How to Grow Pirandai Plant at Home in Tamil
அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் மாடித்தோட்டம் வைத்திருக்கும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் மாடித்தோட்டத்தில் பிரண்டை வளர்ப்பு முறையை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். மாடி வீட்டில் இருக்கும் அனைவருமே மாடியில் பூச்செடிகள், காய்கள் செடிகள் போன்றவற்றை வளர்ப்பார்கள். கடைகளில் வாங்கி சமைப்பதை விட வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகளில் சமைப்பது மிகவும் நல்லது.
அதனால், பலரும் வீட்டு மாடியில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளையும் பூச்செடிக்களையும் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய மூலிகை செடியான பிரண்டை செடியை எப்படி வீட்டின் மாடியில் வளர்ப்பது எப்படி என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மாடி தோட்டத்தில் பிரண்டை வளர்ப்பது எப்படி..?
பிரண்டை என்பது மூலிகை தாவரமாகும். இது எல்லா சீசனிலும் தழைத்து வளர கூடிய ஒரு வகை புதர் செடியாகும். எனவே நீங்கள் எந்த சீசனியிலும் பிரண்டையை பயிரிடலாம். இது கிராம புறங்களில் அதிகமாக பரந்து வளரக்கூடியது. இது நம் உடலில் ஏற்பட கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
உங்க வீட்ல பிரண்டை செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..! |
பிரண்டை வளர்ப்பிற்கு தேவையான பொருட்கள்:
- Grow Bags அல்லது மண் தொட்டி
- மண்
- மண்புழு உரம் அல்லது மாட்டு சானம்
மாடி தோட்டத்தில் பிரண்டை வளர்க்கும் முறை:
முதலில் பிரண்டை செடி நடுவதற்கு உங்கள் வீட்டு பகுதிகளில் உள்ள காய்கறி கடையில் முற்றிய பிரண்டையை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் வீட்டு பகுதியில் கிடைக்கக்கூடிய மண்ணை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மண்புழு உரம் அல்லது மாட்டு சாணம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இப்போது 5 கணுக்கள் அளவிற்கு உள்ள முற்றிய பிரண்டையை எடுத்து கொள்ளுங்கள். பிரண்டையின் அடிப்பகுதியில் உள்ள கணுவின் கீழ் பகுதியை சிறிதளவு வெட்டி விடுங்கள்.
மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..! |
பிறகு ஒரு மண் தொட்டி அல்லது Grow Bags எடுத்து, அதில் கலந்து வைத்துள்ள மண் உரத்தை நிரப்பி கொள்ளுங்கள். சமமான அளவிற்கு நிரப்பியதும் முற்றிய பிரண்டையை 2 கணுக்கள் மண்ணிற்குள் புதையும் படி குழிபறித்து பதித்து கொள்ளுங்கள்.
இப்போது அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாடியின் சிறிது நிழலான பகுதியில் வைத்து கொள்ளுங்கள். பிரண்டை செடி துளிர் விடும் வரை தண்ணீர் விட வேண்டும்.
பிரண்டையை பதித்த 20 அல்லது 25 நாட்களிலே நன்றாக துளிர் விட்டு வளர ஆரம்பித்து விடும்.
உரமிடும் காலம்:
பிரண்டை செடிக்கு மாதம் ஒரு முறை நன்கு மக்கிய சாணம் உரம் மற்றும் மண்புழு உரம் போட வேண்டும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |