தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் போதும் 40,000/- வருமானம் கிடைக்கும்..

Advertisement

10 x 10 இடம் இருந்தால் போதும் தினமும் 10 நிமிடம் வேலை சேலை செய்து 7 நாட்களில் 40,000/- வருமானம் பெறலாம்..

Microgreens Making Business in Tamil – புதியதாக தொழில் தொடங்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்று நாம் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது இந்த Microgreens என்று ஆங்கிலத்தில் சொல்ல குடைய முளைகட்டிய செடிகளை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் 7 நாட்களில் 40,000/- வரை வருமானம் பெறலாம். இதற்கு உங்களுக்கு அதிக முதலீடு தேவைப்படாது, அதிக இடமும் தேவைப்படாது 10-க்கு 10 இடம் இருந்தாலே போதும். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும் மற்றும் இதர விவரங்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம்.

Microgreens Making Business in Tamil

இடம்:

இந்த Microgreens தயார் செய்து விற்பனை செய்வதற்கு உங்களிடம் சொந்தமாக அல்லது வாடகை இடமாக இருந்தாலும் சரி 10-க்கு 10 இடம் இருந்தால் போதும். உங்கள் வீட்டில் இருந்தபடியே தொழிலை தொடங்கி நல்ல லாபம் பெறலாம்.

Microgreens

மூலப்பொருட்கள்:

இந்த Microgreens தயாரிப்பு தொழில் தொடங்குவதற்கு உங்களுக்கு அவசியம் 100 Tray, விதைகள், cocopeat, Vermi Compost மற்றும் தயார் செய்த Microgreens-ஐ பேக்கிங் செய்வதற்க்கான பேக்கிங் கவர் அல்லது பாக்ஸ் இந்த பொருட்கள் தான் தேவைப்படும்.

பயன்கள்:

இதனை தயார் செய்து விற்பனை செய்வதினால் என்ன பலன் என்றால் இவற்றில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது, குறிப்பாக இதனை நாம் உணவில் சேர்த்து கொள்வதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் இது போன்ற ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்கின்றன. இதனால் சந்தையில் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

வகைகள்:

இந்த Microgreens-யில் கிட்டத்தட்ட 50 வகையான Microgreens இருக்கிறதாம், இந்த Microgreens-யில் மக்கள் ப்ராக்கோலி, கேரட், கீரை போன்றவற்றை அதிகம் விரும்பு வாங்குகிறார்களாம். உங்களுக்கு எது வளர்ப்பதற்கு வசதியாக இருக்குமோ அதனை வாங்கி வளர்த்து விற்பனை செய்யலாம்.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் Microgreens எது என்றால் ப்ராக்கோலி, கேரட், கீரை வகைகள் இது போன்றது தான் அதிக விலைக்கு விற்பனைக்கு செல்கிறதாம்.

தயாரிக்கும் முறை:

சீக்கிரம் வளரக்கூடிய விதைகளை நீங்கள் விதைகளை ஒரு நாள் முழுவது தண்ணீரில் போட்டுவைத்து மறுநாள் காலை எடுத்து வளர்க்க ஆரம்பித்துவிடலாம், அதுவே மற்ற விதைகளாக இருந்தால் அதனை மூன்று நாட்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து தான் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு தயார் செய்த விதைகளை ஒரு Tray-யில் cocopeat போட்டு அந்த விதைகளை தூவி வளர்க்க வேண்டும். இதனை நீங்கள் வெறும் 7 நாட்கள் மட்டும் வளர்த்தால் போதும். தினமும் ஒரு முறை மட்டும் காலை அல்லது மாலை நேரங்களில் தண்ணீர் லேசாக தெளித்துவிட்டால் போதும். 8-வது நாள் இதனை சந்தையில் விற்பனை செய்துவிடலாம்.

முதலீடு:

இந்த தொழில் தொடங்க உங்களிடம் 5000 ரூபாய் இருந்தால் போதும் வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக சம்பாதிக்கலாம்.

வருமானம்:

வாரத்தில் 100 Tray-யில் Microgreens வளர்த்துவிட்டிர்கள் என்றால், ஒரு Tray-யில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். 100 Tray என்றால் கண்டிப்பாக 20,000/- முதல் 40,000/- வரை வாரத்திற்கு ஒரு முறை பணம் சம்பாரித்துவிடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
இதனை வளர்த்து விற்றாலே போதும் 2 கோடி வருமானம் பெறலாம் அருமையான தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement