வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது..?

Advertisement

All Season Flower Plant in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! வீட்டில் பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்று அனைவருக்குமே ஆசை இருக்கும். பூச்செடிகளை எந்தெந்த பருவத்தில் வளர்த்தால் அவை நன்றாக பூக்கள் பூக்கும் என்று சிலருக்கு தெரியும். அதாவது, சில பூச்செடிகள் ஒரு சில காலங்களில் தான் பூக்க தொடங்கும். அதேபோல சில பூ செடிகள் மட்டும் அனைத்து பருவத்திலும் பூக்கள் தருகின்றன. அது என்ன செடிகள் என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்..!

வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது..? 

 

செம்பருத்தி: 

பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது

செம்பருத்தி பற்றி நம் அனைவருக்குமே தெரியும். செம்பருத்தி செடி இல்லாத வீடுகளே இருக்க முடியாது. இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதுபோல செம்பருத்தி செடி அனைத்து பருவத்திலும் பூக்கள் பூக்கும் ஒரு பூச்செடி ஆகும்.

பட் ரோஸ்: 

பட் ரோஸ்

பெரும்பாலும் இந்த செடி அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு அழகாகவும், பல நிறங்களிலும் பூக்க கூடியது. இந்த செடி வளர்ப்பதற்கு உரம் தேவையில்லை. இந்த பட்ரோஸ் செடி மழை, வெயில் என்று அனைத்து பருவத்திலும் பூக்கள் தரக்கூடியது.

செண்டுமல்லி: 

செண்டு மல்லி 

இது பார்ப்பதற்கு செவ்வந்தி பூவை போல் இருக்கும். இதை செண்டு மல்லி என்று கூறுகிறார்கள். இது வருடம் முழுவதும் பூக்கள் தரக்கூடிய ஒரு பூச்செடி ஆகும். மஞ்சள் நிறத்தில் காணப்படும் செண்டு மல்லி அனைத்து பருவங்களிலும் பூக்க கூடியது.

வீட்டில் வளர்க்கவேண்டிய 15 முக்கியமான மூலிகை செடிகள்..!

கோழி கொண்டை பூ:

கோழி கொண்டை பூ

பூக்களில் இது பார்ப்பதற்கு வித்தியாசமானதாக இருக்கும். இந்த கோழி கொண்டை பூ நறுமணம் இல்லாத பூ என்று சொல்லலாம். இதற்கு பூக்கும் பருவம் என்றெல்லாம் கிடையாது. இது வருடம் முழுவதும் பூக்க கூடிய ஒரு செடி ஆகும்.

வாடாமல்லி: 

வாடாமல்லி

வாடாமல்லி பூவை நாம் பார்த்திருப்போம். அது உருண்டையாக முள் போன்ற தோற்றத்தில் இருக்கும். இதை எப்பொழுதும் வாடாத பூ என்று சொல்வார்கள். அதனால் தான் இதற்கு வாடாமல்லி என்ற பெயர் வந்தது. இது பூ மாலை கட்டவும் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுகிறது. அதுபோல இந்த செடியில் பூக்கள் அனைத்து காலத்திலும் பூக்கின்றன.

மழைக்காலங்களில் செடிகளை பராமரிப்பது எப்படி..?
குளிர்காலத்தில் பூச்செடிகளை பராமரிப்பது எப்படி..?

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  Vivasayam in Tamil
Advertisement