ஆப்பிள் சாகுபடி முறையும் மற்றும் அதன் பயன்களும்..! Apple Cultivation in Tamilnadu..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பகுதியில் ஆப்பிள் சாகுபடி எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஆப்பிள் சாகுபடி மற்றும் அதன் பயன்களையும்(Apple Cultivation Uses) தெரிந்து கொள்ளுவோம். இந்த ஆப்பிள் சாகுபடி முறை முதன் முதலில் மத்திய ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. ஆப்பிள் பெரும்பாலும் சிவப்பாகவும், சில ஆப்பிள் இளம்பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சரி வாங்க இப்போது ஆப்பிள் சாகுபடி மற்றும் பயன்களை பற்றி விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்..!
பலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..! Jackfruit benefits in tamil..! |
ஆப்பிள் இரக வகை:
ஐரிஷ் பீச், செளக்ஸ் பைபின், காரிடன், வின்ட்டர் ஸ்டீன், ரோம் ப்யூட்டி, பார்லின்ஸ் ப்யூட்டி, கோல்டன் டெலிசியஸ், ராயல் காலா, கேகேஎல் 1 போன்ற ஆப்பிள் இரக வகைகளை சாகுபடி செய்யலாம்.
ஆப்பிள் சாகுபடி செய்ய பருவ காலம்:
ஆப்பிள் சாகுபடி செய்ய ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்ய உரிய காலம் ஆகும்.
ஆப்பிள் பயிரிட ஏற்ற மண்:
ஆப்பிள் பயிர் செய்ய நல்ல வடிகால் வசதி பெற்றிருக்க வேண்டும். ஆப்பிள் சாகுபடி செய்ய செம்மண் கலந்த வண்டல் மண்ணில் பயிரிட்டால் நன்கு விளையும்.
செம்மண் கலந்த வண்டல் மண்ணின் அமில தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்க வேண்டும். ஆப்பிள் சாகுபடி செய்த பின் நன்றாக பலன் அளிக்க வேண்டும் என்றால் இதற்கு குளிரும், பனியும் மிகவும் தேவை.
ஆப்பிள் சாகுபடி செய்ய நிலம் எப்படி தயாரிக்க வேண்டும்:
ஆப்பிள் சாகுபடி செய்யும் நிலத்தினை 4 x 4 மீட்டர் இடைவெளி விட்டு உழுதல் வேண்டும். அடுத்து பயிரிட 60 செ.மீ நீளம், அகலம், ஆழத்திற்கு குழிகளை எடுத்து ஆற விட வேண்டும்.
அதன் பிறகு குழியில் மக்கிய தொழு உரம், மேல் மண் போன்ற உர வகைகளை சேர்த்து குழிகளை நிரப்ப வேண்டும்.
ஆப்பிள் சாகுபடிக்கு விதை:
ஆப்பிள் மரம் ஒட்டுப் போடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஒட்டு போட்ட ஆப்பிள் செடிகள் தான் ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்றவையாய் உள்ளது.
ஆப்பிள் பயிர் செய்ய விதைக்கும் முறை:
செடிகளை நடவு செய்யும் முன் ஓட்டுபகுதி மேலே அதாவது சாகுபடி செய்யும் நிலத்தின் நடு பகுதியில் செடிகளை நட வேண்டும்.
முக்கியமாக காற்று அடிக்கும் போது செடிகள் நட்ட பிறகு இருபுறமும் குச்சிகள் நட்டு செடியுடன் கட்டுதல் அவசியம். முதல் வருடத்தில் ஓட்டுபகுதியில் கீழே இருந்து வளர்ந்து வரும் துளிர்களை நீக்கிவிட வேண்டும்.
ஆப்பிள் சாகுபடிக்கு நீர் பாய்ச்சல்:
செடிகள் அனைத்தும் நடவு செய்த பிறகு மூன்றாம் நாளில் நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ற அளவிற்கு செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து வரும்வரை அதற்கு நீர் பாய்ச்சல் மிகவும் அவசியம்.
ஆப்பிள் சாகுபடி உர அளவு:
ஆப்பிள் சாகுபடி மரம் ஒன்றிற்கு 25 கிலோ தொழு உரமும், 500 கிராம் அளவிற்கு தழைச்சத்துகளும், 1 கிலோ மணிச்சத்து, 1 கிலோ சாம்பல் சத்துகளை மரத்திற்கு கொடுக்க வேண்டும். இந்த உர அளவை வருடத்திற்கு இருமுறை கட்டாயமாக கொடுக்க வேண்டும்.
ஆப்பிள் சாகுபடி செய்ய களை பராமரிப்பு முறை:
களைகள் இல்லாமல் பராமரித்தல் அவசியம். முதல் ஆண்டிலே ஒட்டுப்பகுதிக்கு கீழிருந்து வளரும் துளிர்களை நீக்க வேண்டும்.
ஜீன், ஜீலை மாதங்களில் அறுவடைக்கு வரும் வகைகளை நவம்பர் மாதத்திலும், ஆகஸ்ட், செப்டம்பர் போன்ற மாதங்களில் அறுவடைக்கு வரும் வகைகளை ஜனவரி மாதத்திலும் கவாத்து செய்யவேண்டும்.
கவாத்து செய்த பிறகு உள்நோக்கி வளரும் குச்சிகளையும், காய்ந்த குச்சிகளையும் முதலில் வெட்டவேண்டும்.
அடுத்து கடந்த கால பருவத்தில் வளர்ந்த குச்சிகளை, மூன்றில் ஒரு பகுதி அல்லது பாதியை வெட்டி குறைக்க வேண்டும்.
ஆப்பிள் பயிர் செய்யும் உரம் மருந்து தெளித்தல்:
ஆப்பிள் பயிரிட்ட இடத்தில் அசுவினிப் பூச்சி வராமல் தடுக்க கெமிக்கல் கலந்த மீதைல் டெமட்டான் 25 இசி 4 மில்லி மருந்தை 1 லிட்டர் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலந்து தெளித்து விட வேண்டும்.
படற்பாசியை தடுக்க:
ஆப்பிள் பயிரிட்டில் படற்பாசிகள் வராமல் இருக்க 20 லிட்டர் நீரில் 1 கிலோ சுண்ணாம்பை கரைத்து கவாத்து செய்த பின் சுண்ணாம்பு நீரை தெளித்து விடவேண்டும்.
சொறிநோயை கட்டுப்படுத்த:
சொறிநோய் போன்றவையை கட்டுப்படுத்த கேப்டான் அல்லது மேன்கோசெப் 2 கிராம் அளவிற்கு மருந்தை எடுத்துக்கொண்டு, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளில் மொட்டு வந்த பிறகு அல்லது மொட்டு வந்த 15 நாட்களிலும், இதழ்கள் உதிர்ந்து 10 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்.
செடிகளில் இதழ்கள் உதிரும் போது கார்பன்டாசிம் 0.5 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
மரத்தில் பழம் காய்த்த பின் 14 நாட்கள் கழித்து கேப்டாபால் என்னும் மருந்தை 2 கிராம் அளவிற்கு எடுத்து 1 லிட்டர் அளவு தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நெல் பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள்..! Paddy cultivation in tamil..! |
ஆப்பிள் அறுவடை:
செடிகள் நட்டு நான்காம் ஆண்டிலிருந்தே பழங்கள் காய்க்க தொடங்கி விடும். நன்கு காய்த்த பழங்களை அறுவடை செய்யவேண்டும்.
ஆப்பிள் சாகுபடி ஆண்டு லாபம்:
ஒரு வருடத்திற்கு ஆப்பிள் மரமில் இருந்து 10 முதல் 20 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.
ஆப்பிள் சாகுபடியின் பயன்கள்:
ஆப்பிளில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன நிறைந்துள்ளது.
இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
பற்கள், ஈறுகள் நன்கு வளர்ச்சியுடன் இருக்கும். ஆப்பிள் உடலுக்கு தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
தோல் நீக்காத ஆப்பிள்களில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தும்.
ஆப்பிள் உடலில் கால்சிய சத்தை சேமிக்க செய்யும். செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவும்.
ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம் மலசிக்கல் பிரச்சனையை நீக்கி குடலில் இருக்கும் கிருமிகளை கொள்கிறது.
ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டு வர வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன.
கேழ்வரகு சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..! Ragi cultivation in tamil..! |
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |