பெண்கள் உங்கள் வீட்டில் இருந்து வாரம் 20,000 சம்பாதிக்கலாம்..!

Advertisement

Ladies Business Ideas in Tamil

வணக்கம் நண்பர்களே.. புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். பெண்களே உங்கள் வீட்டில் இருந்தபடியே வாரம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போறோம். அதுவும் இந்த தொழில் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். அப்படி என்ன தொழில் என்றுதானே யோசிக்கிறீங்க. அதை தெரிஞ்சிக்க இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

பெண்கள் உங்கள் வீட்டில் இருந்து வாரம் 20,000 சம்பாதிக்கலாம்..!

Ladies Business Ideas in Tamil:- நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில் பலவகையான மூலிகை செடிகள் உள்ளது. அவை அனைத்துமே ஒவ்வொரு வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது. ஆக நாம் மூலிகை செடிகளை நன்கு காயவைத்து அதனை பொடி செய்து. சிறு சிறு எம்டி கேப்சியுளில் அடைத்து அவற்றை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அதாவது இத்தகைய மூலிகை மாத்திரைகளுக்கு சந்தியில் அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பக வெளிநாடுகளில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. சரி இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம். எதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதற்கு என்னென்ன சான்றிதழ் தேவைப்படும், இதன் மூலம் எவ்வளவு வருமான கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

முதலீடு:

இந்த தொழிலுக்கு முதலீடு என்று அதிகளவு இருக்காது குறைந்தபட்சம் 5 ரூபாய் இருந்தால் போதும் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு மூலம் பொருட்கள் என்றால் மூலிகை செடிகள் தான். ஆக உங்கள் ஊரில் என்னென்ன மூலிகை செடிகள் கிடைக்கின்றதோ அவற்றை பறித்து சுத்தம் செய்து. நிழலில் நன்கு காயவைத்து, பொடி செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் ஊரில் தூதுவளை, துளசி, முடக்கத்தான் இது போன்ற மூலிகை செடிகள் கிடைக்கும் என்றால் அவற்றை காயவைத்து பொடி செய்த்து. மாத்திரைகளாக தயார் செய்து விற்பனை செய்யலாம்.

தேவைப்படும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள்:

மூலிகை பொடிகளை மாத்திரைகலையாக பேக்கிங் செய்வதற்கு Empty capsule தேவைப்படும். இந்த Empty capsule சந்தைகளில் கிடைக்கின்றது. முன்னூறு ரூபாயில் இருந்து கிடைக்கிறது. ஆக உங்களுக்கு எந்த சைசில் வேண்டுமே அந்த சைசில் Empty capsule-ஐ வாங்கி கொள்ளுங்கள். பிறகு capsule-ஐ fill செய்வதற்கு capsule fill machine-யின் தேவைப்படும். இந்த மிஷின் கூட ஆன்லைனில் கிடைக்கிறது.

உங்களுக்கு capsule-யில் அடைத்து விற்பனை செய்ய விருப்பம் இல்லை என்றால். அதனை வெறும் பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

தேவைப்படும் சான்றிதழ்:

நாம் உணவு சார்ந்த தொழிலை செய்கிறோம் என்றால் கண்டிப்பா நம்மிடம் FSSAI certificate இருக்க வேண்டும். ஆக இதுவும் உணவு சார்ந்த தொழில் என்பதால் நீங்கள் FSSAI certificate கண்டிப்பாக வாங்கிவிட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👉👉 பெண்கள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க அற்புதமான தொழில்கள்..!

வருமானம்:

100 கிராம் மூலிகை பொடிகளை தயார் செய்வதற்கு நமக்கு வெறும் 30 ரூபாய் மட்டும் தான் செலவு ஆகும். ஆனால் நீங்கள் இந்த 100 கிராம் மூலிகை செடியை சந்தியில் 200 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும்.

ஒரு கிலோ மூலிகை பொருட்களை தயார் செய்வதற்கு 300 ரூபாய் தான் செலவு ஆகும். ஆனால் நீங்கள் 1 கிலோ மூலிகை செடியை 2000 ரூபாய் வரை சந்தைகளில் விற்பனை செய்யலாம். வாரத்தில் 20 கிலோ மூலிகை பொடிகளை தயார் செய்து விற்பனை செய்தலே உங்களால் 20,000/- வரை வருமானம் பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement