வெந்தயம் கீரை சாகுபடி முறை..!Fenugreek cultivation in tamil..!

Advertisement

வெந்தயம் கீரை சாகுபடி முறை (Fenugreek cultivation in tamil)..!

வெந்தயக்கீரை வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது, இந்த வெந்தயக்கீரை சாய்குபடி பொறுத்தவரை மூன்று மாதங்களில் பூத்துக் காய் காய்ந்து பலன் தரக்கூடியது. வெந்தயக்கீரை சாகுபடி பொறுத்தவரை பூக்கள் பூக்கும் முன்னாரே செடிகளை பிடிங்கி அறுவடை செய்ய வேண்டும். சிறு சிறு இலைகளாகவும், சிறு துண்டுகளாகவும் இருக்கும் இந்த வெந்தய கீரை. சிறிது கசப்பு சுவையுடையது என்றாலும் இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

சொட்டுநீர் பாசனம் மூலம் செவ்வாழை சாகுபடி முறை..!

 

சரி இந்த பகுதியில் வெந்தயம் கீரை சாகுபடி (Fenugreek cultivation in tamil) செய்வது எப்படி என்று மிக தெளிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

பருவகாலம்:-

வெந்தயம் கீரை பயிரிடும் முறைக்கு சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் ஏற்றவை.

நிலம்:-

நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்று அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள் மற்றும் செம்மண் நிலங்கள் வெந்தயம் கீரை சாகுபடி செய்ய உகந்த நிலங்கள் ஆகும்.

விதையளவு:-

வெந்தயம் கீரை சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் போதுமானது.

சொட்டு நீர் பாசனம் முறையில் பூசணி சாகுபடி..!

நிலம் தயாரித்தல்:-

வெந்தயம் கீரை சாகுபடி முறைக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது தக்கைப்பூண்டு விதைத்து பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி, உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைக்கும் முறை:-

வெந்தய கீரை விதைகளை மணல் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, நீர் பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:-

வெந்தையம் விதைகளை விதைத்தவுடன், பாத்திகளில் நிதானமாக நீர் பாய்ச்ச வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும்.

உரங்கள்:-

வெந்தயம் கீரை சாகுபடி முறையில் நடவு செய்த 7 நாட்கள் இடைவேளையில் இரண்டு முறை ஜீவாமிர்தம் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பயிர் வளர்ச்சி சீராக இருக்கும்.

பாதுகாப்பு முறை:-

களை அகற்றுதல்: விதைகள் விதைத்த 6-ம் நாட்களில் முளைகள் விட ஆரம்பிக்கும். 10-ம் நாள் கழித்து களைகளை நீக்க வேண்டும்.

தண்டு கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

பயிர் பாதுகாப்பு முறை:-

கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது.

அறுவடை:-

வெந்தயம் விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பிடிங்கி விற்பனை செய்ய வேண்டும்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement