மளிகை கடை தொடங்குவது எப்படி?
Maligai Kadai Business Ideas in Tamil:- வணக்கம் நண்பர்களே புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இன்றைய பதிவில் மளிகை கடை தொடங்குவது எப்படி? மளிகை கடை மூலம் நாம் தினந்தோறும் எவ்வளவு லாபம் பெறலாம் போன்ற விவரங்களை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம். சிறு வணிகர்கள் முதல் பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்கள் வரை பல தரப்பட்ட மக்களும் இந்த மளிகை கடை தொழிலை தொடங்கி அதன் மூலம் லாபம் பெறுகின்றனர். பொதுவாக மளிகை கடை ஒவ்வொன்றும் இந்திய நகரங்களின் உயிர்நாடியாகும். என்ன தான் இப்போது உள்ள காலகட்டத்தில் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆன்லைன் ஷாப்பிங் என்று நிறைய வந்தாலும் ஒவ்வொரு ஊரிலும், தெருவிற்கு தெரு, வீதிக்கு வீதி இருக்கும் ஒவ்வொரு மளிகை கடைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கின்றது. ஆகவே இப்படிப்பட்ட மளிகை கடையை தொடங்குவதன் மூலம் தங்களுக்கு ஒரு சிறப்பான வியாபார வாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ள முடியும். அதேபோல் இந்த தொழிலில் மிக முக்கிய மூலதனம் என்று பார்த்தால் அது தங்களது விடா முயற்சியும், கடின உழைப்பும் இந்த தொழிலுக்கு மிக முக்கிய மூலதனமாகும். சரி இப்பொழுது நாம் இந்த தொழிலை பற்றி படித்தறியலாம் வாங்க.
Maligai Kadai Business Ideas in Tamil
முதலீடு:-
இடம், பொருட்கள், சப்ளையர்கள் மற்றும் ஊழியர்களை முடிவு செய்யும் போது உங்கள் முதலீடுகளை தீர்மானித்து கொள்ளுங்கள். அதாவது நீங்கள் குறைந்த அளவில் மளிகை கடையை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் அதற்கேற்ப குறைந்த பணியாளர்கள் மற்றும் குறைந்த ஸ்டாக் கொண்டிருப்பதன் மூலம் தங்களது முதலீடும் குறைவாக இருக்கும்.
அதுவே நீங்கள் சூப்பர் மார்க்கெட் போன்று பெரிய அளவில் மளிகை கடையை தொடங்க விரும்பினால் அதற்கேற்ப அதிகளவு முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.
ஆகவே சராசரியாக அனைத்து செலவுகளுடனும் ஒரு நல்ல மளிகை கடையை குறைந்தபட்சம் 50,000/- முதல் அதிகபட்சம் 2,00,000/- ரூபாய் முதலீட்டில் இந்த மளிகை கடையை தொடங்கலாம்.
100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..! |
மளிகை கடை வைக்க தேவையான பொருட்கள்:-
ரேக்குகள், ட்ரே, அரிசி மூட்டை, சோப்பு, ஷாம்பு இது போன்ற ஷ்டேஷனரி பொருட்களை தங்களது ஏரியாவுக்கு தகுந்தது போல் வாங்கி கொள்ளவும். அதன் பிறகு மளிகை சாமான்களில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய சர்க்கரை, பருப்பு வகைகள், தானிய வகைகள், எண்ணெய் வகைகள், மசாலா பொருட்கள், பூண்டு, புளி இது போன்ற பொருட்களை குறைந்தளவு வாங்கி கொள்ளுங்கள். அதன் பிறகு சிறிதளவு நொறுக்கு தின்பண்டங்கள், பிஸ்கட் போன்றவைகளும் மக்கள் அதிகம் வாங்கி அன்றாட பயன்படுத்துகின்றனர். ஆகவே இது போன்ற பொருட்கள் மளிகை கடை வைக்க அதிகம் தேவைப்படும் பொருட்கள் ஆகும். இவையெல்லாம் தவிர்த்து தினமும் தேவைப்படும் பொருட்கள் என்று பார்த்தால் பால், முட்டை, காய்கறிகள் இது போன்ற பொருட்களையும் தினமும் வாங்கி விற்பனை செய்ய வேண்டியதாக இருக்கும். ஆரம்ப நிலையில் இது போன்ற பொருட்களையெல்லாம் வாங்கி விற்பனை செய்யுங்கள். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் எந்த பொருட்களை அதிகம் வாங்குகின்றார்களோ அந்த பொருட்களை அதிகளவு வாங்கி விற்பனை செய்யுங்கள். மற்ற பொருட்களை குறைந்தளவு வாங்கி கொள்ளுங்கள்.
மளிகை கடை தொடங்க தேவைப்படும் உரிமங்கள்:
இந்தியாவில் ஒரு மளிகைக் கடையைத் திறக்க சில சட்டங்களும் உரிமங்களும் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.
- கடை மற்றும் ஸ்தாபன பதிவு (Shop & Establishment Registration)
- உணவு உரிமம் (Food license)
- நிறுவன பதிவு (Entity Registration)
மேலும் பல்வேறு வரிச்சலுகைகள் பெற மற்றும் ரிவர்ஸ் வரிவிதிப்பை தவிர்க்க, நீங்கள் உங்கள் வணிகத்திற்கு GST பதிவு செய்ய வேண்டும். உங்கள் வருடாந்திர வருவாய் 20 லட்சத்திற்கு மேல் இருந்தால், உங்கள் GSTIN அல்லது உங்களுக்கான 15 இலக்க அடையாள எண்ணைப் பெறுவது கட்டாயமாகும்.
இடம்:-
இந்த தொழிலை பொறுத்தவரை கடையை தொடங்க இருக்கும் இடம் மிகவும் அவசியமான விஷயங்களில் ஒன்றாகும். ஆகவே கடையை வைக்கும் இடத்தை நன்றாக தீர்மானித்து கொள்ளுங்கள். அதாவது நீங்கள் கடையை வைக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் பகுதி ரொம்ப தூரத்துல இருக்கு உங்கள் ஏரியாவில் 100 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அப்பொழுது நீங்கள் மட்டும் தான் இந்த மளிகை கடையை உங்கள் ஏரியாவில் திறக்கப்போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக தங்கள் கடையில் வியாபாரம் நன்றாகவே இருக்கும். ஆகவே கடையை வைக்கும் இடத்தை நன்றாக தீர்மானித்து கொள்வது உங்கள் தொழிலுக்கு மிகவும் நல்லதாகும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |