சப்போட்டா சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..! Sapodilla cultivation..!

Advertisement

சப்போட்டா சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..! Sapodilla cultivation..!

இன்று இயற்கை விவசாயம் பகுதியில் சப்போட்டா சாகுபடி (Sapodilla cultivation) செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.. சப்போட்டா வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யக்கூடிய பழமாகும். தற்போது உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா பழம் அதிக அளவில் உற்பத்தியாகினறது. இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, போன்ற வெப்பமண்டல நாடுகளிலும் சப்போட்டா அதிகமாக விளைகிறது.

சரி இந்த பதிவில் சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..

நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..! Agriculture tools names in tamil..!

சப்போட்டா சாகுபடி முறை / Sapodilla cultivation – பருவகாலம்:

இந்த  சப்போட்டா சாகுபடி முறைக்கு பொதுவாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றது ஆகும்.

சப்போட்டா சாகுபடி முறை / Sapodilla cultivation – நிலம்:

சப்போட்டா எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.

சாகுடி செய்ய தேர்வு செய்த நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு அதில் 8 மீட்டர் இடை வெளியில் 60 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் ஒரு கிலோ மக்கிய தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, மேல் மண் போட்டு, 10 நாட்களுக்கு ஆறவிட வேண்டும்.

சப்போட்டா சாகுபடி முறை / Sapodilla cultivation – நடவு முறை:-

ஒட்டுக்கட்டிய செடிகள் தான் நடவுக்கு பயன்படுகிறது.

ஒட்டுகட்டிய சப்போட்டா கன்றுகளை குழியின் நடுவில் ஒட்டுப்பகுதி தரைமட்டத்திலிருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்கு குச்சி நட்டு தளர்வாகக் கட்டி விட வேண்டும். இதனால் செடிகள் சாய்ந்து விடாமல் பாதுகாக்கப்படும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! Malligai Poo Valarpu in Tamil..!

சப்போட்டா சாகுபடி முறை / Sapodilla cultivation – நீர் நிர்வாகம்:-

செடி நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் ஒருவாரம் அல்லது 10 நாள் இடைவெளியில் தேவைக்கேற்ப தண்ணிர் பாய்ச்ச வேண்டும்.

காய்ப்புக்கு வந்த மரங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை 10 கிலோ தொழுவுரம் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒவ்வொரு செடியை சுற்றிலும் மண் வைத்து அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்து பராமரிப்பதினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

சப்போட்டா சாகுபடி முறை / Sapodilla cultivation – அறுவடை காலம்:

முதிர்ந்த காய்கள், வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் சதைப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருப்பது அறுவடைக்கான அறிகுறி ஆகும்.

சப்போட்டா சாகுபடி முறை / Sapodilla cultivation – மகசூல்:-

ஒரு வருடத்தில் ஒரு ஏக்கருக்கு 25 டன் பழங்கள் வரை மகசூலாக கிடைக்கும்.

சப்போட்டா பழம் மருத்துவ குணம்

சப்போட்டா நன்மை: 1

இந்த சப்போட்டா பழத்தை அரைத்து அதன் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று சம்பந்தமான கோளாறுகள், வயிறு வலி ஆகியவை குணமாகும்.

சப்போட்டா நன்மை: 2

இந்த சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்க உதவும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..! Chendu Malli Sagupadi in Tamil..!

 

சப்போட்டா நன்மை: 3

சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.
சப்போட்டா பழத்தைத் தொடந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றை போக்கும். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் குடல் புற்று நோய் ஏற்படாது.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement