முதலீடு இல்லை தினமும் 3 மணி நேரம் வேலை! ​Used Oil-க்கு இவ்ளோ Demand -ஆ? வீட்டிற்கே வந்து பணம் தரும் Uranus Oil Corporatio

Used Cooking Oil Business Tamil

Used Oil-க்கு இவ்ளோ Demand -ஆ? வீட்டிற்கே வந்து பணம் தரும் Uranus Oil Corporation | Used Cooking Oil Business Tamil

புதிதாக பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு நினைக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றித்தாங்க பார்க்க போகிறோம். அதாவது நீங்கள் தினமும் வெறும் மூன்று மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும், அடந்த வேலைக்கு கையோட பணத்தை வாங்கிவிடலாம் அருமையான தொழில் தான். அது போக இந்த தொழிலை செய்பவர்களுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும், பயிற்சியும் கிடைக்கும்னு சொல்லப்படுது. சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் படிக்கலாம்.

Used Cooking Oil Business Tamil:

உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவு எண்ணெயை பயன்படுத்துகின்றோமாம். ஆக ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்திய எந்த ஒரு சமையல் எண்ணெய்யைக இருந்தாலும் சரி அதனை மறுமுறை பேயன்படுத்தினோம் என்றால். அது நமது உடலுக்கு பல வகையான உடல் சரிந்த ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

ஆகவே நிறுவங்கள் மற்றும் தனிப்பட்ட வீடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை சேகரிக்க FSSAI அங்கீரிக்கப்ட்ட நிறுவங்களை நியமித்துள்ளது. அந்த வகையில் யுரேனஸ் ஆயில் கார்ப்பரேஷன் (Uranus Oil Corporation) FSSAI-யின் RUCO திட்டத்தின் கீழ் பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிக்க பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும்.

ஆக உங்களை தினமும் பயன்படுத்திய எண்ணெய்யை சேகரிக்க முடியும் என்றால் என்றால் இந்த தொழிலை நீங்கள் இன்றே ஆரம்பிக்கலாம். இதற்கு நீங்கள் எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

உங்களது உழைப்பு மட்டும் தான் முதலீடு. ஆக உங்கள் ஊரில் உள்ள ஹோட்டல், ரெஸ்ட்ராண்ட், சமையல் செய்யும் அனைத்து இடங்களிலும் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை சேகரிக்கலாம். அவர்கள் அந்த எண்ணெயை வீணாக குப்பையில் தான் கொட்டுவார்கள், ஆக அதனை சேகரித்து நீங்கள் Uranus Oil Corporation நிறுவனத்திடம் கொடுத்தீர்கள் என்றாலே போதும் அதன் மூலம் நீங்கள் மிக எளிதாக சம்பாதிக்கலாம்.

இந்த பயன்படுத்திய சமையல் எண்ணெயை 1 லிட்டரை 5 முதல் 10 ரூபாய்க்கு வாங்கி. அதனை 15 முதல் 25 ரூபாய் வரை Uranus Oil Corporation நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடியும். 100 லிட்டர் பயன்படுத்திய எண்ணெயில் இருந்து நீங்கள் கிட்டத்தட்ட 2,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஒரு டன் பயன்படுத்திய சமையல் எண்ணெய்க்கு 10 ஆயிரமும் முதல், 20 ஆயிரம் வரை பணம் சம்பாதிக்க முடியும். இந்த விலை நிலவரம் முற்றிலும் தோராயிரமானது Uranus Oil Corporation-யில் விலை நிலவரத்தை பற்றி முழுமையாக விசாரித்துக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 பெண்கள் உங்கள் வீட்டில் இருந்து வாரம் 20,000 சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022