ஒரு நாளுக்கு 1000 லாபம்.. 10×10 கூட இடம் வேண்டாம் வீட்டில் இருந்தே தொழில் தொடங்கலாம்..

Jam Making Business in Tamil

Jam Making Business in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டால், பெரிய லாபம் ஈட்டக்கூடிய தொழில் யோசனை ஒன்று இருக்கிறது. அதனை செய்தாலே நீங்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் குறைத்து 1000 ரூபாய் வரை வருமானத்தை பெற முடியும். அது குறித்த தகவல்களை பற்றி தான் நாம் இபொழுது பார்க்க போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் தெளிவாக பார்க்கலாம்.

ஜாம் தயாரிப்பு தொழில் – Jam Making Business in Tamil:

நீங்கள் வீட்டில் இருந்தபடியே நாள் வருமானத்தை பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஜாம் தயாரித்து விற்பனை செய்யலாம். பொதுவாக குழந்தைகள் ஜாம் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆக நீங்கள் உங்கள் ஊரிலேயே ஜாம் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பார்க்க முடியும். குறிப்பாக இதற்கு அதிக முதலீடு தேவைப்படாது. ஜாம் தயார் செய்வார்க்கு இயந்திரங்கள் இருக்கிறது. இருந்தாலும் அதற்கு 3 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய வேண்டியதாக இதுக்கும். இருந்தாலும் உங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்றாலும் கூட வீட்டிலேயே செய்து தினசரி 1000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

மூலப்பொருட்கள்:

ஜாம் தயார் செய்வதற்கு பழங்கள், சர்க்கரை, பேக்கிங் கவர், பாட்டில் இது போன்ற பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும்.

ஜாம் தயாரிக்கும் முறை:

ஜாம் தயாரிக்கும் முறை மிகவும் ஈஸிதாங்க 3 மாம்பழம், 1 நடுத்தர அளவிலான பப்பாளி, ஒரு அன்னாசி, 5 கொய்யாப்பழம் ஆகியவற்றை எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். மிக்சர் கிராண்டரின் உதவியுடன் அந்த பழங்களை ஜூஸாக மாற்ற வேண்டும். பழத்தின் ஜூஸை ஒரு பாத்திரத்தில் வைத்து சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்க்கவும். இதன்பின்னர் அதனை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதனுடன் 25 மில்லி பெக்டின் சேர்த்து, தொடர்ந்து கிளறியவாறு 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது கொதிப்பதை நிறுத்தி, அதில் 2 கிராம் பொட்டாசியம் மெட்டாபைசல்பைட் ப்ரிசர்வேடிவ்களை சேர்க்கவும். சிறிய அளவு தண்ணீர் சேர்த்த பிறகு, பாத்திரத்தை இறுக்கமாக மூடவும். ஜாம் ஆறியதும், அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு, அதை 500 மில்லி கண்ணாடி பாட்டில்களில் ஜாமை நிரப்பி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 1000 ரூபாய் முதலீட்டில் ஒரு நாளுக்கு 3000 ரூபாய் லாபம் தரும் புதிய தொழில்..! அதுவும் வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த தொழில் செய்யலாம்..!

பேக்கிங் முறை:

நீங்கள் தயார் செய்த ஜாமை சிறு சிறு பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்யலாம், அல்லது கண்ணடி பாட்டிலில் நிரப்பியும் விற்பனைக்கு அனுப்பலாம். அதிலும் பேக்கிங் செய்யும்போது 50 கிராம், 100 கிராம், 500 கிராம் என்று பேக்கிங் செய்து அதற்கான விலையையும் செட் செய்து கொள்ளுங்கள்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த ஜாமை உங்கள் ஊரில் உள்ள பேக்கரி, ஹோட்டல், ரெஸ்ட்டாரண்ட், மளிகை கடை, டிபாட்மென்ட் ஸ்டோர் போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.

வருமானம்: 

ஒரு கிலோ ஜாம் தயார் செய்ய உங்களுக்கு 500 ரூபாய் செலவு ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். கடைகளில் 100 கிராம் ஜாம் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆக ஒரு நாளுக்கு ஒரு கிலோ ஜாமை விற்பனை செய்துவிட்டால் உங்களுக்கு 1500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். 500 ரூபாய் செலவுகள் போக உங்களுக்கு 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2023