மூலதனம் நல்ல லாபத்தை பெற்று தரும்
ஹாய் ஹலோ வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவின் மூலம் தினம் தோறும் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை யோசிப்பது வழக்கம். அதேபோல் அனைத்து தொழில்களும் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதேபோல் தான் தினம் தோறும் சில வகையான தொழில்களை மட்டும் அதிகம் நபர்கள் செய்து வருகிறார்கள். அதனால் அதற்கு மட்டும் போட்டிகள் அதிகம் உள்ளது. சில வகையான தொழில்களில் அதிகளவு போட்டிகளும் இருக்காது. கடினமாகவும் இருக்காது. அந்த வகையில் நான் தெரிந்து கொண்டு உங்களுக்கு சொல்கிறேன். இந்த தொழில் செய்தால் எவ்வித போட்டிகளும் இல்லை உங்களின் மூலதனத்திற்கு ஏற்றவாறு லாபமும் கிடைக்கும்.
அழகான டிசைன் வீடுகள்:
நீங்கள் இந்த தொழிலுக்கு படிக்க வேண்டிய அவசியம் இல்லை அதனால் கவலை படவேண்டாம். உங்களுக்கு நல்ல படம் வரைய தெரியுமா. அது மட்டுமில்லாமல் உங்களுக்கு வித்தியாசமான வரைபடங்களை வரைய தெரியுமா அப்போ இது உங்களுக்கு நல்ல தொழில் தான்.
ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த காலகட்டத்தில் வீடுகள் கட்டி அதனுடைய வடிவமைப்பு பிடிக்காமல் வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதனை மறுமுறை கட்டவேண்டும் என்று நினைத்தால் அதற்கு நிறைய செலவு ஆகும் என்று நினைத்து அதனை மறுத்துவிடுவார்கள்.
இங்கு தான் உங்களுடைய கலை திறமை, ஓவிய திறமையானது உங்களுக்கு கைகொடுக்கும். நமக்கு ஒரு வீடு பிடிக்கவில்லை என்றால் அது மற்றவர்களுக்கு மிகவும் பிடிக்கும், அதனால் அவர்களுக்கு பிடிக்காத வீட்டை பிடித்தது போல் மாற்றி அவர்களுக்கு கொடுக்கலாம்.
இதற்கு பெயர் Remodelling House என்று சொல்வார்கள். நீங்கள் இந்த தொழிலை ஒரு சைடு பிஸ்னஸ் போல் கூட செய்யலாம். இதற்கு ஒரு ஐந்து நபர்களை மட்டும் வைத்து வேலையை செய்து கொடுக்கலாம்.
இப்போது ரூம் அவர்களுக்கு பிடிக்கவில்லை இதனை மாற்றி வேறு மாதிரி கட்டி மாற்றவேண்டும் என்று உங்களிடம் சொன்னால் அவர்களுக்கு உங்களுடைய திறமையை வைத்து அதிகளவு செலவுகளை செய்யாமல் சூப்பரான மாடல் ரூம் போல் மாற்றி கொடுக்கலாம். இது அவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் அதேபோல் உங்களுக்கும் லாபத்தை கொடுக்கும்.
அவர்களுக்கு தேவை அனைத்தும் வீடு பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும் என்று மட்டும் தான் அதேபோல் அதற்கான செலவுகள் மிகவும் குறைவாக இருந்தால் அதுவும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
வீடு மட்டுமில்லாமல் வாசலில் வீட்டை சுற்றி தோட்டம் இருக்கும் இது அனைவருக்கும் தெரியும் அதனையும் அழகாக மாற்றி கொடுக்கலாம். இதற்கும் தனியாக சம்பளம் கிடைக்கும். இதில் தான் உங்களுடைய கலைத்திறமை வெளிப்படும். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |