முதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..! அருமையான சுயதொழில்..!

Advertisement

அருமையான சுயதொழில்..! டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில்..!

Mobile Tempered Glass Making Business Ideas in Tamil:-

Business Ideas in Tamil:- புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பொழுது உள்ள காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் மொபைல் போனை அதிகளவு பயன்படுத்துகின்றன என்பதினால் மொபையில் சம்மந்தமான எந்த தொழில் செய்தாலும் நிச்சயம் அந்த தொழில் மூலம் நல்ல வெற்றியினை பெறமுடியும். அந்த வையில் இந்த பதிவில் மொபையில் டெம்பர் கிளாஸ் தொழில் செய்து அதன் மூலம் நாம் எப்படி வருமானம் பார்க்கலாம்.

பொதுவாக எதிர்பாராத விதமாக நமது மொபையில் போன் கீழே விழுந்துவிடும் அப்பொழுது அவற்றில் உள்ள டெம்பர் கிளாஸ் உடைந்துவிடும், இதன் காரணமாக அந்த மொபைலை பயன்படுத்துவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே உடனே அந்த டெம்பர் கிளாஸை மாற்ற வேண்டும் என்று கடைகளுக்கு சென்று கொடுத்து சரி செய்வோம், எனவே நாம் நமது ஊரிலேயே இந்த டெம்பர் கிளாஸ் சரி செய்து கொடுக்கும் தொழிலை செய்தால் நல்ல வருமானம் பார்க்க முடியும். சரி இந்த தொழிலை துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதற்கு என்னென்ன மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்க தேவைப்படும் என்பதை பற்றி இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் சுயதொழில் செய்து நல்ல வருமானம் பெறுங்கள்

Mobile Tempered Glass Making Business Ideas in Tamil:-

இடம்:-

  • இடம் வசதி பொறுத்தவரை பத்துக்கு பத்து அளவு கொண்ட ஒரு சிறிய அரை இருந்தால் போதும்.

இயந்திரம்:-

mobile tempered glass making machine

மொபையில் டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை தேவைப்படும் இயந்திரம் என்று பார்த்தால் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ள Mobile Tempered Glass Making Machine அவசியம் தேவைப்படும்.

இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது, விலை குறைந்தபட்சம் 75,000/- முதல் அதிகபட்சம் 1,25,000/- வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த இயந்திரத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவதற்கு பதில். நேரடியாக சென்று வாங்குவது மிகவும் சிறப்பாகும். ஏனென்றால் அப்பொழுது தங்களுக்கு இயந்திரத்தை எப்படி இயக்க வேண்டும் என்று சிறு பயிற்சி அளிப்பார்கள் அதன் மூலம் தாங்கள் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

மேலும் இதனுடனும் அவசியம் ஒரு சிறிய கம்பியூட்டர் தேவைப்படும்.

Sticker Printing Business

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

mobile tempered glass raw material

இந்த டெம்பர் கிளாஸ் தயாரிப்பு தொழில் செய்வதற்கு mobile tempered glass sheet அவசியம் தேவைப்படும் இந்த மூலப்பொருட்களையும் தாங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். இந்த mobile tempered glass sheet குவாலிட்டிக்கு தகுந்தது போல் ரூ.5 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே தங்களுக்கு எந்த குவாலிட்டியில் டெம்பர் கிளாஸ் சீட் வேண்டுமோ அந்த குவாலிட்டிக்கு தகுந்தது போல் டெம்பர் கிளாஸினை ஆர்டர் செய்து பெற்று கொள்ளுங்கள்.

முதலீடு: 

இயந்திரம், மூலப்பொருட்கள் மற்றும் இதர செலவுகள் என்று முதலீடாக 2.50 லட்சம் வரை தேவைபடும். இருப்பினும் ஒரு முறை அதிக முதலீடு செய்தாலும் ஆண்டுதோறும் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த தொழில் என்று சொல்லலாம்.

வருமானம்:

Business Ideas in Tamil

இந்த டெம்பர் கிளாஸ் சீட் ஒன்றின் அடக்க விலை 10 முதல் 15 என்று வைத்து கொள்வோம். ஒரு கவரில் 5 டெம்பர் கிளாஸ் உற்பத்தி செய்யலாம், இருப்பினும் அந்த மொபையில் மாடலை பொறுத்து உற்பத்தி வேறுபாடும். தாங்கள் தயார் செய்த இந்த மொபையில் டெம்பர் கிளாஸ் ஒன்றை ரூ.150 முதல் ரூ.200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். செலவுகள் போக ஒரு கவர் உற்பத்திக்கு 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு நாளிற்கு இது போன்று 10 டெம்பர் கிளாஸ் தயார் செய்து விற்பனை செய்யும் பொழுது 1500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:-

தாங்கள் உற்பத்தி செய்த இந்த டெம்பர் கிளாஸினை மொபையில் கடைகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யலாம் அல்லது தாங்களே ஒரு சொந்தமாக ஒரு சிறிய கடை வைத்து விற்பனை செய்யலாம், இதனுடன் மொபையில் சார்த்த பொருட்களையும் விற்பனை செய்து அதன் மூலமாகவும் நல்ல வருமானம் பார்க்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement