ஒரே Transaction-யில் 80000 ரூபாய் லாபம் அருமையான தொழில்..!

Repacking Business Ideas in Tamil

ஒரே Transaction-யில் 80,000 ரூபாய் சம்பாதிக்க அருமையான தொழில்..! Repacking Business Ideas in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. ரிபேக்கிங் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது Metal Shining Powder ரிபேக்கிங் செய்யக்கூடிய தொழிலை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த தொழில் துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்னென்ன, மேலும் இந்த தொழில் தொடங்குவதால் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும். போன்ற விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Metal Shining Powder பயன்கள்:

இந்த Metal Shining Powder எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றால். எவர்சில்வர் பாத்திரம், பித்தளை பாத்திரம், இரும்பு பாத்திரம், செம்பு பாத்திரம், அலுமிய பாத்திரம் இது போன்ற பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது. இந்த பவுடரை பயன்படுத்தி பத்திரங்களை விலகினால் பாத்திரம் நன்கு பளிச்சென்று இருக்கும். இதன் காரணமாக மக்கள் இந்த பவுடரை வாங்கி பயன்படுத்துகின்றன.

இதனை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள்:

  1. China Clay
  2. Sodium Metasilicate
  3. Sodium Carbonate
  4. Citric Acid
  5. கலர் பவுடர்

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் தான் Metal Shining Powder தயார் செய்வதற்க்கான மூலப்பொருட்கள் ஆகும். இதை தவிர நீங்கள் தயார் செய்த பவுடரை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் தேவைப்படும்,

100 கிராம் Metal Shining Powder தயார் செய்வதற்கான அளவு கோல்:

  1. China Clay – 50 கிராம்
  2. Sodium Metasilicate – 20 கிராம் முதல் 25 கிராம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  3. Sodium Carbonate – 20 கிராம் முதல் 25 கிராம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  4. Citric Acid – 5 கிராம்
  5. கலர் பவுடர் – இரு சிட்டிகை

100 கிராம் Metal Shining Powder தயார் செய்ய மேல் கூறப்பட்டுள்ள பொருட்களின் அளவு போதுமானது. இந்த அளவு கொண்டு நீங்கள் தயார் செய்ய இருக்கும் பொருட்களின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

அல்லது Metal Shining Powder-ஐ மொத்தமாக 100 கிராம், 50 கிராம் பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்து கொள்ளலாம்.

சந்தை வாய்ப்பு:

கடைகளில் 1 கிலோ Metal Shining Powder 800 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறதாம். ஆக நீங்கள் 100 கிராம், 100 கிராம் Metal Shining Powder-ஐ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஒரு பொருள் போதும் தினமும் 2500 ரூபாய் சம்பாரிக்கலாம்..!

முதலீடு:

நீங்கள் இந்த Metal Shining Powder-ஐ மொத்தமாக வாங்கி ரிபேக்கிங் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அதாவது இந்த பவுடரை மொத்தமாக வாங்கும்பொழுது 200 கிலோவிற்கு வாங்க வேண்டியதாக இருக்கும். அதற்கான முதலீடு 7000/- ரூபாய்.

பிறகு மொத்தமாக வாங்கும்பொழுது ஒரு கிலோவின் விலையே 35 ரூபாய் தான் இருக்கும். 35X200=7000 ஆகும்.

வருமானம்:

200 கிலோ Metal Shining Powder-ஐ சந்தைகளில் ஒரு கிலோ பவுடரை வெறும் 500 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட உங்களுக்கு 1 லட்சம் வருமானமாக கிடைக்கும் செலவுகள் என்று 20 ஆயிரம் வைத்துக்கொண்டால் கூட உங்களுக்கு லாபமாக 80000 ரூபாய் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil