சுயதொழில் என்ன செய்யலாம்
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை தொழில்நுட்பம் வளர வளர நாமும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றோம். அந்த வகையில் இப்போது எல்லாம் யாரும் பிறரிடம் வேலைக்கு சென்று அங்கு மாத சம்பளத்திற்கு வேலை செய்வதை அதிகமாக விரும்புவது இல்லை. ஏனென்றால் சொந்தமாக ஒரு சுயதொழில் செய்து லாபம் அல்லது நஷ்டம் இரண்டில் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை வளர்த்து கொண்டனர். அப்படி இருந்தாலும் கூட என்ன தொழில் செய்வது என்பது சுயதொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பலரிடத்தில் ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. அதனால் தான் உங்களுடைய கேள்விக்கு பதில் கூறும் வகையிலும் மற்றும் உங்களுக்கு அருமையான எதிர்காலம் அமையவும் இன்றைய பதிவில் ஒரு சுயதொழில் பற்றி கூறப்படுகிறது. மேலும் அத்தகைய தொழிலை பற்றி தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்:
வீட்டில் இருந்தே அனைவரும் செய்ய கூடிய Poha Making Business பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் செய்தால் நீங்கள் நல்ல வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் ஒரே நேரத்தில் பெறலாம்.
அதுமட்டும் இல்லாமல் இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது இன்று வரை அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
- அரிசி
- Poha Making Machine- ஆரம்ப விலை 70,000 ரூபாய்
- FSSAI License
- Trade License
- GST Registration
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கண்டிப்பாக நீங்கள் Poha Making Business– ஐ தொடங்குவதற்கு முன்பு வாங்க வேண்டும்.
நீங்கள் Poha தயாரிப்பதற்கு எந்த அரிசியை வேண்டுமானாலும் எடுத்துகொள்ளலாம். இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 80,000 ரூபாய் வரை தேவைப்படும்.
தேவையான இடம்:
ஒரு பெரிய அளவிலான மற்றும் மின்சார வசதியுடன் கூடிய ஒரு இடம் இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு தேவைப்படும்.
இதையும் படியுங்கள்⇒ தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!
How to Start Poha Business:
நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே அவல் எப்படி தயாரிப்பது மற்றும் அதற்கான தேவைப்படும் மூலப்பொருளின் என முழு பயிற்சியும் அளிக்கப்படும்.
Poha Making Machine-ஐ நீங்கள் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு 120 கிலோ வரையிலும் தயாரிக்க முடியும். அப்படி என்றால் நீங்கள் வெறும் 3 மணி நேரம் வேலை செய்தால் கூட 360 கிலோ தயாரித்து விடலாம்.
அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள அவலினை 1/2 கிலோ மற்றும் 1 கிலோ என பிரித்து தனித்தனியாக பேக்கிங் செய்து வைத்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 1/2 கிலோ அவல் பாக்கெட்டில் 25-ம் மற்றும் 1 கிலோ அவல் பாக்கெட்டில் 25-ம் விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக 2,625 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
நீங்கள் தொடர்ந்து இதை போல விற்பனை செய்தால் தோராயமாக ஒரு வாரத்திற்கு 18,375 ரூபாயும் மற்றும் ஒரு மாதத்திற்கு 78,750 ரூபாய் வரை லாபம் பெறலாம்.
இந்த அவலினை நீங்கள் பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department ஸ்டோர், ஷாப்பிங் மால், ஹோட்டல், Restaurant மற்றும் Wholesale கடை ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.
இதையும் படியுங்கள்⇒ இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இந்த மாதிரி Trending Business-ஐ செய்தால் நல்ல எதிர்க்கலாம் கிடைக்கும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |