வீட்டிலேயே கிராம்பு செடி வளர்க்கும் முறை..!

Clove Plant Cultivation at Home in Tamil

வீட்டிலேயே கிராம்பு செடி வளர்க்கும் முறை..! Clove Plant Cultivation at Home in Tamil..!

பொதுவாக நம்மில் பலருக்கு கிராம்பு என்பது செடியில் இருந்து வருகிறதா அல்லது கொடியில் இருந்து வருகிறதா அல்லது மரத்தில் இருந்து வருகிறதா என்று குழப்பம் இருக்கும். கிராம்பு என்பது மரத்தில் இருந்து தான் வளர்கிறது. இந்த மரம் பார்ப்பதற்கு யூகலிப்டஸ் மரம் (Eucalyptus Tree) போன்று தான் இருக்கும். அதாவது தைலமரம் போன்று தான் இருக்கும். உங்கள் ஊரில் தைலமரம் நன்கு வளரும் என்றால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் நீங்கள் கிராம்பு செடியை வளர்க்கலாம். இந்த மரம் வளரும் என்று நல்ல ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பம் இருக்கும் இடத்தில் கிராம்பு செடி நன்கு வளரும். 15 டிகிரிக்கு கீழ் குளிர்ச்சி இருத்தல் இந்த செடி அங்கு சுத்தமாக வளராது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
வீட்டிலேயே பாதாம் செடி வளர்க்கும் முறை..!

கிராம்பு செடி வளர்க்கும் முறை..!கிராம்பு

Clove Plant Cultivation at Home in Tamil – கிராம்பு என்பது மொட்டுதான், அது பூ கிடையாது. இந்த மொட்டு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த மொட்டு ஓரளவு வளர்ந்த பிறகு அதனை பறித்து வெயிலில் நன்கு காயவைத்து பிறகு விற்பனைக்கு அனுப்புவார்கள்.

இத்தகையக கிராம்பு மரத்தில் ஒரு மாதிரியாக காய் காய்க்கும். அதனை விதை என்று சொல்லலாம் அந்த விதை மூலமாக மட்டுமே கிராம்பு செடியை வளர்க்க முடியும் அல்லது நர்சரியில் செடியை வாங்கி வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம். அல்லது ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
வீட்டிலேயே தொட்டியில் ஏலக்காய் செடி வளர்க்கும் முறை..!

கிராம்பு வளர்ப்பு பொறுத்தவரை முதல் இரண்டு வருடத்திற்கு நிழல் பாங்கான இடம் மற்றும் கொஞ்சம் வெயில் படும் இடமாக இருக்க வேண்டும். இரண்டு வருடத்திற்கு பிறகு செடி வெயில் படும் இடமாக இருக்க வேண்டும். குறைந்தது 5 முதல் 7 வருடங்களுக்கு பிறகு கிராம்பு மரத்தில் நிறைய மொட்டுக்கள் விட ஆரம்பித்துவிடும். அதனை நீங்கள் நன்கு காயவைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

கிராம்பு செடியை நடவு செய்யும் போது தொழு உரம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மற்றும் உரங்கள் கொடுத்தால் போதும். இந்த மரத்திற்கு பூச்சி தாக்குதல்கள் அவ்வளவாக இருக்காது. குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசம் போன்ற இடங்களில் கிராம்பு செடியை வளர்க்கலாம். அது போக இந்த கிராம்பு மரத்தை வீட்டு தோட்டம் மற்றும் மாடித்தோட்டத்தில் வளர்க்கலாம்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்