நஷ்டம் இல்லாத சிறு தொழில்..!

Marachekku Oil Business Plan

செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில்..! How To Start Chekku Oil Business..!

Marachekku Oil Business Plan: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் தினமும் 3000 முதல் 5000 வரை நஷ்டம் இல்லாமல் லாபம் கிடைக்கும் செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழிலை பற்றித்தான் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழில் செய்வதற்கு தேவைப்படும் மூலப்பொருள்கள், இயந்திரம் பற்றிய முழு விவரங்களையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். சமையலின் முதல் இடத்தை பிடித்திருப்பது எண்ணெய். அதிலும் செக்கு எண்ணெய் என்றாலே அனைவரும் விரும்பி வாங்கக்கூடிய ஒன்று. செக்கு எண்ணெய் என்றாலே நம் அனைவரின் மனதில் நினைவுக்கு எழுவது கலப்படம் இல்லாத தூய்மை பெற்ற எண்ணெய் என்பதுதான். இந்த செக்கு எண்ணெய் தொழிலை நஷ்டம் இல்லாமல் எப்படி தொடங்கி அதிக லாபத்துடன் தொழிலை மேற்கொள்ளலாம் என்று விரிவாக இப்போது படித்தறியலாம் வாங்க..!

newலாபத்தை அள்ளித்தரும் சுயதொழில்..! தினமும் வருமானம் 3,500..!

செக்கு எண்ணெய் இயந்திரம்:

Marachekku Oil Business Plan

செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் துவங்குவதற்கு முதலில் நாம் இந்த ஆட்டோமேட்டிக் செக்கு எண்ணெய் இயந்திரத்தினை வாங்க வேண்டும். இந்த இயந்திரத்தில் எண்ணெய் தயாரிக்க போகும் மூலப்பொருளை அந்த இயந்திரத்தின் நடு பகுதியில் சேர்த்து சுவிட்ச் ஆன் செய்தால் போதும்.

மூலப்பொருளானது நன்கு அரைத்து எண்ணையாக இயந்திரம் மூலம் நமக்கு கிடைத்துவிடும். இந்த இயந்திரமானது 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

செலவு:

இந்த செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை வேலையாட்கள் 1 நபர் இருந்தால் போதுமானது. அவர்களுடைய கூலி செலவானது ரூ.10,000/-. அடுத்ததாக மின்சார சம்மந்த செலவுகள் ரூ.20,000/- முதல் 30,000/- வரை வரும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழிலில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழில் செய்ய போகிறீர்கள் அதற்கேற்ற மூலப்பொருட்கள் தேவைப்படும். கடலை எண்ணெய் தயாரிப்பு தொழில் என்றால் அதற்கேற்ற பொருள் தேவைப்படும்.

பொருளுக்கு ஏற்றவாறு விலையினை நாம் கணக்கீடு செய்து கொள்ளலாம்.

விற்பனை முறை:

இரண்டு விதமாக செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் மூலம் விற்பனை செய்து வரலாம். முதலில் சொந்தமாக மில் தொடங்கி செக்கு இயந்திரம் மூலம் நீங்களே வருபவர்களுக்கு எண்ணெய் தயாரித்து கொடுக்கலாம்.

இன்னொரு முறை எண்ணெயினை நீங்களே தயார் செய்து உங்கள் தொழிலுக்கென்று ஒரு ப்ராண்ட் பெயர் வைத்து மார்க்கெட்டுகளில் தயாரித்த எண்ணெயினை விற்பனை செய்து வந்தால் அதிக லாபம் கிடைக்கும்.

newமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..! அருமையான சுயதொழில்..!

தொழில் லாபம்:

உதாரணத்திற்கு கடலை எண்ணெய் 20 கிலோவிற்கு 10 லிட்டர் எண்ணெய் நமக்கு கிடைக்கும்.

20 கிலோவிற்கு சராசரியாக ரூ. 1,500/- முதல் 2,000/- வரை ஆகும்.

சந்தை லாபம்:

பெரிய மார்க்கெட்டுகளில் செக்கு எண்ணெயானது 1 லிட்டர் ரூ.300/- முதல் ரூ.400/- வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே செக்கு எண்ணெயானது மொத்த விற்பனைக்கு ரூ.250/- முதல் ரூ.275/- வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழிலை மொத்தம் விற்பனை செய்வதோடு இல்லாமல் வாடிக்கையாளர்களை நிறைய வைத்து அதன் மூலம் தொழிலை துவங்கினால் தினமும் நிறைய லாபம் அடையலாம்.

குறிப்பாக ஒரு ப்ராடக்டில் மட்டும் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யாமல் பல ப்ராடக்ட்களில் எண்ணெயினை தயாரித்து விற்பனை செய்தால் தினமும் இந்த தொழில் மூலம் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரையிலும் லாபத்தினை பார்க்கலாம்.

குறைவான முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய அருமையான பிசினெஸ். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கி நிறைய லாபம் பெற அன்பான வாழ்த்துக்கள்..!

newதொழில் தொடங்கினால் போதும்..! லாபம் தேடி வரும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல்