1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.. அருமையான கைத்தொழில்..!

Advertisement

வீட்டில் இருந்து செய்யக்கூடிய கைத்தொழில் | Natural Hair Dye Making Business in Tamil

புதியதாக வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்க விரும்புகிறீர்களா? இருந்தாலும் என்ன தொழில் செய்யலாம் என்பதில் அதிக குழப்பமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே வீட்டில் இருந்து இயற்கையான முறையில் ஹேர் டை தயாரித்து விற்பனை செய்ய கூடிய தொழிலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இதை தயார் செய்து விற்பனை செய்வதால் என்ன லாபம் என்று நினைக்கலாம். இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனை வந்து விடுகிறது. ஆக இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கையான முறையில் தயார் செய்யக்கூடிய ஹேர் டையை மக்கள் அதிகம் விரும்புகின்றன. ஆக வீட்டில் இருந்து இதனை தயார் செய்து விற்பனை செய்யும் போது நல்ல வருமானத்தை பெற முடியும். சரி வாங்க இந்த தொழில் எப்படி தொடங்கலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்த்துவிடுவோம்.

இடம்:

இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்க்கான தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வருமானமும் அதிகரிக்கும் அப்பொழுது நீங்கள் தனியாக இடம் அமைத்தும் கூட ஹேர் டை தயார் செய்து கொடுக்கலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

அவுரி பவுடர், மருதாணி பவுடர், நெல்லிக்காய் பவுடர், பேக்கிங் கவர் இவை அனைத்தும் தேவைப்படும்.

முதலீடு:

அவுரி பவுடர் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மருதாணி பவுடர் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, நெல்லிக்காய் பவுடர் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும்  பேக்கிங் கவருக்கு 200 ரூபாய் என்று 1050 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

தயார் செய்யும் முறை:

ஒரு கிலோ ஹேர் டை  தயார் செய்வதற்கான அளவு.

55 சதவீதம் அவுரி பவுடர்
35 சதவீதம் மருதாணி பவுடர்
10 சதவீதம் நெல்லிக்காய் பவுடர்

இந்த அளவில் அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு அவற்றை ஒன்றாக கலந்து ஒரு முறை சலித்துக்கொள்ளுங்கள். பிறகு சிறு சிறு பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்யலாம்.

வருமானம்:

10 கிராம் ஹேர் டையை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம், 100 கிராம் ஹேர் டையை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் மற்றும் ஒரு கிலோ ஹேர் டையை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இரு நாளைக்கு 2 கிலோ ஹேர் டை தயார் செய்து விற்பனை செய்தாலே அதன் மூலம் 4000 ரூபாய் வரை வருமானம் பெறமுடியும்.

சந்தை வாய்ப்பு:

உங்கள் தெருவில் உள்ள அனைவரிடமும் இதனை தயார் செய்து விற்பனை செய்யலாம், மளிகை கடை, பியூட்டி பார்லர், சூப்பர் மார்க்கெட், டிப்ராக்மென்ட் ஸ்டோர் என்று அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யலாம் இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 அதிக டிமாண்ட் உள்ள தொழில்.. ஒரு நாளுக்கு 16,000/- வரை சம்பாதிக்கலாம்..! ஆண், பெண் இருவருமே வீட்டில் இருந்து செய்யும் தொழில்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement