மல்லிகை செடிக்கு இதை மட்டும் ஒரு கிளாஸ் கொடுங்க! பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்!!

Advertisement

மல்லிகை செடிக்கு இதை மட்டும் ஒரு கிளாஸ் கொடுங்க! பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்!! Malligai Poo Sedi Valarpu..!

Malligai Poo Sedi Valarpu – பொதுவாக பலரது வீட்டில் மல்லிகை செடி என்பது இருக்கும்.. இருப்பினும் சிலரது வீட்டில் மல்லிகை செடி இருந்தாலும் அவற்றில் பூக்களோ பூக்காது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் செடி நன்றாக தான் வளர்ந்து நிக்கிறது இருந்தாலும் அவற்றில் பூக்கள் பூக்கவில்லை என்று புலம்புவார்கள். இவ்வாறு புலம்புபவர்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். அதாவது உங்கள் விட்டு மல்லிகை செடியில் எதனால் பூக்கள் பூக்காமல் இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

கடலை புண்ணாக்கு கரைசல்:

10 லிட்டர் கடலை புண்ணாக்கு கரைசல் செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலை புண்ணாக்கு – 200 கிராம்
  • வேப்பம் புண்ணாக்கு – 50 கிராம்
  • தண்ணீர் – 1½ லிட்டர்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் எளிய முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை..!

கடலை புண்ணாக்கு கரைசல் செய்முறை:மல்லிகை செடி

ஒரு வாளியை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 200 கிராம் கடலை புண்ணாக்கு, 50 கிராம் வெப்பம் புண்ணாக்கு மற்றும் 1½ லிட்டர் தண்ணீர் ஊற்றி துணியை போட்டு மூடி நன்றாக கட்டிக்கொள்ளுங்கள் பிறகு இரண்டு நாட்கள் ஊறவைக்கவும்.

இரண்டு நாட்கள் கழித்து அதனை திறந்து ஒரு குச்சியை பயன்படுத்தி நன்றாக கிளறி விடுங்கள். பின் மீண்டு துணியை போட்டு மூடி, கயிறை பயன்படுத்தி கட்டிக்கொள்ளுங்கள்.

பிறகு 5 நாட்கள் ஊறவைக்கவும். 5 நாட்கள் கழித்து அதனுடன் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் வீட்டு மல்லிகை செடிக்கு தேவையான அளவு ஊற்றினாலே போதும், செடி நன்றாக பூக்க ஆரம்பித்துவிடும்.

மல்லிகை பூ செடி பூக்க டிப்ஸ்:

உங்கள் வீட்டில் வைத்திருக்கும் மல்லிகை செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக இருந்தால் கண்டிப்பாக அந்த செடி பூக்காது, அந்த செடிக்கு அப்படி என்ன குறைபாடு என்று கேட்டால். அது இருப்பு சந்தித்து குறைபாடாகும். இதற்கு நாம் என்ன உரம் கொடுக்கலாம் என்றால் வாழைக்காயின் தோல்பகுதியை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை செடியின் வேர் பகுதியில் ஊற்றவும். இவ்வாறு செய்தால் இரும்பு சத்து குறைபாடு சரியாகும்.

செடியில் பச்சை புழுக்கள் தொல்லை அதிகமாக இருந்தால் அதுவும் செடியை பூக்கள் பூக்காமல்  செய்யும். அதற்கு என்ன செய்யலாம் என்றால் வேப்ப எண்ணெய் கரைசலை செடியின் மேல் தெளித்து அந்த புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

உங்கள் வீட்டு மல்லிகை பூ செடியில் பூக்கள் பூத்தும் அவற்றில் மொட்டு புழுக்கள் தாக்கம் இருந்தால் அதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்றால் அந்த மொட்டுகள் அனைத்தையும் பறித்துவிட்டு அதன் பிறகு ஏதாவது ஒரு இயற்கை பூச்சி விரட்டியை செடியில் தெளித்துவிடலாம்.

செடியில் மொட்டுக்கள் கருகி விழுகிறது என்றால் அது போரான் சத்து குறைபாடாகும். அதற்கு எருக்கன் செடி இலையை இடித்து தண்ணீரில் கலந்து செடியின் வேர் பகுதி மற்றும் செடியின் மீது ஊற்றவும், இவ்வாறு செய்தால் பிரச்சனை சரியாகும்.

செடியில் பூக்கள் பூத்துவிட்டது என்றால் அதனுடைய காம்பை கட் செய்துவிட வேண்டும். அதாவது மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது உங்கள் செடியில் காம்பை கட் செய்யவும். இவ்வாறு செய்தால் உடனே அந்த இடத்தில் வேறொரு துளிர்கள் விட ஆரம்பித்துவிடும். பிறகு மேலும் பூக்கள் அதிகம் பூக்க ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கத்திரிக்காய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement