Small Business Ideas For Ladies
பொதுவாக ஒரு குடும்பம் என்றால் நிறைய அத்தியாவசிய தேவைகள் இருக்கும். அந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக குடும்பத்தில் இருந்து ஒருவர் யாரோ ஒருவரிடம் மாத சம்பளத்திற்காக வேலை செய்கிறார்கள். ஏனென்றால் அப்போது தான் நமக்கு தேவையான பணம் கிடைக்கும். ஆனால் பணம் என்பது மற்றவரிடம் மாத சம்பளத்திற்காக வேலை செய்தால் மட்டும் கிடைப்பதில்லை. நீங்களும் சொந்தமாக ஒரு தொழிலை செய்தால் அதன் மூலம் உங்களுடைய தேவைக்கு அதிகமான வருமானத்தை பெறலாம். அதுமட்டும் இல்லாமல் நீங்களும் 4 பேருக்கு வேலை கொடுக்கலாம். சரி இதை எல்லாம் யோசித்து பார்த்து தொழில் செய்யலாம் என்று நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு என்றே அருமையான ஒரு தொழில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்:
குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரக்கூடிய Rava Making Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த பொருளின் தேவை என்பது சிறிதளவும் இன்று வரை குறையாமல் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
அதனால் நீங்கள் இந்த தொழிலை செய்தால் வாழ்க்கையில் மிகவும் வேகமாக முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.
முதலீடு:
நீங்கள் Rava Making Business-ஐ தொடங்க போகிறீர்கள் என்றால் தோராயமாக 40,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
மூலப்பொருள்:
- கோதுமை- முதல் தரம்
- Mini Flour Machine – ஆரம்ப விலை 35,000 ரூபாய்
- பேக்கிங் பாலித்தீன் கவர்
இந்த தொழிலை செய்வதற்கு முன்பு கட்டாயமாக Fssai License பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ பெண்கள் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் செய்ய கூடாத தொழில்கள்
தொழில் தொடங்க தேவையான இடம்:
Mini Flour Machine-ஐ பொருத்தி வேலை செய்வதற்கு மின்சார வசதியுடன் கூடிய பெரிய அளவிலான இடம் கட்டாயமாக தேவைப்படும்.
ரவை தயாரிப்பது எப்படி..?
முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள கோதுமையை நன்றாக தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை தண்ணீரில் அலசி வெயிலில் நன்றாக 3 அல்லது 4 நாட்கள் வரை வெயிலில் காய வைத்து விடுங்கள்.
கோதுமை நன்றாக காய்ந்து பதத்திற்கு வந்தவுடன் அதனை Mini Flour Machine-ல் போட்டு மிஷினை On செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் கோதுமை நன்றாக அரைபட்டு ரவை தயாராகி வந்து விடும். இந்த மிஷினை பயன்படுத்தி 1 மணி நேரத்திற்கு 45 கிலோ வரையிலும் தயாரிக்க முடியும்.
பேக்கிங் செய்தல்:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ரவையை 1/2 கிலோ மற்றும் 1 கிலோ பாக்கெட்டில் பேக்கிங் செய்து கொள்ளுங்கள். 1/2 கிலோ ரவையின் விலை 25 ரூபாய் என்றும் மற்றும் 1 கிலோ ரவையின் விலை 50 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ரவையினை பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department Store, Wholesale, ஹோட்டல், Restaurant மற்றும் Sweet கடை ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
ஒரு நாளைக்கு நீங்கள் 1/2 கிலோ ரவை பாக்கெட்டில் 25-ம் மற்றும் 1 கிலோ ரவை பாக்கெட்டில் 25-ம் தோராயமாக விற்பனை செய்தீர்கள் என்றால் 1,875 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
அப்படி என்றால் ஒரு வாரத்திற்கு 13,125 ரூபாயும் மற்றும் ஒரு மாதத்திற்கு 56,250 ரூபாய் வரையும் தோராயமாக வருமானம் பெறலாம்.
இந்த தொழிலை பெண்கள் வீட்டில் இருந்தே செய்து அதிகமான வருமானத்தை பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒ அதிகபட்சமாக லட்சம் கணக்கில் வருமானம் தரும் இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |