வீட்டில் வளர்க்கவேண்டிய மூலிகை செடிகள்..!
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் பார்க்கப்போவது மிகவும் முக்கியமான தகவல் பற்றித்தான். அது என்ன தகவல் என்றால் வீட்டில் வளர்க்கவேண்டிய 15 முக்கியமான மூலிகை செடிகள் என்ன.? என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம். மாடித்தோட்டத்திலும் இந்த மூலிகைகளை வளர்க்கலாம். அப்படி இந்த மூலிகைகள் வீட்டில் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
வீட்டில் வளர்க்கவேண்டிய 15 மூலிகை செடிகள்:
வீட்டில் கீழே கூறப்பட்டுள்ள இந்த 15 மூலிகை செடிகளை வீட்டில் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். உங்களால் எல்லாவற்றையும் வளர்க்க முடியாவிட்டாலும் இதில் சிலவற்றை வளர்த்து பயன்பெறுங்கள்.
1. துளசி :
அந்த வரிசையில் முதலாவதாக உள்ள மூலிகை துளசி ஆகும். துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டால் நாள்பட்ட கபம் கூட நீங்கும். மேலும் இந்த துளசில் இருந்து சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். குழந்தைகளுக்கு துளசி இலையை சாறுபிழிந்து தேன் கலந்து சாப்பிட கொடுப்பதால் சளி குறையும்.
2. கற்பூரவல்லி :
அடுத்து கற்பூரவல்லி இதனை ஓமவல்லி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலைகள் சாப்பிடுவதால் நாள்பட்ட சளி மற்றும் வறட்டு இருமலை குறைக்கும். மேலும் இந்த இலைகளை வாழைக்காய் பச்சி போல செய்து சாப்பிடலாம். இந்த மூலிகை செடியை வீட்டில் வைத்தால் கொசு, பூச்சி தொல்லை இருக்காது.
3. தூதுவளை :
தூதுவளை இந்த இலையும் சளியை குறைக்கும். மேலும் இந்த இலைகளை நெய்யுடன் சேர்த்து வதக்கி சாப்பிடலாம். பிறகு இதனை ரசமாகவும் வைத்து சாப்பிடலாம்.
4.கற்றாழை :
கற்றாழை இதனை சோற்றுக்கற்றாழை என்றும் கூறுவார்கள். இதனை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் உள்ள உஷ்ணம் குறையும். ஏன் இதனை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால் பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளை இது போக்கும் என்று கூறப்படுகிறது.
5. வெற்றிலை :
அடுத்து வெற்றிலை இந்த வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதால் வீட்டிற்கு மிகுந்த லட்சுமி கடாட்சம் வந்து சேரும். மேலும் வெற்றிலையில் அதிக கால்சியம் சத்து உள்ளது. இது ஜீரணசக்தியை அதிகப்படுத்தும்.
6. வல்லாரை:
இந்த வல்லாரைக்கீரையை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் அவர்களுக்கு ஞாபக சக்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.
7. செம்பருத்தி :
அடுத்து செம்பருத்தி செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டிற்கு மிகுந்த நன்மைகள் உண்டு. மேலும் இந்த செம்பருத்தி செடியின் பூக்களின் இதழ்களை சாப்பிடுவதால் இதய நோய் குறையும் என்று அறிவியல் பூர்வ சான்று உள்ளது.
8. திருநீற்று பச்சிலை :
திருநீற்றுப் பச்சிலை இதுவும் காய்ச்சல் சளி போன்றவற்றிற்கு சிறந்த மருந்துகள். மேலும் இதன் விதைகளை சப்ஜா விதைகள் என்று கூறுவார்கள் இந்த விதைகளை தண்ணீரில் போட்டு குடித்தாலும் நமது உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
9. அப்பக்கோவை :
அடுத்து அப்பக்கோவை இந்த மூலிகையை வீட்டில் உள்ள கைக்குழந்தைகளின் உடலின் இந்த அப்பக்கோவை இலைகளை அரைத்து தடவினால் மிகுந்த நறுமணத்தை அளிக்கக்கூடியது. மேலும் இந்த அப்பக்கோவை தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
10. மருதாணி:
மருதாணியும் நமது உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும். மேலும் மருதாணியை அரைத்து கைகளில் வைப்பதால் கைகளில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் செல்லாது.
11. முடக்கத்தான்:
இந்த முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் எப்பேர்ப்பட்ட முடக்குவாதமும் சரியாகும் என்று நமது முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். இதன் இலைகளை பறித்து தோசை மாவுடன் சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.
12. அருகம்புல்:
இந்த அருகம்புல்லை சாறுபிழிந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் இந்த அருகம்புல் சாறை பருகுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
13. சுண்டைக்காய் :
சுண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் உள்ள எந்த பிரச்சனையும் நீங்கும். மேலும் இந்த சுண்டைக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
14. நித்தியகல்யாணி :
இந்த நித்தியகல்யாணி செடியின் பூக்கள் சர்க்கரை நோய்க்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாக அமைகிறது.
15. மணத்தக்காளி:
கடைசியாக மணத்தக்காளி இதன் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடலில் உள்ள புண்களை ஆற்றும். இந்த காய்களை வத்தலாக காயவைத்து வத்தக்குழம்பாக செய்து சாப்பிடலாம்.
இதையும் பாருங்கள்=> 40 கீரை வகைகள் அதன் பயன்களும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |