Tamil

இன்றைய நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் அனைவருக்கும் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. அதனால் பலரும் பல தொழில்களை சொந்தமாக தொடங்கி வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதுபோல பலபேர் வீட்டிலிருந்தே சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமா..? அப்போ இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How To Start Hotel Business in Tamil: 

How To Start Hotel Business

சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். எப்போதுமே இந்த தொழிலுக்கு அதிக Demand தான். இந்த உலகில் அனைவருக்கும் தேவைப்படுவது உணவு தான். அதனால் நீங்கள் சொந்தமாக ஒரு உணவகம் தொடங்கலாம்.

முதலில் உங்கள் கடையை திறப்பதற்கு திட்டமிட வேண்டும். இந்தத் தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. நீங்கள் தொடங்கும் உணவகம் சொந்த கடையாகவும் இருக்கலாம், வாடகைக் கடையாகவும் இருக்கலாம்.

அதுபோல தள்ளு வண்டியிலும் இந்த தொழிலை நீங்கள் தொடங்கலாம். நீங்கள் தொடங்கும் இந்த உணவகம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொடங்குவது நல்லது. அப்போது தான் மக்கள் அதிகம் உங்கள் கடையை நாடி வருவார்கள்.

உணவகம் தொடங்க நினைப்பவர்கள் குவாலிட்டி என்ற தரம், குவாண்டிட்டி என்ற அளவு, நீட்னஸ் என்ற சுத்தம், பிரைஸ் என்ற விலை ஆகிய நான்கு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நான்கு விஷயங்களை கவனத்தில் கொண்டால் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி.

நீங்கள் தொடங்கும் உணவகம் எப்பொழுதும் தூய்மையாகவும் காற்றோட்ட வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும். உங்கள் உணவகத்தில் வழங்கும் உணவுகள் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அதிகமாக உங்கள் கடைக்கு வருவார்கள்.

முதலீடு குறைவாக இருந்தால் போதும் மாதம் மாதம் நல்ல லாபம் கிடைக்கும்..!

உணவகம் தொடங்க முதலீடு:

How To Start Hotel Business

நீங்கள் தொடங்கும் உணவகம் சிறிய கடையாக இருந்தால் அதற்கு கடை வாடகை மற்றும் மற்ற செலவுகளை சேர்த்து 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். நீங்கள் தொடங்கும் கடையின் அளவை பொறுத்து முதலீடு மாறுபடும்.

உணவகம் தொடங்க ஆவணங்கள்:

  1. உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து உணவகம் திறக்க அனுமதி பெற வேண்டும்.
  2. வணிகக் காப்பீடு பெற வேண்டும்.
  3. ஹோட்டல் உரிமம் மற்றும் உணவு வழங்குவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  4. ஒரு தனிப்பட்ட தொழில்முனைவோர் அல்லது சட்ட நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  5. வர்த்தக காப்புரிமை மற்றும் SES -லிருந்து அறிவிப்பு பெற்றிருக்கவேண்டும்.
  6. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமம்.

எவ்வளவு லாபம் கிடைக்கும்..? 

Hotel Business

இந்த கடையை நீங்கள் மக்கள் அதிகம் உள்ள ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கோவில், பள்ளி மற்றும் மருத்துவமனை போன்ற பகுதிகளில் வைத்தால் தினமும் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த தொழிலுக்கு என்றுமே அழிவு கிடையாது. அதனால் நீங்கள் இந்த தொழிலை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தொடங்கலாம்.

இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement