புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்..! Needs Scheme Details in Tamil..!
Needs Scheme Details in Tamil:- தமிழ்நாட்டில் அதிக தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 5 லட்சம் முதல் 1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மானிய உதவியாக தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடும் அதிகபட்சமாக 25 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. சரி இந்த Needs Scheme பற்றிய முழுமையான விவரங்களை இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.
தொழில் துவங்க ஐடியா மற்றும் சுயத்தொழில் குறித்த முழு விவரங்களையும் Facebook – ல் பெற இங்கே கிளிக் பண்ணவும். Facebook Link: Click Here
Needs Scheme Details in Tamil..!
இத்திட்டத்தின் நோக்கம்:-
இந்த NEEDS (New Entrepreneur – cum- Enterprise Development Scheme) திட்டம் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் வழங்கி புதிய உற்பத்தி / சேவை தொழில்களை தொடங்க உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
திட்ட மதிப்பீடுத் தொகை:-
Needs Scheme in Tamil – தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பு தொகை ரூ. 5 லட்சத்திற்கு மேலும், 1 கோடி வரையிலும் இருந்தால் அதற்கான முதலீட்டை இந்த திட்டத்தின் மூலம் பெறலாம்.
மானிய தொகை:-
அரசு மூலம் வழங்கப்படும் மானிய உதவி, இத்திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் 25 லட்சம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:-
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 35 ஆண்டுகளும்.
- அதிகபட்ச வயது இதர சிறப்பு பிரிவினருக்கு 45 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
பட்டம் மற்றும் பட்டயம், ITI, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மூலம் தொழில்சார் பயிற்சி படித்தவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகளின் பங்குத் தொகை:-
பொது பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், இதர சிறப்பு பிரிவினருக்கு மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களித்திருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு முறை:-
- ஆதி திராவிடருக்கு 18 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
- பழங்குடியினருக்கு 1 சதவீதம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
- இந்த திட்டத்தின் கீழ் மகளிருக்கு மேற்கண்ட தகுதி உள்ள ஆதரவற்ற / கைவிடப்பட்ட மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து 50 சதவீதம் இடஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ? |
வருமான வரம்பு:-
- இந்த திட்டத்தின் கீழ் வருமான வரம்பு எதுவும் கிடையாது.
பங்குதாரர் நிறுவனம்:-
- உரிமையாளர் / பங்குதாரர் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுடையவர்கள்.
பிற நிபந்தனைகள்:-
- புதிதாக தொழில் துவங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
- மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் வாங்கப்படும் பாரதப்பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டம் (PMRY), பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் மற்றும் சுய உதவி குழுக்கள் போன்ற திட்டங்களின் கீழ் மதியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடனுதவி பெற இயலாது.
- வங்கி / தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று திருப்பி செலுத்தாதவராக இருந்தால் கூடாது.
- தொழில் முனைபவர் தமிழ் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை, மளிகை கடை, பொருட்களை வாங்கி, விற்கும் தொழில்) தொடங்க இந்த திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.
- படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு NEEDS மூலம் முதலீட்டை பெற இயலாது.
- இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க இந்த திட்டத்தில் பயன் பெற இயலாது.
- கடனுதவி பெற தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைபவர் ஒரு மாத தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கட்டாயமாகப் பெறவேண்டும்.
மேலும் சில நிபந்தனைகள் அளிக்கப்படுகிறது அதாவது சில தொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற இயலாது அவற்றை தெரிந்து கொள்ள http://www.msmeonline.tn.gov.in/needs/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்:-
NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையத்தை (DIC-DISTRICT INDUSTRIES CENTRES) அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்கள்:-
- புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வங்கிகளில் அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.
- இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/needs/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மேலும் Needs Scheme Details in Tamil முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள தங்கள் அருகாமையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை (DIC-DISTRICT INDUSTRIES CENTRES) தொடர்பு கொள்ளலாம்.
சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |