போட்டி இல்லாத தொழில் மாதம் 50,000 வருமானம் தரும் தொழில்..! | PVC Clamp Making Business in Tamil
PVC Clamp Making Business in Tamil – புதிதாக தொழில் துவங்கம் அனைவரும் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான்.. அதாவது PVC பைப்பை நாம் இப்பொழுது அனைத்து இடங்களில் பயன்படுத்துகின்றோம். அதாவது Pipe Connection-ஆக இருக்கட்டும், தண்ணீர் சப்லைக்காக, கழிவு நீர் போவதற்கான பாதைக்காக என்று அனைத்திற்குமே PVC பைப்பை தான் நாம் அதிகமாக பயன்படுத்துகின்றோம். அது வீடுகளாக இருந்தாலும் சரி, அப்பாட்மெண்டாக இருந்தாலும் சரி, அலுவலகங்களாக இருந்தாலும் சரி, மருத்துவமையாக இருந்தாலும் சரி எந்த ஒரு இடத்திற்கும் இந்த PVC பைப் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பைப்பை செட் செய்வதற்கு Clamp என்பது மிகவும் அவசியம் தேவைப்படும் பொருள். இந்த Clamp-ஐ நாம் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..
இடம்:
10-க்கு 10 அளவு கொண்ட சிறிய இடம் இருந்தாலே போதும் இந்த PVC Clamp தயாரிப்பு தொழிலை நாம் தொடங்கலாம்.
மூலப்பொருட்கள்:
இந்த PVC Clamp தயார் செய்வதற்கு MS Metal தேவைப்படும். இது தான் இந்த தொழிலுக்கான மிக முக்கியமான மூலப்பொருள்.
இயந்திரம்:
- Hydraulic Press Machine
- Verticals Drilling Machine
இந்த இரண்டு இயந்திரங்கள் தேவைப்படும். Hydraulic Press Machine-யில் செமி ஆட்டோமேட்டிக் இயந்திரமும் இருக்கிறது, மென்வல் மெஷினும் உள்ளது. இருப்பினும் அதன் விலை நிலவரம் மாறுபடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..!
முதலீடு:
- Hydraulic Press Machine – 1.50 லட்சம்
- Verticals Drilling Machine-க்கு 25,000
- செட் அமைப்பதற்கு மற்றும் பர்னிச்சர் பொருட்களுக்கு – 1 லட்சம்
- மற்றும் இதர செலவுகளுக்கு 1 லட்சம்
ஆக முதலீடாக உங்களிடம் 3.75 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் தேவைப்படும்.
தயாரிப்பு முறை:
MS Metal-யில் உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு கட் செய்து விட்டு, அதன் பிறகு Verticals Drilling Machine-யில் ஓட்டை போட்டுன்கொண்டு, பிறகு Hydraulic Press Machine-யில் கட் செய்த MS Metal-ஐ Press செய்தால் PVC Clamp தயாராகிவிடும்.
சந்தை வாய்ப்பு:
PVC பைப் விற்பனை செய்யப்படும் இடங்களில் சென்று நீங்கள் தயார் செய்த PVC Clamp-ஐ விற்பனை செய்யலாம். இதன் மூலம் மாதம் கிட்டத்தட்ட 50,000/- வரை வருமானம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
2 மணி நேரம் வேலை தினமும் 4000 ரூபாய் லாபம் அருமையான தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |