நூல்கோல் சாகுபடி & Kohlrabi cultivation
Kohlrabi cultivation:- மலைபிரேதேசங்களில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படும் காய்கறி வகைகளில் நூக்கலும் ஒன்று. முட்டைகோஸ், காலிஃப்ளவர், பீட்ருட், கேரட் போன்ற இங்கிலிஷ் காய்கறி வகைகளில் நூக்கலுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த நூக்கலில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. சரி இந்த பதிவில் நூக்கல் சாகுபடி முறை மற்றும் நூக்கல் பயன்கள் மற்றும் இதன் மூலம் எவ்வளவு லாபம் பெறலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறிவோம் வாங்க..!
சொட்டு நீர் பாசனம் அரசு மானியம் 100%..! |
நூக்கல் காய் எப்படி பயிரிடுவது? | Kohlrabi cultivation
இரகங்கள்:-
மலைப்பகுதிகளில் பர்பில் டாப், ஒயிரிகுளோப், சுனோபால் போன்ற இரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
சமவெளிப்பகுதிகளில் பூசா சந்திரீமா, பூசா சுவேதா, பூசா காஞ்சன் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
நிலம்:-
நூக்கல் வளர்ப்பு பொறுத்தவரை அனைத்து வகை பகுதிகளிலும் வளரக்கூடியது. குறிப்பாக செம்மண் நிலத்தில் நூக்கல் நன்கு வளரும் தன்மைகொண்டது.
பருவகாலம்:-
நூக்கல் மார்கழி மாதங்களில் நன்கு வளரக்கூடியது எனவே, மார்கழி மாதம் நூக்கல் சாகுபடிக்கு சிறந்த பருவக்காலமாகும்.
விதையளவு:-
நூக்கல் சாகுபடி பொறுத்தவரை இரண்டு முறைகளில் சாகுபடி செய்யலாம்.
நாற்று நடவு முறை மூலம் நூக்கல் சாகுபடி செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படும்.
நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 650 கிராம் விதைகள் தேவைப்படும்.
அதிக பரப்பளவில் நோக்கல் சாகுபடி செய்வதாக இருந்தால் நேரடி விதைப்பு முறைதான் ஏற்றதாகும்.
கட்டிங் மூலமாக ரோஜா செடி வளர்ப்பது எப்படி? |
நாற்று உற்பத்தி:-
நாற்று நடவு முறையில் சாகுபடி செய்வதாக இருந்தால், குழித்தட்டுகளில் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். குளித்தட்டில் தேங்காய் நார், மண்புழு உரம் ஆகியவற்றை சேர்த்து நிரப்பி விதைகளை ஊன்ற வேண்டும்.
அதன் பிறகு தினமும் பூவாளி கொண்டு குளித்தட்டுகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். 25 நாட்களில் குளித்தட்டுகளில் நாற்றுகள் தயாராகிவிடும்.
நிலம் தயாரிப்பு:-
நூக்கல் சாகுபடிக்கு நிலம் தயாரிப்பு பொறுத்தவரை ஒரு கிலோ கொம்புசானம் அல்லது ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஷ்போ – பாக்டீரியா மற்றும் 10 டன் தொழுவுரம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தூவி இரண்டு சால் உழவு ஓட்டி, பார் பாத்திகளை அமைக்க வேண்டும்.
விதைப்பு முறை:-
நூக்கல் சாகுபடி பொறுத்தவரை நாற்று நடவு மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் 4 அங்குல இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் தானியங்களை விதைப்பது போல் நூக்கல் விதையை சாகுபடி நிலத்தில் தூவ வேண்டும். விதைத்த பின் டிரக்ட்டரிலோ, ஏர் கலப்பையிலோ நிலத்தை சமன் செய்து, நீர் பாசனம் செய்ய வசதியாக, பார் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொருத்து பாரின் அளவை அமைத்துக் கொள்ளலாம்.
நீர் மேலாண்மை:-
நூக்கல் சாகுபடி பொறுத்தவரை நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்ய வேண்டும்.
ஊடுபயிர் விவசாயம் | எந்த பயிரில் என்ன ஊடுபயிர்? |
உரங்கள்:-
நடவு செய்த 8-ம் நாள், ஒரு ஏக்கருக்கு 4 டேங்க் (10 லிட்டர்) வேப்பங்கொட்டைக் கரைசலை (100 லிட்டர் நீரில் 3 கிலோ பச்சை வேப்பங்கொட்டையை நசுக்கி 3 நாட்கள் ஊற வைத்த கரைசல்) தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிப்பதினால் வெட்டுப்புழு, வேர்களை தாக்குகின்ற வெள்ளைப் புழு, கருப்புப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
நடவு செய்த 35-ம் நாட்களில் ஒன்றரை டன் மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.
45-ம் நாளுக்கு மேல், பாத்திக்கு ஒரு லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் (40 கிலோ கடலை பிண்ணாக்கு, 60 கிலோ ஆமணக்கு பிண்ணாக்கு, 100 கிலோ பசுஞ்சாணம், 3 கிலோ வெல்லம் ஆகியவற்றை 300 லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்த கரைசல்) தெளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்..!
களை நிர்வாகம்:-
நூக்கல் விவசாயம் பொறுத்தவரை களைகள் வளர்வதைப் பொறுத்து விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். களை எடுக்கும்போதே ஒவ்வொரு செடிகளுக்கும் 3 அங்குலம் அல்லது 4 அங்குலம் இடைவெளி இருப்பது போல் அதிகப்படியான செடிகளை கொத்திவிட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:-
நூக்கல் சாகுபடி பொறுத்தவரை இலைப்புள்ளி நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த நடவு செய்த 15 மற்றும் 45-ம் நாட்களில் பத்து லிட்டர் நீரில், 100 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை:-
நூக்கல் நடவு செய்த 45 நாட்களுக்கு மேல் 60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாரிக்கிவிடும். செடிகளை வேரோடு பறித்து, வேர்களை முறுக்கி பிடுங்க வேண்டும். மேற்பகுதியில் இருக்கின்ற இலைகளை ஒடித்து அப்படியே மூட்டைக்குள் வைக்கலாம். நன்றாக விளைந்திருந்தால் ஒரு கிழங்கு 1/4 கிலோ அளவு இருக்கும்.
இது வரை நூல்கோல் சாகுபடி செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டோம். இப்பொழுது நூல்கோல் பயன்கள் பற்றி சிலவற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நூக்கல் காய் பயன்கள்..! Kohlrabi benefits health..!
- நூக்கல் அதிகம் உணவில் சேர்த்து கொள்வதினால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும்.
- நூல்கோல் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
- குடல் நலன்களை உறுதிப்படுத்தும் மேலும் எலும்புகளை உறுதியாக்கும்.
- நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் நூக்கல் சேர்த்து கொள்வதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.
- நூக்கல் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும் தன்மை கொண்டது.
- குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |