மாடித்தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளும் செழித்து வளர இயற்கையான முறையில் உரம் தயாரித்தல்..!

Advertisement

செடிகளுக்கு உரம் தயாரிப்பது எப்படி..?

அனைவருடைய வீட்டிலும் அழகிற்கு என்று நிறைய வகையான செடிகள் வளர்த்து வருகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி இப்போது எல்லாம் வீட்டில் உள்ள மாடித்தோட்டத்தில் இயற்கையான முறையில் நிறைய பூச்செடிகள் மற்றும் காய்கறிகள் எல்லாவற்றையும் பயிர் செய்து வளர்த்து வருகின்றனர். நாம் இவற்றை எல்லாம் வளர்த்து விடலாம். ஆனால் இவற்றிற்கு எல்லாம் உரம் கடையில் வாங்கி போடுதல் என்பது சாத்தியமானது அல்ல. அதனால் தான் உங்களுக்கு பயனளிக்கு வகையில் இயற்கையான முறையில் உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துக்கொண்டு உங்கள் வீட்டில் மாடித்தோட்டத்தில் இருக்கும் பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகளை பராமரித்து வாருங்கள்.

Iyarkai Uram Thayarippu Murai:

 இயற்கை உரம் தயாரிக்கும் முறை

எல்லோருடைய வீட்டிலும் இருக்க கூடிய அரிசியை வைத்து இயற்கை முறையில் உரம் தயாரித்து அதனை எப்படி செடிகளுக்கு அளிக்க வேண்டும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • அரிசி- 1/2 கிலோ 
  • வெல்லம்- 1/2 கிலோ 
  • மண்பானை- 1
  • மண்பானை மூடி- 1
  • பூத்தொட்டி- 1

உரம் தயாரிக்கும் முறை:

ஸ்டேப்- 1

முதலில் 1/2 கிலோ அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் அரிசி நன்றாக ஊறும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

10 மணி நேரம் கழித்த பிறகு அரிசியில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு வடிகட்டி வைத்துள்ள அரிசியை மண்பானையில் வைத்து மூடி நன்றாக மூடி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது நாம் உரத்தை தயாரிக்க வேண்டும். அதற்கு முதலில் ஒரு பூத்தொட்டியினை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு மண்ணை சேர்த்து சமம் செய்து விடுங்கள். 

ஸ்டேப்- 4

அடுத்து மண் சமம் செய்து வைத்துள்ள அந்த பூத்தொட்டியின் மேலே அரிசி போட்டு மூடி வைத்துள்ள அந்த பானையை வைத்து பானையின் மேலே மண்ணை போட்டு மூடி விடுங்கள்.

ஸ்டேப்- 5 

இதனை நீங்கள் செய்த பிறகு தினமும் அந்த பூத்தொட்டியில் தண்ணீர் ஊற்ற வேண்டும். 3 நாட்கள் கழித்து அந்த மண்ணில் மூடி வைத்துள்ள பானையை திறந்து அதனுடன் 1/2 கிலோ வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

இப்போது வெல்லம் கலந்து வைத்துள்ள பானையை காற்று உள்ளே வராத அளவிற்கு மீண்டும் மூடி வைத்து விடுங்கள். அதன் பிறகு 25 நாட்கள் கழித்த அந்த பானையை திறந்து பாருங்கள் இயற்கையான முறையில் உரம் தயாராகிவிடும். 

இதையும் படியுங்கள்⇒ செம்பருத்தி செடியில் பூக்கள் அதிகம் பூக்க இதை மட்டும் செய்யும்கள் போதும்..!

செடிகளுக்கு உரம் போடுவது எப்படி..?

செடிகளுக்கு உரம் போடுவது எப்படி

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள உரத்தில் 1 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து உங்கள் வீட்டில் இருக்கும் பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகளுக்கு செலுத்தி சரியான அளவில் தண்ணீர் ஊற்றினால் போதும் செடிகள் அனைத்தும் செலுத்து வளர்ந்து விடும்.

அதன் பிறகு நீங்கள் எதிர்பார்த்த மாதிரி செடி நிறைய பூக்கள் மற்றும் காய்கள் கொத்து கொத்தாக காய்க்கும். 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோஜா செடி, மல்லிகை செடி, மட்டுமில்லை எல்லா பூச்செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க இதை செய்யுங்க

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 
Advertisement