How To Take Care Of Plants In Rainy Season in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் மழைக்காலங்களில் செடிகளை பாதுகாப்பது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் அனைவருக்குமே வீட்டை சுற்றி அழகழகான செடிகள், விதவிதமான பூச்செடிகள், காய்கறிகள் மற்றும் மரங்கள் போன்ற தாவரங்களை வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும்.
அதுவே மழை பெய்யும் நேரங்களில் அந்த செடிகளை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். அதுபோல மழைக் காலங்களில் செடிகளை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் செடிகளை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்..!
மாடி தோட்ட செடிகளை பராமரிக்கும் முறை..! |
மழைக்காலங்களில் செடிகளை பராமரிப்பது எப்படி..?
பொதுவாக அனைத்து செடிகளுக்குமே போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுவே அளவுக்கு அதிகமாக செடிக்கு தண்ணீர் ஊற்றினால் அந்த செடி அழுகி போய்விடும். அது நம் அனைவருக்குமே தெரியும். அதுவே மழைக் காலங்களில் செடிகளை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும். அதை பற்றி இங்கு பார்ப்போம்.
ஸ்டேப் -1
நீங்கள் ஒரு பூத்தொட்டியில் செடி வளர்கிறீர்கள். அதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் ஊற்றுவீர்கள்.
அதுவே மழைக் காலங்களில் அந்த பூத்தொட்டிகளின் அடிப் பகுதியில் சிறிய சிறிய ஓட்டைகள் போட்டு விடுங்கள். இப்படி செய்வதால் செடிகளில் எவ்வளவு தண்ணீர் தேங்கி நின்றாலும், அது அந்த ஓட்டைகளின் வழியாக தண்ணீர் கீழிறங்கி விடும். இதனால் செடிகள் அழுகாமல் இருக்கும்.
பூத்தொட்டிகளில் மட்டுமில்லாமல் சாக்குப்பைகளிலும் செடி வளர்த்தால், இதுபோல அதன் அடிப் பகுதியில் சிறிய சிறிய ஓட்டைகள் போட்டு விடலாம்.
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்..! |
ஸ்டேப் -2
செடிகள் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அமிலத் தன்மையும் காரத் தன்மையும் தான். இதை Ph என்று சொல்வார்கள். இது இரண்டும் செடிகளுக்கு கட்டாயம் கிடைக்க வேண்டும். சில செடிகள் மழைக் காலங்களில் நன்றாக வளர்ந்து செழிப்பாக இருக்கும்.
அதற்கு காரணம் மழைக் காலங்களில் செடிகளுக்கு அமிலத்தன்மை அதிகமாக கிடைக்கிறது. அதுவே காரத்தன்மையில் வளரும் செடிகளை மழை நேரத்தில் எப்படி பராமரிப்பது..?
அதற்கு நீங்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது 5 லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து ஊற்ற வேண்டும். இப்படி செய்வதால் அந்த செடிகளுக்கு மழை நேரத்திலும் காரத்தன்மை அதிகமாக கிடைக்கும்.
அதுபோல, செடிகளுக்கு அமிலத்தன்மை கிடைக்க வேண்டும் என்றால், படிகாரக்கல்லை தூள் போல இடித்து கொண்டு, அதை செடிகள் இருக்கும் மண்ணை சுற்றி போட வேண்டும்.
இப்படி செய்வதால் மழைக் காலங்களிலும் செடிகள் நன்றாக வளரும். அதுபோல செழிப்பாகவும் இருக்கும்.
வீட்டில் வளர்க்கவேண்டிய 15 முக்கியமான மூலிகை செடிகள்..! |
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Pasumai Vivasayam in Tamil |