காலத்திற்கும் நஷ்டம் ஏற்படாத ஒரே தொழில்..!

Small business ideas in tamil

Roll Polish Business Plan in Tamil

நம்மில் பலருக்கும் யாரிடமாவது கீழ்ப்படிந்து வேலை செய்வது என்பது பிடிக்காத ஒரு செயல். ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து அதற்கு நாம் முதலாளியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி உங்களுக்கும் ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து அதற்கு முதலாளியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Roll Polish Business-யை தொடங்கி நீங்களும் பத்து பேருக்கு வேலை அளிக்கும் முதலாளியாக மாறுங்கள். இந்த பதிவில் Roll Polish Business பற்றிய அனைத்து தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Roll Polish Business Plan in Tamil:

பொதுவாக அனைவரின் வீட்டிலேயும் பட்டுப்புடவை, பட்டு வேட்டி சட்டை போன்ற பட்டினால் ஆன ஆடைகள் இருக்கும். மேலும் விலை உயர்ந்த ஆடைகள் இருக்கும் அவற்றையெல்லாம் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினாலே அவைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில் பொலிவிழந்து காணப்படும்.

அப்படி உள்ள ஆடைகளை சிலர் Roll Polish அல்லது Dry Washing செய்வதற்கு கொடுப்பார்கள். அதனால் நீங்கள் இந்த Roll Polish Business-யை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம். 

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Side business ideas in tamil

Roll Polish Business-க்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Roll Polish Machine, Starch Powder மற்றும் Polishing Liquid போன்றவை தான்.

இந்த Roll Polish Machine-னின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினின் ஆரம்ப விலை ரூபாய் 13,000 ஆகும். இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படும்.

மேலும் Starch Powder மற்றும் Polishing Liquid போன்றவை எந்தெந்த மாடல் ஆடைகளுக்கு எந்த அளவு அளிக்க வேண்டும் என்பதை பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.

இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடம் இருந்தால் நல்லது.

 இதையும் படியுங்கள்=> முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்

லாபம்:

இந்த Roll Polish Business-ன் லாபம் என்று பார்த்தால் நீங்கள் நிர்ணையிக்கும் விலையை பொறுத்து கிடைக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு காட்டன் புடவை அல்லது காட்டன் சட்டைக்கு ரூபாய் 40 என்றும்.

பட்டு புடவை மற்றும் பட்டு சட்டைக்களுக்கு ரூபாய் 200 என்று விலை நிர்ணயிக்கிறீர்கள் என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு 50 காட்டன் புடவை பாலிஷ் செய்வதற்காக உங்களிடம் வருகிறது என்றால் ரூபாய் 2,000 வரை லாபம் கிடைக்கும்.

அதுபோல் தோராயமாக ஒரு நாளைக்கு 20 பட்டு புடவை பாலிஷ் செய்வதற்காக உங்களிடம் வருகிறது என்றால் ரூபாய் 4, 000 வரை லாபம் கிடைக்கும்.

இந்த Roll Polish Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்வில் முன்னேறுங்கள்.

 இதையும் படியுங்கள்=> இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil