15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில் (Low budget business)..!

Advertisement

15,000/- குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்..!

குறைந்த முதலீட்டில் தொழில்:- இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான ஒரு புதிய தொழில் பற்றிய ஆலோசனைகளை  தெரிந்து கொள்ள போகிறோம். எனவே புதிதாக தொழில் துவங்க நினைக்கும் தொழில் முனைவோர்களுக்கு இது ஒரு சிறந்த பதிவாக இருக்கும். அதாவது குறைந்த முதலீட்டில் (low budget business) வீட்டில் இருந்தபடியே செய்ய கொடிய Badges தயாரிப்பு தொழில் பற்றித்தான் இங்கு தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது Flag & Company Badges போன்றவற்றை நம் வீட்டிலேயே தயார் செய்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக நாம் விற்பனை செய்து நல்ல வருமானத்தை பார்க்கலாம். போட்டியில்லாத புதுமையான சுயதொழில் என்பதால் இப்போதே வீட்டில் இருந்தபடியே துவங்குங்கள்..

சிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி?

இப்பொழுது இந்த சுயதொழில் பற்றிய ஆலோசனைகளை தெரிந்து கொள்வோம் வாங்க…

குறைந்த முதலீட்டில் சுயதொழில்..!

கட்டிட அமைப்பு:

குறைந்த முதலீட்டில் தொழில் – வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய ஒரு சிறந்த சுயதொழில் என்பதால் உங்கள் வீட்டில் ஒரு சிறிய ரூம் இருந்தால் போதும்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

Blank pin badge & key chain blank badge, ஷ்டிகர் பிரிண்டிங் இயந்திரம், மற்றும் பிளாஸ்ட்டிக் கவர் (இது Badge மீது ஏதேனும் கீறல் விழாமல் இருப்பதற்காக பயன்படுத்த படுகிறது)

இந்த மூல பொருட்கள் அனைத்தும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கின்றது. எனவே அங்கு ஆடர் செய்தும் இந்த இயந்திரத்தை பெற்று கொள்ளலாம்.

இயந்திரம்:-

  • Badge making machine.

இந்த இயந்திரம் 3,500/- முதல் 35,000/- வரை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் மிக குறைந்த விலைகளில் கிடைக்கின்றது. எனவே அங்கு ஆடர் செய்தும் இந்த இயந்திரத்தை பெற்று கொள்ளலாம்.

dir.indiamart.com

முதலீடு:-

குறைந்த முதலீட்டில் தொழில் – இந்த சுயதொழில் துவங்க குறைந்தபட்சம் 15,000/- (Low budget business) இருந்தால் போதும், தாராளமாக வீட்டில் இருந்தபடியே துவங்கிவிடலாம்.

குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய செப்பல் தயாரிப்பு தொழில்..!

தயாரிக்கும் முறை:

Badge தயாரிப்பு பொறுத்தவரை இரண்டு வகை உள்ளது ஒன்று pin badge மற்றொன்று key chain badge. இவற்றில் மக்களிடம் key chain badge-க்கு அதிக வரவேற்பு உள்ளது. இவை இரண்டையும் ஒரே இயந்திரத்திலேயே தயார் செய்து விட முடியும்.

முதலில் நுகர்வோர்கள் கேட்கும் டிசைனுக்கு ஷ்டிக்கர் பிரிண்டிங் மிஷினில் பிரிண்ட் செய்து Badge செய்ய தயாராக வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு Badge making இயந்திரத்தில் Blank pin badge-ஐ வைத்து, அதன் பிறகு தயாராக வைத்துள்ள ஷ்டிக்கர் மற்றும் பிளாஸ்ட்டிக் கவரை வைத்து, மிஷினை கைகளால் ப்ரஸ் செய்ய வேண்டும். அவ்வளவுதான் Badge தயாராகிவிடும்.

இவ்வாறு தயார் செய்த ஒரு Badge-ன் தயாரிப்பு விலை ரூபாய் 20-வது  தான் ஆகும்.

சந்தை வாய்ப்பு:

குறைந்த முதலீட்டில் தொழில் – தயார் செய்த Badge-ஐ ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டில் ஏதேனும் ஒன்றில் Account கிரியேட் செய்து கொண்டு விற்பனை செய்யலாம். ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் இவ்வாறு தயார் செய்த ஒரு Badge-ன் விலை 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே டிரெண்டிங்கு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தது போல் விதவிதமாக மற்றும் பல டிசைன்களை தயார் செய்து விற்பனை செல்லலாம்.

மேலும் நிறுவனங்கள்ம், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று அவர்களிடமும் ஆடர் பெற்று, விற்பனை செய்யலாம்.  இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பலமடங்கு லாபம் பார்க்கலாம், இந்த Badge தயாரிப்பு தொழிலில்.

புதிதாக தொழில் துவங்க நினைக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே போட்டி  இல்லாத இந்த சுயதொழிலை தயக்கம் இல்லாமல் இப்போதே துவங்குங்கள் நன்றி வணக்கம்..!

போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல்
Advertisement