கப் சாம்பிராணி தொழில் செய்வது எப்படி..! Sambrani Cup Business Ideas In Tamil..!
Sambrani Cup Business: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அதிக வருமானம் தரக்கூடிய கப் சாம்பிராணி தொழில் செய்வதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் இதற்கு முன் பெரிய பெரிய இயந்திரங்களால் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே அனைவரும் செய்யலாம். சுலபமான முறையில் செய்யக்கூடிய கப் சாம்பிராணி இயந்திரம் இப்போது வந்துவிட்டது.
இந்த கப் சாம்பிராணியை வட மாநிலங்களில் வெவ்வேறு வண்ணங்களில் வாசனை திரவியங்களுடன் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கப் சாம்பிராணிகளை கருப்பு வண்ணங்களில் மட்டுமே விற்பனை செய்கிறார்கள். வட மாநிலத்தினை போலவே நாமும் பல வண்ணங்களை செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம். சரி வாங்க நண்பர்களே இப்போது இந்த தொழில் துவங்க என்னென்ன மூலப்பொருள், இயந்திரம் பற்றிய விவரங்களை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..!
13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..! Ball Pen Business Ideas..! |
கப் சாம்பிராணி மூலப்பொருள்:
- கரித்துகள்கள்
- ஜிகட்
- மரத்தூள்
- சாம்பிராணி
- வாசனை திரவியம்
- yy கெமிக்கல்
தேவைப்படும் இயந்திரம்:
இந்த தொழிலில் ஒரு பாக்கெட்டிற்கு 12 கப் சாம்பிராணி பீசஸ் வைக்கலாம். ஒரு பாக்கெட்டிற்கு இந்த சாம்பிராணி செய்ய மொத்த செலவுகள் ரூ. 10/- மட்டுமே ஆகும். இந்த மிசின் இந்தியாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கின்றது. சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் யோசிக்கலாமல் இந்த மிசின் வாங்கி தொழிலை துவங்கலாம்.
இயந்திரம் விலை:
இந்த கப் சாம்பிராணி மிசின் ஆரம்ப விலை ரூ. 20,000/- முதல் கிடைக்கின்றது. அடுத்து அட்டை பெட்டி இதர செலவுகள் அனைத்தும் சேர்த்து ரூ. 30,000/- ஆகும். இந்த தொழில் துவங்க மொத்தமாக ரூ.50,000/- இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே தாராளமாக இந்த தொழிலை துவங்கலாம்.
இடப்பகுதி:
இந்த இயந்திரத்தை வைப்பதற்கு வீட்டின் சிறிய இடம் போதுமானது.
கப் சாம்பிராணி தொழில் செய்யும் முறை:
முதலில் மூலப்பொருள்கள் அனைத்தையும் காயவைத்து கொள்ளவும். அடுத்து கீழே தட்டில் அந்த கரித்துகள்களை வைத்துக்கொள்ளவும். துகள்களை அந்த ஓட்டையின் உள் செலுத்தி அந்த கை பிடியினை ஒரு முறை சுற்றி அழுத்திவிட வேண்டும். அழுத்தி விட்ட பிறகு அந்த மிஷினில் கப் சாம்பிராணியானது ரெடி ஆகிவிடும்.
லாபம்:
இந்த கப் சாம்பிராணி தொழிலில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 100 பெட்டிகள் ரெடி செய்கிறீர்கள் என்றால் 1 பெட்டிக்கு சராசரியாக ரூ. 10/- லாபம் கிடைக்கும்.
தினமும் இதன்மூலம் ரூ. 1,000/- லாபம் கிடைக்கக்கூடிய தொழில்.
விற்பனை செய்யக்கூடிய இடம்:
இந்த தொழிலில் நீங்கள் இன்னும் சாம்பிராணியை தரமாக செய்தோம் என்றால் பெரிய கம்பெனிகள், கோவில் வாசலில் முன் இருக்கும் கடைகள், பூஜை பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்யும் இடங்களுக்கு இந்த கப் சாம்பிராணியை நாம் வீட்டில் இருந்தபடியே செய்து விற்பனை செய்து லாபம் அடையலாம்.
ஆன்லைன் விற்பனை:
கடைகளில் இந்த கப் சாம்பிராணியை ரூ. 20/- முதல் 30/- வரையிலும் விற்பனை செய்கிறார்கள். இந்த தொழில் மூலம் வாடிக்கையாளர்களை கவர செய்வதற்கு பல வண்ண கலவைகள் மூலம் விற்பனை செய்து வந்தால் இன்னும் அதிக லாபம் பெறலாம்.
கடைகளில் மட்டுமல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாகவும் கப் சாம்பிராணியை விற்பனை செய்யலாம்.
மூலப்பொருள் கிடைக்கும் இடம்:
இந்த தொழில் துவங்க மூலப்பொருளானது சென்னை, திருச்சி(பேருந்து நிலையம் அருகில்), மதுரை(மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம்), சேலம்(பழைய பேருந்து நிலையம் அருகில் கணக்கர் தெரு) இந்த பகுதிகளில் கப் சாம்பிராணி செய்வதற்கான மூலப்பொருள்கள் கிடைக்கின்றன.
இந்த மூலப்பொருளை வாங்கி நீங்களே விற்பனை செய்தால் இன்னும் அதிக லாபம் பெறலாம். அதாவது கடைகளில் சென்று கொடுக்கும் போது கடைக்கார்களுக்கு நீங்கள் 15 ரூபாய்க்கு கொடுத்தால் அவர்கள் 20 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். இதில் உங்களுக்கு 5 ருபாய் நஷ்டம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு நீங்களே சென்று விற்பனை செய்து வந்தால் அதிக லாபம் காணலாம்.
இது போன்று வித விதமான வண்ண கலர்களில் ரெடி செய்து விற்பனை செய்தால் வாடிக்கையாளர்களின் மனதில் ஆர்வம் தூண்டும். ஆன்லைனில் இந்த ஒரு பெட்டி ரூ.100/- விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. நாமும் வட மாநிலம் போல புது விதமாக விற்பனை செய்தால் அதிகமாக லாபம் அடையலாம்.
பூஜை பொருளில் முக்கியத்துவம் பெற்ற கப் சாம்பிராணி தொழிலை யோசிக்காமல் அனைவரும் செய்து இந்த தொழில் மூலம் நன்மை அடைய பொதுநலமின் வாழ்த்துக்கள்..!
அதிக லாபம் தரும் புதிய தொழில்..! Paper Box Making Business..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |