இப்போ இந்த தொழில் செஞ்சா பணம் தானா தேடிவரும் | Copper Scrap Business Tamil
Small business ideas in tamil:- புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உதவும் வகையில், இந்த பதிவில் ஒரு புதிய தொழில் வாய்ப்பை பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது copper wire Scrap செய்து சுழற்சி முறையில் மறுபடியும் விற்பனை செய்வதன் மூலம், நாம் நல்ல வருமானம் பெறலாம். இந்த காப்பர் ஒயரினை பிரித்து விற்பனை செய்வது என்பது தங்கத்திற்கு நிகரான தொழிலாகும், அதேபோல் சந்தையில் அதிக வரவேற்கப்படுகிறது. எனவே இந்த தொழில் வாய்ப்பு பொறுத்தவரை படிக்காத ஆண், பெண் இருபாலரும் கூட வீட்டில் இருந்தபடியே குறைந்த மின்சார செலவிலேயே காப்பர் ஒயரை பிரித்தெடுத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். சரி இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், இதற்கான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் என்னென்ன தேவைப்படும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.
அதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் |
தேவைப்படும் இயந்திரம்:
மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் இந்த காப்பர் ஒயரினை பிரித்தெடுப்பதற்கு இயந்திரங்கள் நிறைய விற்பனை செய்யப்படுகிறது இருந்தாலும் Automatic Scrap Copper Wire Stripping Machine பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனை செயப்படுகிறது. அதாவது குறைந்தபட்ச விலையாக 40,000/- முதல் அதிகபட்சம் 1,70,000/- வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.
மூலப்பொருட்கள்:-
இந்த தொழில் துவங்க அவசியம் தேவைப்படும் மூலப்பொருள் PVC cable scrap தான் இந்த PVC ஒயர்களும் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றது. அதாவது ஒரு கிலோ PVC ஒயர்கள் 30 ரூபாய்க்கு கிடைக்கின்றது. எனவே இந்த மூலப்பொருளை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் மொத்தமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..! |
தயாரிப்பு முறை:-
இந்த Automatic Scrap Copper Wire Stripping Machine-ஐ வீட்டில் இருந்தபடியே மிக குறைந்த மின்சார செலவில் இயக்கலாம். இந்த இயந்திரத்தில் 20 வகையான ஓட்டைகள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே இயந்திரத்தை ஆன் (ON) செய்து அந்த ஓட்டைகளில் PVC ஒயர்களை நுழைத்தால் மறுபக்கத்தில் PVC ஒயர்கள் நடுவில் பிளவு ஏற்பட்டு வெளியே வெறும். பின் ஒயர் தனியாக, காப்பர் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு பிரித்தெடுத்த இரண்டையும் மறுபடியும் விற்பனை செய்யலாம்.
விற்பனை வாய்ப்பு:-
PVC ஒயர்கள் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு நேராக சென்று ஆர்டர் பெற்று தாங்கள் பிரித்தெடுத்த காப்பரினை விற்பனை செய்யலாம். அதேபோல் காப்பரை தனியாக எடுத்தபின் pvc ஒயர்கள் இருக்கும் அவற்றையும் ஒயர்கள் தயார் செய்யும் நிறுவனங்களிடம் விற்பனை செய்யலாம். சந்தைகளில் தற்பொழுது ஒரு கிலோ காப்பர் 385 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ காப்பர் உற்பத்தி செய்வதற்கு உற்பத்தி செலவு ரூபாய் 200 என்று வைத்து கொண்டால், லாபமாக நமக்கு 185 ரூபாய் கிடைக்கும்.
ஒரு நாளிற்கு 100 கிலோ காப்பர் தயார் செய்தால் மாதம் 3 லட்சம் வரை வருமானம் பெறலாம்.
இது ஒரு சாதாரணமான தொழில் என்றாலும் வீட்டில் இருந்தபடி ஒய்வு நேரங்களில் காப்பர் ஒயர்களை பிரித்தெடுத்து விற்பனை செய்வதன் மூலம் வருமானம் பார்க்கலாம்.
வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |