மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் மற்றும் அதன் பயன்கள்..!

Advertisement

மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் – Karunai Kilangu Sagupadi..!

Elephant foot yam cultivation..!

வணக்கம். இன்று நாம் மாடித்தோட்டம் பதிவில் கருணை கிழங்கு பயிரிடும் முறையை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. அதாவது நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக கருணை கிழங்கு பயிரிடும் முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

மாடித் தோட்டம் – கொத்தமல்லி சாகுபடி முறை மற்றும் பயன்கள்..!

Iyarkai Vivasayam Karunai Kilangu

தொட்டிகள்

மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் (Elephant foot yam cultivation) பொறுத்தவரை தொட்டிகளில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

கிழங்குகள் எளிதாக வளரவும், மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக சேர்க்க வேண்டும்.

விதைத்தல்

மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் (Elephant foot yam cultivation) பொறுத்தவரை நேரடியாகவே விதைக்கிழங்கை தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் ஒரு அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். பத்து நாட்களில் முளைக்க ஆரம்பித்து விடும்.

நீர் நிர்வாகம்

மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் (Elephant foot yam cultivation) பொறுத்தவரை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறுவதற்கு பைகளின் அடியில் இரு துளைகள் இட வேண்டும். நீர் தேங்கினால் பூஞ்சாண நோய்கள் வர வாய்ப்புள்ளது. மழை நீர் தேங்கினாலும் வெளியேற்ற வேண்டும்.

உரங்கள்

மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் பொறுத்தவரை சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மீன், மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் வைத்திருந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இது சிறந்த வளர்ச்சி ஊக்கியாக செயல்படும்.

தண்ணீருடன் பஞ்சகாவ்யா கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் பொறுத்தவரை சமையலறையில் வீணாகும் அனைத்தையும் மட்கச்செய்து உரமாக பயன்படுத்தலாம். இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதால் நோய் தாக்குதல் இருக்காது

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேறு எந்த ஒரு பாதுகாப்பு முறையும் இதற்கு தேவைப்படாது.

அறுவடை

மாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் பொறுத்தவரை கிழங்குகளை அறுவடை செய்ய குறைந்தபட்சம் 160 நாட்கள் ஆகும்.

கருணைக் கிழங்கு பயன்கள்:1

இதில் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.

கருணைக் கிழங்கு பயன்கள்:2

எலும்புகளை உறுதிப்படுத்த மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க பயன்படுகிறது. கரணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியவை குணமாகின்றன. மேலும் கரணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

கருணைக் கிழங்கு பயன்கள்:3

ஒரு மாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல், கரணை கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும். நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் சாப்பிடலாம்.

கருணைக் கிழங்கு பயன்கள்:4

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கரணைக்கிழங்கை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!

 

இது போன்ற மாடித்தோட்டத்தில் பயரிடக்கூடிய பயிர்கள் மற்றும் அவற்றை எப்படி மாடித்தோட்டத்தில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற முழு விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..!
Advertisement