சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி? | Supermarket Business Plan in Tamil

Supermarket Business Plan in Tamil

சூப்பர் மார்க்கெட் தொடங்குவது எப்படி? | Departmental Store Business Plan in Tamil

supermarket business ideas in tamil: இப்போது படித்து முடித்துவிட்டு பலரும் வேலை கிடைக்காமலும் அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. அதில் ஒரு சிலர் தங்களது பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக வேறொரு இடத்தில் வேலை பார்ப்பதற்கு பதிலாக சொந்தமாக தொழிலை தொடங்க வேண்டும் என்று யோசிக்கின்றனர். அந்த வகையில் அவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடும் வகையில் குறைவான முதலீட்டில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்கான ஐடியாக்களை கொடுத்துள்ளோம்.

இந்த பதிவு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சூப்பர் மார்க்கெட் தொடங்குவது எப்படி (Supermarket Business Plan in Tamil) என்று பார்க்கலாம்.

Supermarket Business Plan in Tamil:

supermarket business ideas in tamil

 • எந்த தொழிலாக இருந்தாலும் அதற்கு வாடிக்கையாளர்கள் மிகவும் முக்கியம். எனவே நீங்கள் சூப்பர் மார்க்கெட் வைக்கும் போது சற்று மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் தொடங்க வேண்டும்.
 • உதாரணத்திற்கு உங்கள் ஊரில் மெயின் ஏரியாவில் வைத்தால் நல்ல வருமானத்தை பெற முடியும். மேலும் பார்க்கிங் வசதி இருப்பது நல்லது.

இடம்:

சூப்பர் மார்க்கெட் தொடங்குவது எப்படி

 • Departmental Store Business Plan in Tamil: சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்கு உங்களிடம் இருக்கும் ஸ்டாக்ஸ் பொறுத்து இடவசதி தேவைப்படும். கிராமமாக இருந்தால் குறைந்தபட்சம் 500 Sq.ft இடம் தேவைப்படும்.
 • நகரமாக இருந்தால் 1000 Sq.ft இடம், சிட்டியாக இருந்தால் 2000 Sq.ft இடம் தேவைப்படும்.
 • பொருட்களை சேமித்து வைப்பதற்கு உங்களிடம் ஒரு குடோவுன் இருக்க வேண்டும்.

முதலீடு:

சூப்பர் மார்க்கெட் தொடங்குவது எப்படி

 • இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடு நீங்கள் கடை வைக்கும் இடம், ஊழியர்களின் சம்பளம், ஸ்டாக்ஸ் போன்றவற்றை பொறுத்து மாறுபடும். ஒரு டிபார்ட்மன்டல் ஸ்டோர் தொடங்குவதற்கு சாதாரணமாக 15 லட்சம் வரை தேவைப்படும்.
 • Shop Advance, EB Bill, Computer, Billing Scanning System, Weight Scale, License போன்றவற்றிற்கு செலவு செய்ய வேண்டி வரும்.
மளிகை கடை தொடங்குவது எப்படி? 

லாபம்:

Departmental Store Business Plan in Tamil

 • நீங்கள் விற்பனைக்கு வாங்கும் பொருட்களை கவனமாக தேர்ந்தெடுங்கள், குறிப்பாக மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் எது என்பதை பார்த்து தேர்வு செய்யுங்கள், அப்பொழுது தான் லாபம் சற்று அதிகமாக கிடைக்கும்.
 • சூப்பர் மார்க்கெட் தொழில் பொறுத்தவரை லாபம் 10% to 15% வரை கிடைக்கும்.

தேவையான ஆவணங்கள்: 

mini supermarket business plan in tamil

 • உங்கள் ஸ்டோர்க்கான Name & Address Proof
 • GST Number
 • Rental & Lease Agreement
 • FSSAI
 • Trade License
 • Current Account
 • PAN Number போன்றவை தேவைப்படும்.

தொழிலில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்:

mini supermarket business plan in tamil

 • மெம்பெர்ஷிப் பாயிண்ட் & சலுகைகள் (Membership Point & Offers). இதை நாம் பெரிய பெரிய கடைகளில் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம்.
 • வாடிக்கையாளர்களிடம் இதை கொடுத்து குறிப்பிட்ட பாயிண்ட்ஸ் வந்தவுடன் அவர்களுக்கு சலுகைகள் கொடுத்தால் வாடிக்கையளர்கள் வரவு உங்களுக்கு குறைவில்லமால் இருக்கும்.
 • வாரத்திற்கு 1 அல்லது மாதத்திற்கு ஒரு முறை Offers கொடுப்பது நல்லது. Buy 1 Get Free, Seasonal Offer போன்றவற்றை மாதத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். ஏனெனில் மக்களுக்கு offer-ல் பொருள் வாங்குவது மிகவும் பிடித்த ஒன்று.
 • உங்கள் கடையை பற்றி சோசியல் மீடியா மற்றும் உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தெரியும் படியாக விளம்பரம் செய்ய வேண்டும்.
 • Free Samples இதன் மூலம் உங்களுக்கு வாடிக்கையாளரின் வரவு அதிகரிக்கும்.
 • பண்டிகை காலங்களில் அதற்கேற்ற பொருட்களை வாடிக்கையாளருக்கு தெரியும்படி கடைகளில் வைக்க வேண்டும். இடத்தை சுத்தமாக மற்றும் வாடிக்கையாளரை நன்றாக கவனிக்க வேண்டும்.
 • இந்த டிப்ஸ்களை Follow செய்து சூப்பர் மார்க்கெட் தொடங்கினால் நிச்சயம் நல்ல லாபத்தை பெற முடியும்.
தினசரி வருமானம் தரும் Franchise தொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022