கடை போட்டால் போதும் தினமும் 2000 சம்பாரித்துவிடலாம் இயந்திரம் விலை வெறும் 1599 ரூபாய் மட்டுமே..!

Advertisement

உங்கள் ஊரிலேயே செய்ய கூடிய சுயதொழில் | Toronto Potato Chips Business in Tamil 

ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. புதுசா ஏதாவது தொழில் தொடங்க.ணும்ணு ஆசைப்படுறீங்களா? அதுவும் குறைந்த முதலீட்டில், அப்படின்னா இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இந்த பதிவு முழுக்க முழுக்கு உங்களுக்காக தான். ஆம் நண்பரே நீங்கள் உங்கள் ஊரிலேயே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த கடையை போட்டாலே போதும். தினமும் 2,000 ரூபாய் வரை லாபம் பெறலாம் சரி வாங்க அது என்ன தொழில், எவ்வளவு முதலீடு தேவைப்படும் போன்ற தகவல்களை இப்பொழுது பார்த்துவிடலாம்..

என்ன தொழில்?

மக்கள் பொதுவாக மாலை நேரங்களில் நாக்கிற்கு சுவையான திண்பன்டங்களை சாப்பிட விரும்புகின்றான். இது அனைத்து ஊர்களுக்கும் பொருந்தும். ஆக உங்கள் ஊரிலேயே Toronto Potato Chips Business ஆரமிச்சிங்கான தினமும் நல்ல வருமானத்தை பெற முடியம். இந்த Toronto Potato Chips-ஐ  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்புவார்கள். ஆக மக்களுக்கு பிடித்த சுவையில் நீங்கள் இந்த Toronto Potato Chips-ஐ தயார் செய்து கொடுத்தீர்கள் என்றால் தினம்தோறும் நல்ல வருமானத்தை பெற முடியும்.

toronto potato chips

Toronto Potato Chips என்பது வேறு ஒன்று இல்லை மேல படத்தில் உள்ளது தான். இதனை தயார் செய்வதற்கும் இயந்திரம் இருக்கிறது. ஒன்றும் பெரிய அளவில் வேலைகள் எல்லாம் இருக்காது.

இயந்திரம்:

potato twister machine

இந்த தொழில் தொடங்க அவசியம் Potato Spiral Cutter Machine தேவைப்படும் இதன் விலை 1599 ரூபாய் மட்டுமே. இந்த தொழிலை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்றால் கூட இந்த இயந்த்த்திரத்தை பெரிதாக வாங்கிக்கொள்ளலாம். பெரிதாக வாங்க வேண்டும் என்றாலும் கூட அந்த இயந்திரத்தின் விலை 12,000/- தான் இருக்கும்.

இந்த இயந்திரம் வாங்க நினைப்பவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யலாம் 👉👉👉 https://www.amazon.in/

இயந்திரம் பயன்படுத்தும் முறை ஒன்றும் கடினமான வேலை இல்லை. உருளைக்கிழங்கை நன்கு சுத்தம் செய்து அதன் தோல் பகுதியை மட்டும் சீவிவிடுங்கள். பிறகு இயந்திரத்தல் வைத்து ரோல்  செய்தாலே போதும் அழகாக சிப்ஸ் மாதிரி வந்து விடும்.

பிறகு அதனது எண்ணெயில் பொரித்து மசாலா பொருட்கள் மற்றும் ஜாஸ் ஊற்றி விற்பனை செய்ய வேண்டியது தான். சிப்ஸினை பலவகையான சுவைகளில் தயார் செய்து விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வாங்கும் விலை 200 விற்கும் விலை 800 வீட்டில் இருந்து லாபம் பெறுவதற்கு இது அருமையான தொழில்..!

இடம்:

இந்த தொழில் பொறுத்தவரை மக்கள் கூடம் அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்ய வேண்டும். அதாவது பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன், பார்க், பீச், தியேட்டர், மால் இது போன்று மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதுவும் தள்ளுவண்டி கடை போட்டால் கூட போதும்.

மூல பொருட்கள்:

மூலப்பொருட்கள் என்றால் உருளைக்கிழங்கு மட்டும் தான் அதிகம் தேவைப்படும். அதன் பிறகு எண்ணெய், சாஸ், ஸ்டிக் மற்றும் மசாலா பொருட்கள் தேவைப்படும் அவ்வளவு தான்.

முதலீடு:

முதல் முறையாக தொழிலை ஆரம்பிக்கும் போது இயந்திரம், டேபிள், தள்ளுவண்டி மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வாங்குவதற்கு 50 ஆயிரம் வரை தேவைப்படும்.

வருமானம்:

நீங்கள் தயார் செய்த ஒரு Toronto Potato Chips-யே நீங்கள் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஒரு நாளுக்கு 50 சிப்ஸ் விற்றுவிட்டீர்கள் என்றாலே உங்களுக்கு 2500 ரூபாய் வரை வருமானம் வரும். இதில் செலவு 500 ரூபாய் என்று வைத்துகொண்டலும் கூட மீதம் 2000 ரூபாய் லாபமாக கிடைக்கும்.

விருப்பம் இருந்தால் உங்கள் ஊரில் இந்த தொழிலை தொடங்கி வெற்றிபெறுங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 கொஞ்சம் உழைத்தால் போதும் 10 நாளில் 1 லட்சம் வரை சம்பாரித்துவிடலாம் .. அருமையான சுயதொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement