குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

Advertisement

பணம் சம்பாதிக்க எளிய தொழில்கள்| Tailoring Business Ideas in Tamil 

ஹாய் நண்பர்களே.! இன்றைய பதிவில் ஆண்கள், பெண்கள் என்று இருவருமே செய்ய கூடிய தொழிலை பற்றி தான் காணப்போகிறோம். அது என்ன தொழில் என்று யோசிக்கிறீர்களா.! “கைத்தொழில் ஒன்றை கற்று கொள் கவலை இல்லை ஒத்துக்கொள்” என்று பழமொழி இருக்கு தெரியுமா நண்பர்களே. நமக்கு எதாவது ஒரு கை தொழில் இருந்தால் போதும் எந்த ஊருக்கு சென்றாலும் நமக்கு பயன் உள்ளதாக இருக்கும். அந்த வகையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லாருமே வாங்கிய உடை அல்லது தைக்காத துணி அனைத்துமே தையல்காரரிடம்  கொடுத்து சரியான அளவிற்கு பிடித்துவிட்டு தான் போடுவார்கள். அதனால் உங்களுக்கு துணி தைக்க தெரிந்தால் போதும் தினமும் சம்பாதிக்கலாம் வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க சிறந்த தொழில்கள்

வீட்டில் இருந்து தையல் வேலை:

வீட்டில் இருந்து தையல் வேலை

தையல் தொழிலுக்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலே இருந்தே இந்த தொழிலை செய்யலாம். அதற்கு உங்களுக்கு சுடிதார், Blouse, சட்டை, Pant போன்றவை  தைக்க தெரிந்தால் போதும். இல்லையென்றால் Blouse மட்டும் தைக்க தெரிந்தாலே போதும்.

தையல் தொழில்:

  • இந்த தொழில் செய்வதற்கு ஒரு தையல் மிஷின், ஊசி, நூல், கத்தரிக்கோல் மட்டும் தேவையான பொருட்கள் ஆகும். இவை எல்லாம் வாங்குவதற்கு ஒரு 6,500 ரூபாய் வரும்.

தையல் தொழில்

  • நீங்கள் ஒரு சுடிதார் தைத்தால் 300 ரூபாய் சம்பாதிக்கலாம். அதுவே ஒரு மாதத்திற்க்கு 20 சுடிதார் தைத்தால்  6000 ரூபாய் சம்பாதிக்கலாம். தையல் தொழில்
  • ஒரு Blouse தைத்தால் 200 ரூபாய் அதுவே ஒரு மாதத்திற்கு 40 Blouse தைத்தால் 8000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

தையல் தொழில்

  • ஒரு சட்டை தைத்தால் 200 ரூபாய் அதுவே ஒரு மாதத்திற்கு 20  தைத்தால் 4000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
  • இதுவே ஒரு திருமண பெண் அல்லது பையனுக்கு தைத்து கொடுத்தால் அதிகமாக வாங்கி கொள்ளலாம். எப்படியென்றால் நல்லா  Grand-ஆக தைத்து கொடுப்போம அப்படி தைத்துக்கொடுக்கும் போது ஒரு Blouse -க்கு 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
  • இப்படி நீங்கள் தைத்து கொடுத்தால் குறைந்தபட்சம் மாதம்  20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
  • சாதாரண நாட்களை விட தீபாவளி, பொங்கல், ரம்ஜான் இன்னும் பல விசேஷ நாட்களில் நல்லா சம்பாதிக்கலாம். நீங்கள் தையல் தொழிலை செய்தால் எந்த காலத்திலும் நஷ்டமே ஆகாது.
  • தையல் தெரிந்தவர்கள் தையல் தொழிலை ஆரம்பியுங்கள். தையல் தொழில் தெரியாதவர்கள் தையல் பயிற்சி சென்று கற்று கொன்டு தொழிலை ஆரம்பித்து வாழ்வில் வெற்றியை நோக்கி செல்லுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022

 

Advertisement