வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை யார்வேண்டுமானாலும் செய்யலாம்.

home business in tamil

வீட்டில் இருந்து செய்யும் தொழில்

வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் ஒரு அருமையான பயனுள்ள தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.  இந்த தொழில் வீட்டில் இருந்தபடியே கல்லூரி மாணவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்  அனைவரும் இந்த தொழில் செய்யலாம். இவை ஒரு அழிவே இல்லாத தொழில் என்றும் சொல்லலாம். மேலும் இவை என்ன தொழில் என்றும் அவற்றை செய்வதற்கு தேவைப்படும் மூலப்பொருள்கள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்தால் மாதம் 50,000 ரூபாய் வரையும் வருமானமாம் .!

தேவைப்படும் இடவசதி:

இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு பத்துக்கு பத்து இடம் இருந்தாலே போதும் இதை உங்கள் வீட்டிலேயே செய்யலாம். மேலும் இந்த தொழிலை தொடங்கிய பிறகு நல்ல லாபம் கண்ட பிறகு தனியாக ஒரு கடை அமைத்து விற்பனை செய்து வரலாம். அப்படி என்ன தொழிலா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா.!

Clamp Making Business inTamil:

இன்று நம் தெரிந்து கொள்ளப்போகும் பிசினஸ் என்னவென்றால் Clamp  (பிடிக்கருவி) இவற்றை எப்படி தயாரிப்பது என்று தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இவை அதிகமாக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாகும். பொதுவாகவே இவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது வீடு, பள்ளி, கல்லூரி போன்ற கட்டுமானங்களுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

PVC Clamp Making Machine in Tamil:

இந்த Clamp ஆனது ஒவ்வொரு அளவில் கிடைக்கிறது. அதாவது சிறிய அளவில் இருந்து பெரிய அளவுகள் வரையும் இருக்கிறது. இந்த பிடிக்கருவிகளை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள்கள் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மெஷின் பெயர் Hydraulic ஆட்டோமேட்டிக் மெஷின் ஆகும். இவற்றை நீங்க ஆன்லைன் மூலமாக குறைந்த விலைகளில் வாங்கிக் கொள்ளலாம். இந்த மெஷின் மூலம் நீங்கள் சுலபமாக பிடிக்கருவிகளை தயாரிக்கலாம்.  உங்களுக்கு இந்த பிடிக்கருவிகளை தயாரிப்பதற்கு  இந்த மெஷின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்ததாக பிடிக்கருவிகளை தயாரித்த பிறகு அதனுடைய இரண்டு  பக்கத்திற்கும் ஓட்டைகள் போடுவதற்கு ஒரு மெஷின் உள்ளது. அவற்றையும் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு கட்டிங் மெஷின் தேவைப்படுகிறது. இந்த மூன்று மெஷின்கள் இருந்தால் பிடிக்கருவியை சுலபமாக தயாரித்து விடலாம்.

தேவைப்படும் முதலீடு:

இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு தேவைப்படும் முதலீடு  1,50,000 ரூபாய்  தேவைப்படுகிறது. நீங்கள் வாங்கும் மெஷின்களின் விலையை கொண்டு தான் முதலீடு இருக்கிறது. அதாவது Hydraulic Press Machine – Rs.1, 50,000, Vertical Drilling Machine – Rs.20,000, Material and Transport and Rent – Rs.1,00,00 மொத்தமாக மூன்று லட்சம் தேவைப்படுகிறது.

விற்பனை செய்யும் முறை:

இந்த பிடிக்கருவிகளை தயாரித்த பிறகு ஆன்லைன் மூலமாகவும் அல்லது கட்டுமான தொழில் செய்பவர்கள், கடைகளுக்கு விற்பனை செய்து அதிகமான லாபத்தை பெறலாம். நீங்கள் விற்கும் விலையை பொறுத்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022