அவரை செடிக்கு இந்த உரத்தினை மட்டும் கொடுங்கள்.. கொத்து கொத்தாய் காய்க்கும்..!

Advertisement

அவரை செடி வளர்ப்பது எப்படி.?

நம் அனைவருமே வீடுகளில் பல விதமான காய்கறி செடிகள் பழச்செடிகள் மற்றும் பூச்செடிகள் போன்றவற்றை வளர்த்து வருவோம். அப்படி வீட்டில் நாம் வளர்த்து வரும் செடிக்கு முறையான உரங்களை கொடுத்தால் மட்டுமே செடிகள் செழிப்புடன் வளரும். எனவே, அந்த வகையில் நம் வீடுகளில் வளர்க்கக்கூடிய காய்கறி செடிகளில் ஒன்றான அவரை செடிக்கு என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை இப்பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக எந்தவொரு செடியை நடுவதற்கு முன்பாக அதற்கு தகுந்த மண் கலவையை தயார் செய்ய வேண்டும். அடுத்து முதலில் அதற்கு அடியுரமாக மாட்டு எருது, மண்புழு உரம், மட்கிய இலை தளைகள் போன்றவற்றை கொடுப்பது மிகவும் அவசியம். எனவே,அவரை செடியை நடவு செய்யும்போது அதற்கு அடியுரம் கொடுப்பது மிகவும் அவசியம். எனவே, அடியுரம் கொடுத்த பிறகு, மாதம் மாதம் என்ன உரம் கொடுக்க வேண்டும் எனபதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fertilizer For Avarai Plant in Tamil:

அவரை செடி வளர்ப்பது எப்படி

தேவையான பொருட்கள்:

  • வாழை மரத்தின் பக்க கன்றுகள்
  • வெல்லம் – 5
  • புளித்த தயிர் – 1/2 லிட்டர் 
  • பெருங்காயப் பொடி – 100 கிராம்
  • முருங்கைக் கீரை – 1 கைப்பிடி

முதலில், வாழை மரத்தின் பக்க கன்றுகள் 2 அல்லது 4 எடுத்து கொள்ளுங்கள். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு வெல்லத்தை நன்கு பொடி செய்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வாழைமரத்தின் துண்டுகளை போட்டு ஊற வைத்து கொள்ளுங்கள்.

வீட்டிற்குள்ளேயே தக்காளி செடி ஈசியாக வளர்க்கலாம்..

அடுத்து, பெருங்காயத்தூள் மற்றும் முருங்கைக் கீரையை தண்ணீர் விட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை புளித்த தயிரில் கலந்து, இதனை கரைத்து வைத்துள்ள வெல்ல கரைசலில் ஊற்றி கலந்து 1 நாள் வரை மூடி வைக்கவும்.

Fertilizer For Avarai

அடுத்த நாள் இந்த கலவையில் 200 மிலி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் அவரை செடிக்கு தெளித்து வந்தால் செடியில் உள்ள பூக்கள் உதிராமல் காய்கள் அதிகமாக காய்க்க தொடங்கும்.

இதனை நீங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் உங்கள் அவரை செடியில் அதிக காய்கள் காய்க்க தொடங்கும்.

ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க வெங்காயம் ஒன்று போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement