பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் எல்லாரும் வீட்டிலும் பெண்களை வேலைக்கு செல்வதில்லை, காரணம் வீட்டில் வயதானவர்கள், குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேலைக்கு போக மாட்டர்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லும் பெண்களை பார்த்து நம்மால் வேலைக்கு செல்ல முடியவில்லையே வீட்டில் இருந்து செய்ய தொழில் ஏதும் இருந்தால் செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் உதவிடும் வகையில் இந்த பதிவில் சில வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில்களை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் தொழிலை ஆரம்பியுங்கள்.
Homemade Business Ideas for Women:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Tuition Centre:
முன்னடியெல்லாம் நூறில் ஒரு நபர் டியூஷனுக்கு செல்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அனைவருமே டியூஷனுக்கு செல்கிறார்கள். அதனால் நீங்கள் ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த தொழிலை நீங்கள் ஆரம்பிக்கலாம். இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே இடம் இருந்தாலே போதுமானது. தனியாக ஒரு பாடத்தில் சிறந்து விளங்குவேன் என்றால் அந்த பாடத்தையும் மட்டும் எடுக்கலாம். இதற்கு நீங்கள் எடுக்கும் பாடம் மற்றும் வகுப்பை பொறுத்து வருமானம் மாறுபடும். மேலும் இந்த தொழிலை முழு நேரம் செய்ய தேவையிருக்காது. காலை அல்லது மாலை நேரத்தில் 2 மணி நேரம் எடுத்தால் போதுமானது.
ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
Stitching Business at Home:
தையல் தொழில் என்றுமே அழியாத தொழில். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம். இந்த தொழிலை செய்வதற்கும் தனியாக இடம் தேவையில்லை. மேலும் முழு நேரமும் செய்ய தேவையில்லை. நீங்கள் Free-ஆ இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்யலாம். உங்களுக்கு blouse அல்லது sudithar, shirt, போன்றவை தைக்க தெரிந்துருந்தாலே போதுமானது. இவ்வை எல்லாமே தெரியாது ஒன்று மட்டும் தான் தெரியும் என்றாலும் தாராளமாக செய்யலாம். தோராயமாக ஒரு Blouse தைப்பதற்கு 100 ரூபாய் வாங்குகிறார்கள், அதுவே லைனிங் வைத்து தைத்தால் ஒரு தொகையும், டிசைன் வைத்து தைத்தால் ஒரு தொகையும் வாங்குகிறார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை செய்தால் மாதந்தோறும் 4000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
Food Business at Home:
உணவு தொழில் எந்த காலத்திலேயும் நம்மை கைவிடாது. நீங்கள் நினைக்கலாம் இந்த தொழிலுக்கு தனியாக கடையாக தான் வைக்க வேண்டியிருக்கும். இந்த தொழிலை நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம், அதாவது உங்கள் ஊர் அல்லது பக்கத்தில் ஊரில் வெளிஊரிலுந்து வந்து தனியாக ரோமம் எடுத்து தங்கியிருப்பார்கள். அவர்கள் உணவிற்கு தனியாக ஹோட்டலில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். அவர்களிடம் நீங்கள் உணவு தொழிலை ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு மூன்று வேலையும் உணவு சமைத்து கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு நபரிடமிருந்து ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானமாக பெற்று கொள்ளலாம். அப்போ ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய் சம்பாதிக்கலாம். ஒரு 5 நபர்களுக்கு சமைத்து கொடுத்தால் மாதம் 15000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |