தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..!

Advertisement

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் ..!

சிலருக்கு அவர்களது வீட்டில் தோட்டம் அமைப்பது மிகவும் பிடிக்கும், அந்த தோட்டத்தில் அதிகமாக காய்கறிகள், பூச்செடிகள், கொடிவகைகள் என்று அனைத்தையும் வளர்த்து மகிழ்வார்கள்.

இருந்தாலும் அந்த தோட்டத்தை பராமரிப்பது எப்படி என்று தெரியாமல் குழம்புவார்கள்.

பொதுவாக செடிகளை தோட்டத்தில் நட்டு அதற்கு தினமும் தண்ணீர் தெளித்தால் மட்டும் போதும், செடி நன்றாக வளந்துவிடும் என்று நினைப்பது தவறு.

செடிகள் நன்றாக வளரவேண்டும் என்றால், அதற்கு நல்ல பராமரிப்பும் மிகவும் அவசியம்.

தோட்டத்தை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லை என்றால் நீங்கள் தோட்டம் அமைப்பது வேஸ்டுதான்.

செடிகளுக்கு நல்ல பராமரிப்பு இல்லை என்றால் செடிகள் முழுவதும் வீணாகிவிடும்.

எனவே இந்த எளிய வீட்டு தோட்டம் பராமரிப்பு பின்பற்றினால் நிச்சயமாக செடிகள் செழிப்பாக இருக்கும்.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

சரி வாங்க இந்த பகுதில் வீட்டு தோட்டம் பராமரிப்பு பற்றி படித்தறிவோம்..!

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 1:-

வீட்டு தோட்டம் பராமரிப்பு மண் தொட்டியில் உருவாகும் உப்புப்படுவை நீக்க, வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சரிசமமான அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்.

இந்த கலவையை தொட்டியின் மீது தெளித்து, பிளாஸ்டிக் பிரஷை கொண்டு நன்றாக தேய்க்கவும். அதில் செடியை நடுவதற்கு முன், நன்றாக காய விடுங்கள்.

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 2:

நீங்கள் தோட்டவேலை பார்க்கும் பொது கண்டிப்பாக கால்களில் செருப்பு அணிந்து கொள்ளவேண்டும் மற்றும் கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஏன் என்றால் தோட்டத்தை பராமரித்து கொண்டிருக்கும்போது ஏதாவது கால்களில் குத்திவிடலாம், கைகளில் கிளவுஸ் அணியாமல் தோட்டத்தை பராமரிக்கும்போது நகங்களில் மண் புகுந்துவிடும்.

இதன் காரணமாக கூட உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும்.

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 3:-

வீட்டு தோட்டம் பராமரிப்பு செடிகளை ட்ரிம் செய்யும் கருவி பழுதடையாமலும் உடையாமலும் பாதுகாக்க, அதனை பயன்படுத்துவதற்கு முன், அதன் மீது காய்கறி எண்ணெய்யை தெளித்திடுங்கள்.

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 4:-

அதாவது சிலரது தோட்டத்தில் செடிகளில் பஞ்சி பூச்சிகள் தாக்குதல் இருக்கும் அவற்றை கண்டறிந்தது பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர் அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூரலாய் ஸ்பிரே செய்ய வேண்டும்.

உங்கள் மாடிதோட்டத்தில் இன்று ரோஜா பயிரிடலாம் வாங்க…!

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 5:-

வீட்டு தோட்டம் பராமரிப்பு குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும்.

வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 6:-

செடிகளைக் காக்கும் 
இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்.

இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 7:-

வீட்டு தோட்டம் பராமரிப்பு வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.

இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை. இதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.

இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
வீட்டுக்குள் 
 (இண்டோர் பிளாண்ட்) வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும்.

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 8:-

இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான்.

வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம்.

இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும்.

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 9:-

வீட்டு தோட்டம் பராமரிப்பு செடிகளின் அடிப்பகுதியில் வீட்டில் இருக்கும் சமையலறை கழிவுகளை பயன்படுத்தலாம் அதாவது காபி தூள், டீ தூள் மற்றும் மற்ற கழிவுகளை செடிகளுக்கு உரமாக இடலாம். இதன் மூலம் செடிகள் வளமாக வளரும்.

மேலும் தெரிஞ்சிக்க தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..! – பகுதி – 2

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement