100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..!

Advertisement

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..! Small Scale Business Ideas in Tamil

Small Scale Business Ideas in Tamil:- நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு சுயதொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ள போகின்றோம். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட்டுக்கு சந்தையிலும் அதிக வரவேற்பு இருக்கிறது.

எனவே இந்த பதிவில் வீட்டிலேயே 100 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழில் பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம் தரும் தொழில். சரி வாங்க இந்த தொழில் பற்றிய விவரங்களை இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..?

இடவசதி:-

இந்த சாக்லேட் தயாரிப்பு தொழில் வீட்டில் இருந்தபடியே ஒய்வு நேரங்களில் செய்யலாம் என்பதால் வீட்டில் சிறிய அறை இருந்தால் போதுமானது.

முதலீடு:-

ஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய முதலீடாக தாங்கள் வெறும் 100 ரூபாய் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அதன பிறகு chocolate mold tray அவசியம் இந்த தொழிலுக்கு தேவைப்படும். இந்த அச்சுகள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் பல டிசைன்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்களுக்கு வேண்டுமென்றால் இப்பொழுதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

chocolate mould

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

இதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சர்க்கரை, food colour, corn syrup அல்லது cough syrup, பேக்கிங் கவர் இவையனைத்தும் தேவைப்படும்.

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!

சாக்லேட் தயாரிப்பு முறை:-

candy chocolate

 

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் மற்றும் இரண்டு கப் சர்க்கரைக்கு மூன்று ஸ்பூன் என்ற அளவு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். சர்க்கரை பாகானது தேன் பதத்திற்கு வந்த பிறகு ஏதாவது ஒரு food colour ஒன்றை அவற்றில் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி chocolate mould tray அச்சுகளில் ஊற்ற வேண்டும் பின் சிறிது நேரம் ஆறவிடவும். பின் அச்சுகளில் இருந்து சாக்லேட்டுகளை  தனியாக எடுத்து பேக்கிங் செய்யுங்கள். பிறகு விற்பனைக்கு அனுப்புங்கள்.

தினமும் லாபம் தரும் மிட்டாய் விற்பனை இயந்திரம்

சந்தை வாய்ப்பு:-

தாங்கள் தயார் செய்த இந்த சாக்லேட்டுகளை தங்கள் ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகள், மல்லிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். சந்தையில் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்பதால் தாங்கள் தயார் செய்யும் சாக்லேட்டுகள் மிக எளிதாக விற்பனையாகிவிடும்.

வருமானம்:-

இந்த தொழில் பொறுத்தவரை 1 கிலோ சாக்லேட்டுக்கு ரூபாய் 200 முதல் 250 வரை வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் இருந்து செய்யக்கூடிய சிறந்த சுயதொழில்.

குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் ஹோம் மேட் சாக்லேட் தொழில் 

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலைதொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல்  
Advertisement