வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மூலிகை செடிகள் ஏற்றுமதில் அதிக இலாபம் பெறலாம்..!

Updated On: September 29, 2023 12:25 PM
Follow Us:
இயற்கை விவசாயம்
---Advertisement---
Advertisement

மூலிகை செடிகள் ஏற்றுமதில் அதிக இலாபம் பெறலாம்..!

இயற்கை விவசாயம் – இயற்கை விவசாயத்தில் மூன்று மூலிகை செடிகளை எப்படி பயிரிடுவது என்பதை இவற்றில் நாம் காண்போம். மேலும் இந்த மூலிகை பொருட்களை சாகுபடி செய்து ஏற்றுமதியில் அதிக இலாபம் பெற இயலும். குறிப்பாக அதிக தண்ணீர் தேவைப்படாது. அதிக வேலையாட்களும் தேவையில்லை. ஒரு வேலையாட்கள் இருந்தாலே போதும். மேலும் அனைத்து பருவகாலத்தில் செழிப்பாக வளரகூடிய பயிர்கள் ஆகும். அதிக களை எடுக்கும் பிரச்சனையும் இந்த சாகுபடியில் இருக்காது.

சரி வாங்க என்ன அந்த மூன்று மூலிகை செடிகள் என்று இவற்றில் நாம் காண்போம்.

அதாவது மருதாணி, ஆடாதோடை மற்றும் தூதுவளை ஆகியவற்றை எப்படி பயிரிடுவது என்று இவற்றில் நாம் காண்போம்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

 

முதலில் மருதாணி எப்படி சாகுபடி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.

மூலிகை செடிகள் ஏற்றுமதி – இயற்கை விவசாயம் – இரகங்கள்:

மருதாணியில் இரண்டு இரகங்கள் இருக்கின்றன முள்ளிருக்கும் மருதாணி மற்றும் முள் இல்லாத மருதாணி.

இவற்றில் முள்ளில்லாத மருதாணி செடி சாகுபடிக்கு ஏற்ற இரகமாகும்.

இயற்கை விவசாயம் – பருவ காலம் மற்றும் நிலம்:

அனைத்து பருவ காலத்திலும் மற்றும் அனைத்து நிலங்களிலும் நன்றாக பயிரிடலாம்.

மூலிகை செடிகள் ஏற்றுமதி – இயற்கை விவசாயம் – நடவு முறை:

விதை அல்லது போத்து வைத்து செடிகளை நடவு செய்யலாம்.

விதை மூலமாக நடவு செய்யதால் 20 சதவீதம் அளவே மருதாணி வளர்ச்சி அடைகிறது.

ஆனால் போத்து வைத்து மருதாணி செடிகளை பயிரிட்டால் 80 சதவீதம் அளவிற்கு நன்றாக வளர்ச்சி அடைகிறது.

எனவே போத்து வைத்து நடவு செய்யும் முறை சிறந்தது.

ஒரு ஏக்கருக்கு 1200 போத்துகள் தேவைப்படும்.

இரண்டு அடிக்கு இரண்டடி இடைவெளியில் போத்துகளை நடவேண்டும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

இயற்கை விவசாயம் – நீர் நிர்வாகம்:

வறட்சி காலத்திலும் நன்கு வளரக்கூடிய பயிர் என்பதால் அதிக தண்ணீர் தேவையில்லை.

இருப்பினும் நடவு செய்த காலத்தில் இருந்து செடிகள் நன்கு வளரும் வரை தினமும் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.

செடி நன்கு வளர்ந்தபிறகு வாரத்தில் ஒரு முறை மட்டும் தண்ணீர் தெளித்தால் போதும்.

மூலிகை செடிகள் ஏற்றுமதி – இயற்கை விவசாயம் – உரங்கள்:

இதற்கு இயற்கை உரமான மாட்டு சாணம், ஆட்டு சாணம், கோழி சாணம் மற்றும் சமையலறை கழிவுகள் ஆகியவற்றை உரமாக பயன்படுத்தினாலே போதும் பயிர் நன்றாக வளரும்.

இயற்கை விவசாயம் – பயிர் பாதுகாப்பு:

ஆறு மாதத்திற்கு ஒரு முறை களை நிர்வாகம் செய்தால் போதும்.

நோய் தாக்குதல்கள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் இந்த பயிரில் ஏற்படாது.

மூலிகை செடிகள் ஏற்றுமதி – இயற்கை விவசாயம் – அறுவடை:

நன்றாக வளர்ந்து வந்த மருதாணி இலைகளை அறுவடை செய்யலாம்.

சந்தையில் மருதாணியை கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூதுவளை மற்றும் ஆடாதோடை பயிரிடும் முறை:

ஆடாதோடை மற்றும் தூதுவளை ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பயிராக விளங்குகிறது. குறிப்பாக இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

ஆடாதோடை மற்றும் தூதுவளை சாகுபடியை பொறுத்தவரை அனைத்து பருவத்திலும் மற்றும் அனைத்து நிலங்களிலும் சாகுபடி செய்யக்கூடிய பயிராகும்.

போத்து மூலமாகவே நடவு செய்கின்றன.

இரண்டடிக்கு, இரண்டடி இடைவெளியில் போத்துகளை நடவு செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 1200 போத்துகள் சாகுபடிக்கு தேவைப்படும்.

உரங்களாக மேல் கூறிய இயற்கை உரங்களே போதுமானது.

நடவுக்கு பின் ஒரு முறை உயிர் தண்ணீர் இட வேண்டும் பின்பு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

குறிப்பு:

மூலிகை ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவு மூலிகை செடிகள் ஏற்றுமதி செய்கின்றன. எனவே ஏற்றுமதிக்கு அதிகளவு தேவை இருப்பதினாலும் மற்றும் சித்த மருத்துவத்திற்கு அதிகளவு பயனுள்ளதாக இருப்பதினாலும் மூலிகை செடியை சாகுபடி செய்தால் அதிக இலாபம் பெற இயலும்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயறக்கை விவசாயம்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Tulsi Plant Fertilizer Homemade in Tamil

இந்த உரத்தை போட்டால் காய்ந்த துளசி செடி கூட ஒரே வாரத்தில் தளதளவென்று செழித்து வளரும்.!

இயற்கை விவசாயம் – பிளம்ஸ் பழம் சாகுபடி..!

ஊடுபயிர் விவசாயம்

ஊடுபயிர் விவசாயம் | எந்த பயிரில் என்ன ஊடுபயிர்? | Intercropping advantages

Kohlrabi cultivation

நூக்கல் வளர்ப்பு மற்றும் நூக்கல் பயன்கள்..!

சோயா மொச்சை சாகுபடி

இயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..!

How to Grow Garlic Plant at Home in Tamil

ரொம்ப ஈஸியா இனி வீட்டிலேயே பூண்டு செடி வளர்க்கலாம்!!! How to Grow Garlic Plant at Home in Tamil

Guava Tree Fertilizer in Tamil

காய்க்காத கொய்யா மரமும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு உரம் மட்டும் போதும்..!

குச்சியாக இருக்கும் ரோஜா செடி கூட 3 நாட்களில் துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இந்த ஒரு கரைசல் போதும்..!

Fertilizer For Kakkattan Plant in Tamil

காக்கட்டான் செடி அதிகமா பூக்க இந்த உரம் மட்டும் போதும்..!