விவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..! Livestock loans..!

Advertisement

விவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..! Livestock loans..!

Livestock loans:- நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் விவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள் மற்றும் அதற்கான தகுதி போன்ற விவரங்களை நாம் தெரிந்து கொள்வோம்.

பால் பண்ணை கடன் :

இந்த கடன் திட்டமானது அதிக பால் கொடுக்கும் மாடுகள் வாங்குதல், கால்நடை கொட்டகை அமைத்தல், பால் பண்ணை இயந்திரங்களை வாங்குதல், தீவனம் வெட்டும் இயந்திரம் மற்றும் கால்நடைகளை வெளியூரில் வாங்கி இருந்தால், அதை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகளுக்கும் வழங்கப்படும்.

தகுதி:

தனிநபர் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள், பால் பண்ணையில் முன் அனுபவம் பெற்றிருப்போர் மற்றும் அதில் ஆர்வமாக ஈடுபட்டிருப்போர் அனைவரும் தகுதியுடையவர்களாவர்.

இதையும் படியுங்கள் 👉 நவீன விவசாய கருவிகள் பெயர்கள்

கோழிப் பண்ணை:

நம் நாட்டில் கோழிப் பண்ணை சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்ட பண்ணையாக வளர்ந்துள்ளது. வங்கிகள் கோழிப் பண்ணை, குஞ்சு பொறிப்பகங்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்குகிறது.

தகுதி:

சுயதொழில் முனைவோர் கோழிப் பண்ணை பற்றிய அனைத்து விசயங்களும் மற்றும் பயிற்சி சான்றிதழ் அல்லது முன் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றிருந்தல் வேண்டும்.

செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்புக்கு நிதியளிக்கும் திட்டம்:

தேவை:

தேர்வு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட செம்மறி அல்லது வெள்ளாடு வகைகள் வாங்குவதற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் அதை இனவிருத்தி அல்லது அதன் தோல், கறி, பால் உற்பத்திக்காக வளர்ப்பு தேவைப்பட்டால் கொட்டகை அமைத்தல் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், அடர் தீவனம் வாங்குதல்.

தகுதி:

சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விவசாய வேலையாட்கள் செம்மறி அல்லது வெள்ளாடு இனவிருத்தி அல்லது வளர்ப்பை மானியத்தின் மூலம் பெற்ற அல்லது பயிற்சி பெற்ற நபர்கள், வர்த்தக ரீதியில் கொண்டு செல்ல நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் 👉கால்நடை காப்பீடு திட்டம்..!

மீன் வளர்ப்பிற்கான கடன்:

மீன் சபந்தமான செயல்களான மீன்வளர்ப்பு, அதாவது மீன் குளம் அமைக்க, தீவனங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது.

பன்றி வளர்ப்பிற்கு கடன்:

உணவுகூடக், கழிவுகள் மற்றும் காய்கறி சந்தைக் கழுவுகள், பன்றி வளர்ப்பு பண்ணைக்கு நல்ல உதவியாக அமையும். வங்கிகள் தனிநபர், விவசாயிகள் மற்றும் குழுவாக உள்ள விவசாயிகள் ஆகியோர்க்கு கடனுதவி வழங்குகிறது.

விண்ணப்பதாரர் பன்றி வளர்ப்பதற்குத் தேவையான நிலம், நீர் மற்றும் பன்றி வளர்ப்பிற்கான போதுமான முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பன்றி வாங்குதல், கொட்டகை கட்டமைப்பு, பொருட்கள், வேலையாட்கள் ஆகியவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் கலப்பின இரகங்கள் வளர்க்க தேவையான திட்டக் கடன்களை வங்கி வழங்குகின்றது.

இதையும் படியுங்கள் 👉 மூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம்

கொட்டகை மற்றும் இதரக் கட்டமைப்பு வேலைகளுக்கு கோரிக்கை நிதி:

தேவை:

கால்நடை கொட்டகை மற்றும் இதரக் கட்டிட வேலைகளுக்குத் தேவையான கடன் வசதிகளுக்கு நிதி பெறுதல்.

தகுதி:

விண்ணப்பதாரர் பால் பண்ணை கட்டுவதற்கு தகுந்த நிலத்தை வைத்திருத்தல் வேண்டும்.

தொகை:

வங்கி அங்கீகரித்த நில ஆய்வாளர்கள் மதிப்பிடப்பட்ட கட்டமைப்பு மொத்த தொகையில் 70% தொகை வழங்கப்படும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement