பூண்டு செடி வளர்ப்பது எப்படி? Garlic cultivation in tamil..! poondu vivasayam in tamil
Garlic cultivation in tamil:- வெள்ளை பூண்டு உணவின் மணத்தை அதிகரிக்க செய்யும் ஒரு காய்கறி பயிராகும். பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒரு பொருளாக விளங்குகிறது. குறிப்பாக இந்தியாவில் விவசாயிகள் வெங்காயத்திற்கு அடுத்ததாக பூண்டினை அதிகளவு சாகுபடி செய்கின்றன. பூண்டு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ள ஒரு பொருள் என்பதால் வெள்ளைப்பூண்டு சாகுபடி மூலம் நாம் லாபம் பெறலாம். பதிவில் வெள்ளைப்பூண்டு விவசாயம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அதிக லாபம் தரும் இஞ்சி சாகுபடி..! |
வெள்ளைப்பூண்டு விவசாயம்..! Garlic cultivation in tamil..!
இரகங்கள்:-
வெள்ளைப்பூண்டு சாகுபடி முறைக்கு ஊட்டி 1, உள்ளூர் இரகம், பார்வி, இராஜேயே, காடி மற்றும் சிங்கப்பூர் போன்ற ரகங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவகாலம்:-
வெள்ளைப்பூண்டு விவசாயம் ஜீன் – ஜீலை, அக்டோபர் – நவம்பர் போன்ற பருவ காலங்களில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
நிலம் மற்றும் வானிலை:-
வெள்ளைப்பூண்டு செடி வளர்ப்பிற்கு நன்கு நீர் வடியும், களிமண் கலந்த வண்டல் மண் சாகுபடிக்கு உகந்தது. வானிலை பொருத்தவரை குளிர்ந்த வானிலை இருந்தாலே சாகுபடி செய்ய போதுமானது.
விதையளவு:-
ஒரு ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோ விதைகள் போதுமானது.
விதைப்பு:-
சாகுபடி நிலத்தை நன்கு உழ வேண்டும். அதன் பிறகு 15 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். அதன் பிறகு 7 செ.மீ. இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும்.
விதை நேர்த்தி:-
பூண்டு விதைகளை 1 மணிநேரம் 3% பஞ்சகவ்யா, 4% சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், 4% ட்ரைக்கோடெர்மா விரிடி, 4% அசோஸ்பைரில்லம் மற்றும் 4% பாஸ்போபாக்டீரியா கரைசலுடன் நனைத்து நிழலில் உலர வைக்க வேண்டும்.
உரங்கள்:-
- லுபினுடன் பசுந்தாள் உரத்தை பயிரிடும் 15 நாட்களுக்கு முன்பு அளிப்பதால் மண்ணில் தழைச்சத்து அளவை அதிகரிக்கலாம்.
- நன்கு சிதைந்த தொழு உரம் 30 டன் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
- கம்போஸ்ட் 5 டன் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
- மண்புழு உரம் 2.5 டன் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
- உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 5 கிலோ ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் நிலத்தை தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
- மாட்டு குழம்பு உரம் 75 கிராம் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் எடுத்து 40 லிட்டர் நீரில் கரைத்து நிலத்தைத் தயார் செய்யும் பொழுது தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்:-
- 10% மண் புழு உர தெளிப்பை விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தெளிக்க வேண்டும்.
- மாட்டு சாணக்குழிக்குப்பையை 5 கிலோ /ஏக்கருக்கு என்ற அளவில் எடுத்து 300 லிட்டர் நீரில் கரைத்து, விதைத்து 45,60,75 வது நாளுக்கு பிறகு தெளிக்க வேண்டும்.
சின்ன வெங்காயம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்..! |
மாட்டுக் கொம்பு சிலிக்கா:
2.5 கிலோ /ஏக்கருக்கு என்ற அளவில் 50 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட 65வது நாளுக்குப் பிறகு தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
- மஞ்சூரியன் தேயிலை சாற்றை (5%) விதைத்து ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்
நீர்ப்பாசனம்:
பூண்டு சாகுபடி பாசன சாகுபடியாகவும், மானாவாரி சாகுபடியாகவும், செய்யப்படுகிறது. பாசன சாகுபடியில், பயிரிட்ட அன்றும், அதற்கு பிறகு 3 நாட்கள் கழித்தும் பாசனம் செய்ய வேண்டும்.
களை நிர்வாகம்:
மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும் போது பூண்டுக் குமிழ்கள் வெயிலில் படுவதைப் பொறுத்து மண் அணைக்க வேண்டும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |