கால்நடை காப்பீடு திட்டம்..! Livestock Insurance Scheme..!

Farmers scheme

விவசாயிகளுக்கான கால்நடை காப்பீடு திட்டம்..! Livestock Insurance Scheme..!

பயிர்களுக்கு இருப்பது போல் கால்நடைகளுக்கும் காப்பீடு உள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோய்யுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உள்நாடு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகிய கால்நடைகள் அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. சந்தையின் அதிகபட்ச விலையினை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீடு முகவர் ஆகிய மூவராலும் நிர்ணயம் செய்யப்படும்.

சரி கால்நடை காப்பீடு திட்டம் பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க..!

கால்நடை காப்பீடு திட்டம்

Livestock Insurance Scheme: ஒன்றிரண்டு கால்நடைகளை கொண்ட ஒரு சிறிய விவசாயிதான் நமது நாட்டில் ஒரு பொதுவான கால்நடை உரிமையாளராக இருக்கின்றன. பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை உள்ளடக்கிய கலப்பு விவசாய முறையின் ஒரு பகுதியாக விவசாயி கால்நடைகளை வளர்க்கிறார். சிறு விவசாயிகள் தங்கள் வருமானத்தில் மேலானதை கால்நடையிலிருந்தே பெறுகின்றனர், கால்நடைகளின் மதிப்பே விவசாயிகளின் செல்வத்தில் கணிசமான சதவீதத்தை பிரதிபலிக்கிறது. எனவே கால்நடைகள் இறப்பு என்பது கணிசமான ஆபத்தை ஏற்படுத்துவதுடன் விவசாயின் நிகர மதிப்பு மற்றும் வருவாயையும் பாதிக்கிறது. இந்த காப்பீடு திட்டமானது இரட்டை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும். மற்றொன்று, காப்பீடின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து திட்டத்தை பிரபலப்படுத்தி கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதற்கும்.

இந்த திட்டத்தின்கீழ் உள்நாட்டு மற்றும் கலப்பின் வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகிறது. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கால்நடை மேம்பட்டு கழகத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள் 👉 நவீன விவசாய கருவிகள் பெயர்கள்

கால்நடை காப்பீடு தகுதி:

காப்பீடு திட்டமானது உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகியவற்றிற்கு பொருந்தும். ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை  மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.

கால்நடை காப்பீடு மானியம் எப்பொழுது கிடைக்கும்?

விபத்து (வெள்ளம், சூறாவளி, பஞ்சம் உட்பட) அல்லது ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலைகளில் இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில், குறைவான செலவில் அதிக காப்பீடு பலன் பெற முடியும்.

விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியம். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு செய்யும்போது திட்ட நடைமுறையில் உள்ளபடி, உரிய காப்பீடு மானியம் கிடைக்கும். சந்தையின் அதிகபட்ச விலையினை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீடு முகவர் ஆகிய மூவராலும் சேர்ந்து நிர்ணயம் செய்யப்படும்.

இதையும் படியுங்கள் 👉 சிறு குறு விவசாய கருவிகள் மானியம்

கால்நடை காப்பீடு காலத்தில் பயனாளர் மாறினால் என்ன செய்யலாம்?

காப்பீடு காலத்தில் தாங்கள் வைத்திருக்கும் கால்நடையை யாரிடமாவது விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தக்காரருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

எனவே காப்பீடு கழகத்தில் காப்பீடு செய்ய செல்வதற்கு முன்பே இதற்கான விதிமுறையை கட்டாயம் தீர்வு செய்து கொள்ளவும்.

காப்பீடு தொகை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?

காப்பீடு செய்யப்பட்ட தொகை தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கிடைக்கும், காப்பீடு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீடு பாலிசி ஆவணம் இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே காப்பீடு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கும். கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீடு கழகம் காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும் என்னென்ன சான்றுகள் வேண்டும். என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கும்.

ஒரு கால்நடை உரிமையாளர் சரியான காரணங்களுக்காக மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு காப்பீடு எடுக்க விரும்பினால் அவர்களுக்கு காப்பீடு கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு மானியம் நீட்டிப்பு கிடைக்காது.

எப்பொழுது காப்பீடு கிடைக்காது?

காப்பீடு தொகை செலுத்திய பத்து நாட்களுக்குள் கால்நடைகள் இறந்துவிட்டால் காப்பீடு தொகை வழங்காது. காப்பீடு செய்யும் போது அந்நிறுவனத்தால் காது மடலில் பொருத்தப்பட்ட அடையாளத் தகடு காணாமல் போனால் அந்நிறுவனம் காப்பீடு தொகை வழங்காது.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil